TNPSC Thervupettagam

இமயமலையும் ஆன்மிகமும்

January 30 , 2025 4 hrs 0 min 13 0

இமயமலையும் ஆன்மிகமும்

  • உலகில் பல மலைகள் காணப்பட்டாலும், இமயமலை போல் எந்த மலையும் ஆன்மிகத்துடன் இணைத்து பேசப்படுவதில்லை. இந்து சமயத்தினர் மட்டுமல்லாது, பௌத்தர்களும் இமயமலையை வணங்கி வருகின்றனர்.
  • முனிவர்கள், யோகிகள், தத்துவவாதிகள் என பலர் இமயமலையில் வசித்துள்ளனர். நம் கண்களுக்குப் புலப்படாத பல மகான்களும் அங்கு வாழ்ந்து கொண்டிருப்பதாக கூறப்படுகிறது, சிவபெருமான் வாசம் செய்யும் இடமாக இமயமலை கூறப்பட்டாலும், மகாவிஷ்ணுவுக்கு உகந்த இடமாகவும் இம்மலை போற்றப்படுகிறது.
  • உத்தராகண்ட் மாநிலத்தில் சாமோலி மாவட்டத்தில் உள்ள ஒரு நகர பஞ்சாயத்து பத்ரிநாத். சார்தாம் யாத்திரையில் நான்கு தலங்களில் ஒன்று. ஆதி சங்கரர் அலக்நந்தா நதிக்கரையில் சாளக்கிராம பத்ரி நாராயணன் சிலையை கண்டுபிடித்து முதலில் அதனை தப்த குண்டு வெந்நீர் ஊற்றுக்கு அருகே பிரதிஷ்டை செய்தார். 16-ம் நூற்றாண்டில் கார்வால் மன்னர் மூர்த்தி என்பவர் தற்போது உள்ள இடத்தில் பிரதிஷ்டை செய்தார். மகாவிஷ்ணு இங்கு பத்ரி நாராயணர் என்று அழைக்கப்படுகிறார்.
  • 4,600 மீட்டர் உயரத்தில் சீனா, இந்தியா, நேபாள நாடுகளின் முச்சந்தியில் உள்ளது கைலாஷ் மானசரோவர். சிந்து, சட்லஜ், பிரம்மபுத்ராவின் நதிகளின் ஆதாரம் இதன் அருகில் தான் உள்ளது. மானசரோவர் கைலாஷ் மலைக்கு அருகில் உள்ள உயரமான நன்னீர் ஏரி ஆகும். இதன் ஆழம் 100 மீட்டர். குளிர் காலத்தில் உறைந்துவிடும். பலர் இங்கு புனித யாத்திரை வருகின்றனர். ராமாயணம், மகாபாரதத்தில் மானசரோவர் பற்றிய குறிப்புகள் உள்ளன.
  • உத்தரகாண்ட் மாநிலத்தின் ருத்ரபிரயாகை அருகில் மந்தாகினி நதி ஓடும் இடத்தில் உள்ளது கேதார்நாத். 12 ஜோதிர் லிங்கங்களில் ஒன்று. உத்தராகண்ட் மாநிலம் சாமோலி மாவட்டத்தில் பத்ரிநாத் அருகில் ஜோஷிமத் (ஜோதிர்மத்) உள்ளது. ஆதி சங்கரரால் நிறுவப்பட்ட 4 மடங்களில் ஒன்று இங்கு உள்ளது. இங்குள்ள நரசிம்மர் ஆதி சங்கரரால் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளார்.
  • ஆதி சங்கரர் தவம் செய்ததாக கூறப்படும் குகை இன்றும் உள்ளது. 108 திவ்ய தேசங்களில். ஒன்று. ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் கத்ராவிலிருந்து 12 கிமீ தூரம் மலை ஏறினால் வைஷ்ணோ தேவியை (மாதா ராணி) தரிசிக்கலாம். உயரம். 1,584.96 மீட்டர் மலை ஏற அனைத்து வகையான வசதிகளும் உள்ளன. ராமபிரான் கூறியதால் தென்னிந்தியாவில் இருந்து இந்த குகை கோயிலுக்கு வந்து தேவி அமர்ந்துள்ளார். கல்கி அவதாரம் எடுக்கவுள்ள விஷ்ணுவுக்காக திரிகூட மலையில் கல்லாக காத்திருக்கிறார்.
  • மிக உயரமான இடத்தில் அமைந்துள்ளது துங்கநாத் கோயில். துங்கநாத் என்றால் சிகரங்களின் இறைவன் என பொருள். துங்கநாத் மலைகள் மந்தாகினி நதி, அலக்நந்தா பள்ளத்தாக்குகளை உருவாக்குகின்றன. ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் லிடர் பள்ளத்தாக்கில் ஒரு குறுகிய பாதையில் அமர்நாத் கோயில் அமைந்துள்ளது. அமர்நாத் என்றால்சிவன். அமர்நாத் ஆசிரமத்தின் உட்பகுதியில் சிவலிங்கம் பனிக்கட்டி லிங்கமாக காட்சிதருகிறது. சந்திரனின் வளர் / தேய் காலங்களுக்கு ஏற்ப மாறுவதாக கூறப்படுகிறது.

நன்றி: இந்து தமிழ் திசை (30 – 01 – 2025)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories