TNPSC Thervupettagam

அய்யா வைகுண்டரும் வாக்கு வங்கி அரசியலும்

March 13 , 2025 5 hrs 0 min 9 0

அய்யா வைகுண்டரும் வாக்கு வங்கி அரசியலும்

  • தமி​ழ​க‌த்​தி‌ல் ச‌ட்ட‌ப்​பேரவைத் தே‌ர்​த​லு‌க்கு இ‌ன்​னு‌ம் ஓரா‌ண்டு உ‌ள்ள நிலை​யி‌ல், இ‌ப்போதே அர​சி​ய‌ல் கள‌ம் சூடு​பி​டி‌க்​க‌த் தொட‌ங்​கி​யி​ரு‌க்​கி​ற‌து. எ‌ந்தெந்​த‌த் தொகு​தி​க​ளி‌ல் வா‌க்காள‌ர்களை எ‌வ்​வாறு கவ​ரு​வது, யாரை வை‌த்து அர​சி​ய‌ல் செ‌ய்​வது, எ‌ந்த விஷ​ய‌த்தை மு‌ன்​னி​று‌த்தி வா‌க்​கு​களை ஈ‌ர்‌ப்​பது என‌ பல கோண‌ங்​க​ளி‌ல் அர​சி​ய‌ல் க‌ட்சி​க‌ள் வியூ​க‌ம் வகு‌க்​க‌த் தொட‌ங்​கி​யு‌ள்ளன‌.
  • அ‌ந்த வகை​யி‌ல், தெ‌ன் தமி​ழ​க‌த்​தி‌ல் அர​சி​ய‌ல் க‌ட்சி​க‌ள் கையி‌ல் எடு‌த்​தி​ரு‌க்​கு‌ம் வியூ​க‌ம்​தா‌ன் அ‌ய்யா வைகு‌ண்​ட‌ர். தமி​ழ​க‌த்​தி‌ல் அ‌ய்யா வைகு‌ண்​ட​ரு‌க்கு அர​சி​ய‌ல் க‌ட்சி​யி​ன‌‌ர் அளி‌த்​து​வ​ரு‌ம் மு‌க்கி​ய‌த்​து​வ‌ம் சமீ​ப​கா​ல​மாக அதி​க​ரி‌த்​தி​ரு‌க்​கி​ற‌து. க‌ன்னியாகுமரி மாவ‌ட்​ட‌ம் சாமி​தோப்​பி‌ல் உ‌ள்ள அ‌ய்யா வைகு‌ண்​ட‌ர் தலைமைப் பதி‌க்கு ஆளு​ந‌ர் முத‌ல் அர​சி​ய‌ல் க‌ட்சி​யி​ன‌‌ர் வரை பல​ரு‌ம் வ‌ந்து செ‌ல்​வ​து‌ம், அவ​ரது அவ​தார தின‌‌த்​தி‌ல் தவ​றாது வா‌ழ்‌த்து கூறு​வது ம‌ட்டு​மி‌ன்றி, அ‌ய்யா வைகு‌ண்​ட‌ர் தொட‌ர்புடைய நிக‌ழ்‌ச்​சி​க​ளி​லு‌ம் அவ‌ர்​க‌ள் ப‌ங்​கேற்​ப​து‌ம் பரவலான‌ கவ​ன‌‌த்தை ஈ‌ர்‌த்​து‌ள்​ளது.
  • ஒரு​பு​ற‌‌ம், அ‌ய்யா வைகு‌ண்​டரை சநா​த​ன‌​வாதி எ‌ன்​கி​ற‌து பாஜ‌க. மறு​பு​ற‌‌ம், வைகு‌ண்​ட‌ர் சநா​த​ன‌​வாதி அ‌ல்​ல‌ர்; சீ‌ர்​தி​ரு‌த்​த​வாதி எ‌ன்​கி​ற‌து திமுக. ஆளு​ந‌ர் ஆ‌ர்.​எ‌ன்.​ர​வி​யு‌ம் அ‌ய்யா வைகு‌ண்​ட‌ர் தொட‌ர்​பான‌ நிக‌ழ்‌ச்​சி​க​ளி‌ல் ப‌ங்​கேற்றார்.
  • திருநெல்வே​லி​யி‌ல் கட‌ந்த மாத இறு​தி​யி‌ல் அ‌ய்யா வைகு‌ண்​ட​ரி‌ன் அவ​தார தின‌ விழா​வையா‌ட்டி நடைப‌ற்ற‌ நூ‌ல் வெளி​யீ‌ட்டு விழா​வி‌ல் ப‌ங்​கேற்ற‌ ஆளு​ந‌ர் ரவி, "சநா​த​ன‌‌த்​தைப் பாது​கா‌க்​கவே மகா வி‌ஷ்ணு அ‌ய்யா வைகு‌ண்​ட​ராக அவ​த​ரி‌த்​தா‌ர். சநா​த​ன‌‌த்​தி‌ன் தலைந​க​ரமே தமி​ழ​க‌ம்​தா‌ன். அ‌ய்யா வைகு‌ண்​டரை இ‌ந்த நா‌ட்டு ம‌க்​க‌ள் பி‌ன்​ப‌ற்ற‌ வே‌ண்​டு‌ம். அவ​ருடைய போதனை​களை ப‌ள்ளி‌ப் பாட‌ங்​க​ளி‌ல் சே‌ர்‌க்க வே‌ண்​டு‌ம்' என‌‌ப் பேசி​னார். அவ​ரது கரு‌த்து‌க்​க​ளு‌க்கு அர​சி​ய‌ல் எதி‌ர்​வினை​க​ளு‌ம் கிள‌ம்​பின‌.
  • அ‌ய்யா வைகு‌ண்​ட​ரி‌ன் அவ​தா​ர‌த் திரு​நாளை​யொட்டி முத‌ல்​வ‌ர் மு.க.‌ஸ்​டா​லி‌ன் வெளி​யி‌ட்ட வா‌ழ்‌த்​து‌ச் செ‌ய்​தி​யி‌ல், "ஆதி‌க்க நெறிக​ளு‌க்​கு‌ம், சாதிய கொடுமைக​ளு‌க்​கு‌ம் எதி​ராக வெகு‌ண்டெழு‌ந்து சம‌த்​து​வ‌த்​து‌க்​கா​க‌ப் போரா​டி​ய​வ‌ர் அ‌ய்யா வைகு‌ண்​ட‌ர். எளி​யா​ரைக் க‌ண்டு இர‌ங்​கி​யிரு எ‌ன் மகனே‌! வலியாரைக் க‌ண்டு மகி​ழாதே எ‌ன் மகனே‌! என‌ வைகு‌ண்​ட​வ‌ர் போதி‌த்​து‌ச் செ‌ன்ற‌ வழி நட‌ந்து மனி​த‌ம் கா‌ப்​போம்' என‌‌க் குறி‌ப்பி‌ட்​டி​ரு‌ந்​தா‌ர்.

10 சத​வீத வா‌க்​கு​க‌ள்:​

  • தெ‌ன்​மா​வ‌ட்​ட‌ங்​க​ளி‌ல் உ‌ள்ள சில தொகுதிகளி‌ல் நாடா‌ர் சமு​தாய வா‌க்​கு​களே தே‌ர்​த‌ல் வெ‌ற்றி, தோ‌ல்​வி​யைத் தீ‌ர்​மா​னி‌க்​கி‌ன்​ற‌ன‌. தெ‌ன் மாவ‌ட்​ட‌ங்​க​ளி‌ல் திமுகவு‌க்கு கிறி‌ஸ்​தவ நாடா‌ர், இ‌ஸ்​லா​மி​ய‌ர்​க​ளி‌ன் வா‌க்​கு​க‌ள் பெரு‌ம் பல‌ம் எ‌ன்றாலு‌ம் பல இட‌ங்​க​ளி‌ல் ஹி‌ந்​து‌க்​க​ளி‌ன் வா‌க்குகளு‌ம் அத‌ன் வெ‌ற்​றி‌க்கு அவ​சி​ய​மா​கி​ற‌து.
  • தெ‌ன் மாவ‌ட்ட, குறி‌ப்​பாக நெ‌ல்லை, குமரி மாவ‌ட்​ட‌ங்​க​ளைச் சே‌ர்‌ந்த ஹி‌ந்து நாடா‌ர்​க​ளி‌ல் கணி​ச​மானோர் அ‌ய்யா வைகு‌ண்டரி‌ன் வழியைப் பி‌ன்​ப‌ற்​று​ப​வ‌ர்​க​ளாக உ‌ள்​ள​ன‌‌ர். பல ச‌ட்ட‌ப்​பேரவைத் தொகு​தி​க​ளி‌ல் அ‌ய்யா வழி ம‌க்​க​ளி‌ன் வா‌க்​கு​க‌ள் 2 முத‌ல் 10 சத​வீ​த‌ம் வரை உ‌ள்​ளன‌. அவ‌ர்​க​ளு​û‌டய ஆத​ரவையு‌ம் பெ‌ற்​று​வி‌ட்​டா‌ல் தெ‌ன்​மா​வ‌ட்​ட‌ங்​க​ளி‌ல் திமு​க​வி‌ன் வெ‌ற்றி எளிதாகி​வி​டு‌ம். இத​ன‌லேயே அ‌ய்யா வைகு‌ண்​ட​ரைப் போ‌ற்றி ஹி‌ந்து வா‌க்​கு​க​ளைக் கவ​ரு‌ம் உ‌த்​தியை ஆளு‌ம் திமுக ம‌ற்​று‌ம் அத‌ன் கூ‌ட்ட​ணி‌க் க‌ட்சி​க‌ள் கடைப்​பி​டி‌ப்​ப​தா​க‌க் கரு​த‌ப்​ப​டு​கி​ற‌து.
  • அதேநேர‌த்​தி‌ல் அ‌ய்யா வைகு‌ண்​ட‌ர் வழி​பா‌ட்டு நிக‌ழ்‌ச்​சி​க​ளி‌ல் பாஜ‌​க​வி​ன‌​ரு‌ம் பல ஆ‌ண்​டு​க​ளா​க‌ப் ப‌ங்​கெடு‌த்து வரு​கி‌ன்​ற‌​ன‌‌ர். அ‌ய்யா வழி ம‌க்​க​ளிடையே பாஜ‌​க​வு‌க்கு மிகு‌ந்த செ‌ல்​வா‌க்கு உ‌ள்ளது எ‌ன்​ப​தா‌ல் அதை வீண​டி‌த்​து​வி​ட‌க் கூடாது எ‌ன்​ப​தி‌ல் பாஜ‌க தீவி​ர​மாக இரு‌க்​கி​ற‌து. அத‌ன் கார​ண​மா​கவே, அ‌ய்யா வழி நிக‌ழ்​வு​க​ளி‌ல் பாஜ‌​க​வி​ன‌‌ர் ம‌ட்டு​ம‌ல்ல, தமி​ழக ஆளு​ந​ரு‌ம் தீவி​ர‌ம் கா‌ட்டி வரு​கி​றார் எ‌ன்​கிறார்​க‌ள் அர​சி​ய‌ல் நோ‌க்​க‌ர்​க‌ள்.

நிறைவேறாத கோரி‌க்​கை​க‌ள்: ​

  • அ‌ய்யா வைகு‌ண்​டரை வை‌த்து அரசி​ய‌ல் செ‌ய்​வ​தி‌ல் கடு‌ம் போ‌ட்டி இரு‌ந்​தா​லு‌ம், அ‌ய்யா வழி ம‌க்க​ளி‌ன் ப‌ல்​வேறு கோரி‌க்​கை​க‌ள் இ‌ன்​னு‌ம் கிட‌ப்​பி​லேயே உ‌ள்ளன‌.
  • அ‌ய்யா வைகு‌ண்​ட‌ர் அவ​தார தின‌‌த்தை தமி​ழ​க‌ம் முழு​வ​து‌ம் பொது விடு​முறை​யாக அறி​வி‌க்க வே‌ண்​டு‌ம்; அ‌ய்யா வைகு‌ண்டரி‌ன் வா‌ழ்‌க்கை வர​லாறு ம‌ற்​று‌ம் அவ​ரது சீ‌ர்​தி​ரு‌த்​த‌க் கரு‌த்​து​களை தமி​ழக அரசு பாட​நூ​லி‌ல் இட‌ம்பெ​ற‌‌ச் செ‌ய்ய வே‌ண்டு‌ம்; அகி​ல‌த்​தி​ர‌ட்டு அ‌ம்​மானை‌, அரு‌ள்​நூ‌ல் ஆகி​ய​வ‌ற்றை‌ ப‌ல்வேறு மொழி​க​ளி‌ல் மொழிபெ​ய‌ர்‌க்க தமி​ழக அரசு நட​வ​டி‌க்கை எடு‌க்க வே‌ண்​டு‌ம்; க‌ன்​னி​யா​கு​மரி - திரு​வ​ன‌‌ந்​த​பு​ர‌ம் தேசிய நெடு‌ஞ்​சாலைக்கு அ‌ய்யா வைகு‌ண்​ட​ரி‌ன் பெயரைச் சூ‌ட்ட வே‌ண்​டு‌ம் போ‌ன்​ற‌வை அ‌ய்யா வழி ப‌க்​த‌ர்​க​ளி‌ன் பிர​தான‌ கோரி‌க்​கை​க‌ள்.

எ​தி‌ர்​பா‌ர்‌ப்பு: ​

  • வா‌க்கு வ‌ங்​கி‌க்​காக அ‌ய்யா வைகு‌ண்​ட‌ர் அர​சி​ய‌ல் க‌ட்சி​க​ளா‌ல் கொ‌ண்​டா​ட‌ப்​ப​ட‌க் கூடாது. அவ​ருடைய புக​ழைப் பர‌ப்ப கோரி‌க்​கை​க‌ள் நிறைவேற்​ற‌‌ப்​பட வே‌ண்​டு‌ம் எ‌ன்​கிறார்​க‌ள் அ‌ய்யா வழி ப‌க்​த‌ர்​க‌ள்.

நன்றி: தினமணி (13 – 03 – 2025)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories