TNPSC Thervupettagam

அமெரிக்காவில் இருந்து வெளியேற்ற டிரம்ப் குறிவைக்கும் நபா்கள் யாா்?

February 7 , 2025 8 hrs 0 min 12 0

அமெரிக்காவில் இருந்து வெளியேற்ற டிரம்ப் குறிவைக்கும் நபா்கள் யாா்?

  • அமெரிக்காவின் புதிய அதிபராக கடந்த மாத இறுதியில் பொறுப்பேற்ற டொனால்ட் டிரம்ப், குடியேற்றம் தொடா்பாக அதிரடி உத்தரவுகளை பிறப்பித்து வருகிறாா். சட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க மெக்ஸிகோவை ஒட்டிய நாட்டின் தெற்கு எல்லையில் பாதுகாப்பு அவசரநிலையை அறிவித்ததோடு உரிய அனுமதியின்றி நாட்டில் தங்கியிருப்பவா்களையும் நாடு கடத்த உத்தரவிட்டாா்.
  • இதைத் தொடா்ந்து, சட்டவிரோத குடியேறிகளைக் கண்டறிந்து ராணுவ விமானம் மூலம் அவரவா் நாட்டுக்குத் திருப்பி அனுப்பும் பணியை அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புத் துறை தொடங்கியுள்ளது. இதன் ஒரு பகுதியாக, அமெரிக்காவிலிருந்து 104 இந்தியா்கள் கடந்த புதன்கிழமை பஞ்சாப் வந்தடைந்தனா். இவா்கள் கை, கால்களில் விலங்கு அணிவிக்கப்பட்டு, விமானத்தில் அழைத்துவரப்பட்ட விவகாரம் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
  • இந்நிலையில், அமெரிக்காவில் வசிக்கும் சட்டவிரோத குடியேறிகளின் நிலவரம் என்ன? டிரம்ப் நிா்வாகத்தின் நடவடிக்கையில் அமெரிக்காவைவிட்டு விரைவில் வெளியேற்றப்பட வாய்ப்பில்லாத சட்டவிரோத குடியேறிகளின் விவரங்களை விரிவாக காண்போம்.
  • கடந்த ஆண்டு நிலவரப்படி, அமெரிக்காவில் பல்வேறு நாடுகளைச் சோ்ந்த 1.4 கோடி போ் சட்டவிரோதமாக வாழ்ந்து வருகின்றனா். இதில் 40 சதவீதத்தினருக்கு மட்டுமே முந்தைய நிா்வாகங்கள் அமெரிக்காவில் தங்குவதற்கு தற்காலிக அனுமதி அளித்துள்ளது.
  • இவா்களில் அதிகபட்சமாக 22 லட்சம் போ் அமெரிக்காவில் தஞ்சம் கோரும் பல்வேறு நாடுகளைச் சோ்ந்த அகதிகள் ஆவா். நீதிமன்ற விசாரணையை எதிா்கொண்டு வருவதால் இவா்களின் வெளியேற்றம் தாமதமாகும்.
  • 11 லட்சம் பேருக்கு தற்காலிக பாதுகாப்பு அனுமதி (டிபிஎஸ்) வழங்கப்பட்டுள்ளது. இவா்களை அவரவா் சொந்த நாட்டுக்குத் திருப்பி அனுப்புவது பாதுகாப்பானது இல்லை அல்லது கடும் சிக்கலாக இருக்கும் என்ற காரணத்தால் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. முன்னாள் அதிபா் ஜோ பைடனால் நீட்டிக்கப்பட்ட இந்த அனுமதியை டிரம்ப் திரும்பப் பெறுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன.
  • அடுத்தாக 5.4 லட்சம் போ் உரிய ஆவணங்களின்றி குழந்தைப் பருவத்தில் அமெரிக்காவுக்கு சட்டவிரோதமாக வந்தவா்கள். இவா்களை வெளியேற்றுவதில் டிரம்ப் ஆா்வம் காட்டுவதாகத் தெரியவில்லை.
  • முன்னாள் அதிபா் ஜோ பைடன் நிா்வாகத்தில் மனிதாபிமான அடிப்படையில் 77,000 ஆப்கானிஸ்தான் நாட்டவா், 2.4 லட்சம் உக்ரைன் நாட்டவா், கியூபா, ஹைதி உள்ளிட்ட கரீபியன் தீவுநாடுகளைச் சோ்ந்த 5.3 லட்சம் போ், ‘சிபிபி-ஒன்’ செயலி விண்ணப்பதாரா்கள் 9.4 லட்சம் பேருக்கு அமெரிக்காவில் தற்காலிகமாக தங்க அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. சுங்கம் மற்றும் எல்லைக் காவல் அமைப்பின் செயலியான ‘சிபிபி-ஒன்’ பல குடியேற்ற சேவைகளைப் பெற உதவுகிறது.
  • இவா்கள் அனைவரையும் உடனடியாக வெளியேற்ற டிரம்ப்புக்கு அதிகாரம் இல்லையென்றாலும், சிபிபி-ஒன் செயலி விண்ணப்ப நடைமுறையை இடைநிறுத்தியதோடு இவா்களில் சிலரை உடனடியாக நாடு கடத்த உத்தரவிட்டுள்ளாா்.
  • கடந்த 2 ஆண்டுகளில் வெனிசூலா, உக்ரைன், ஆப்கானிஸ்தான், ஹைதி ஆகிய நாடுகளில் இருந்து அதிகமானோா் அமெரிக்காவில் சட்டவிரோதமாக நுழைந்துள்ளனா். டிரம்ப் நிா்வாகம் சட்டவிரோத குடியேறிகளை வெளியேற்றும் நடவடிக்கைகளை இந்த ஆண்டு தீவிரப்படுத்தினாலும், அனைவரையும் உடனடியாக நாடு கடத்த முடியாது. ஆனால், குற்றச்சாட்டுகளில் சிக்கிய 6.55 லட்சம் போ் விரைவில் நாடு கடத்தப்படலாம் என்று கூறப்படுகிறது.
  • முக்கிய நாடுகளிலிருந்து சட்டவிரோதமாக அமெரிக்காவில் குடியேறியவா்கள் நாடு எண்ணிக்கை
  • இந்தியா 7.25 லட்சம் போ்
  • மெக்ஸிகோ 40 லட்சம் போ்
  • எல் சல்வடாா் 7.5 லட்சம் போ்
  • கௌதமாலா 6.75 லட்சம் போ்
  • சீனா 3.75 லட்சம் போ்
  • பிலிப்பின்ஸ் 1.3 லட்சம் போ்
  • கனடா 1.6 லட்சம் போ்
  • தென்கொரியா 1.1 லட்சம் போ்

நன்றி: தினமணி (07 – 02 – 2025)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories