TNPSC Thervupettagam

எரிசக்தி துறையில் ஏன் முதலீடு செய்ய வேண்டும்?

July 15 , 2024 2 hrs 0 min 16 0
  • நவீன வாழ்க்கை முறையில் எரி பொருள் பயன்பாடு என்பது இன்றியமையாததாக மாறிவிட்டது. ஃபிரிட்ஜ், மைக்ரோ ஓவன், மடிக்கணினி, ஏர் கண்டிஷனர், வாஷிங் மிஷின், இன்டக் ஷன் ஸ்டவ்,கார் மற்றும் இருசக்கர வாகனம் போன்ற நவீன சாதனங்களை மின்சாரம் இன்றி நாம் பயன்படுத்த முடியாது. இந்த சாதனங்கள் இல்லாத வீட்டை நாம் இப்போது கற்பனை செய்துகூட பார்க்க முடியாது.
  • இதுபோன்ற சாதனங்களின் பயன்பாடு மக்களிடையே தற்போது வெகுவாக அதிகரித்து வருவது எரிபொருளுக்கான தேவையை பன்மடங்கு அதிகரிக்கச் செய்துள்ளது. எரிசக்தி என்பது வீடுகளுக்கு மட்டுமின்றி பல்வேறு முக்கிய தொழில் பிரிவுகளின் வளர்ச்சிக்கும் மிகப்பெரிய உந்துசக்தியாக அமைந்துள்ளது.
  • குறிப்பாக, சுகாதாரம், வீட்டுக்கு தேவையான நுகர்வு பொருட்கள், ஜவுளி, ரசாயனம், நிதிச் சேவை, எண்ணெய்-எரிவாயு போன்ற தொழில் துறைகள் எரிபொருள் ஆற்றலை பெரிதும் நம்பியுள்ளன. இணைய சேவைகள், தரவு பரிமாற்றம், தொலைத் தொடர்பு, ஒளிபரப்பு சேவை போன்ற அன்றாட செயல்பாடுகளுக்கும் மின்சாரம் மிகவும் அடிப்படையான தேவையாக உள்ளது.
  • எரிசக்தி உற்பத்திக்கான 3 முக்கிய வழிகள் எரிசக்தி துறை மூன்று முக்கிய கூறுகளை உள்ளடக்கியுள்ளது. அவை, எண்ணெய்-எரிவாயு, மின்சாரம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி. எண்ணெய் மற்றும் எரிவாயு என்பது அப்ஸ்ட்ரீம், டவுன்ஸ்ட்ரீம், மிட்ஸ்ட்ரீம் பிரிவுகளில் பல முக்கிய நிறுவனங்களை உள்ளடக்கியுள்ளது.
  • அப்ஸ்ட்ரீம் கச்சா எண்ணெய் உற்பத்தியையும், டவுன்ஸ்ட்ரீம் என்பது சுத்திகரிப்பு சந்தையையும், மிட்ஸ்டீரீம் என்பது நுகர்வோருக்கான பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருள் போக்குவரத்தையும் குறிக்கிறது. இம்மூன்று பிரிவுகளில் பல கோடி டாலர் மதிப்பிலான நிறுவனங்கள் இந்தியாவில் செயல்பட்டு வருகின்றன.
  • மின்சார மதிப்பு சங்கிலி என்பது மின் உற்பத்தி, பரிமாற்றம் மற்றும் விநியோகத்தில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களை குறிக்கிறது. நீர், அணு, அனல், எரிவாயு முறைகளைப் பின்பற்றி மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. பரிமாற்றம் என்பது மின் ஆற்றலை துணை மின் நிலையங்களுக்கு நகர்த்துகிறது. விநியோகம் என்பது நுகர்வோருக்கு மின்சாரம் சென்றடைவதை உறுதிப்படுத்துகிறது. மூன்றாவதாக புதுப்பிக்கத்தக்க எரிசக்தி. இது, சூரியன், காற்று, கடல் அலை போன்றவற்றிலிருந்து பெறப்படுகிறது.
  • இதற்கு பசுமை ஆற்றல் என்ற பெயரும் உண்டு. சூரிய ஒளி மின் உற்பத்தியில் பொறியியல்- கொள்முதல்-கட்டுமானம் (இபிசி), சேவை, துணை உபகரண தொழில் நிறுவனங்கள் ஒருங்கிணைந்துள்ளன. அதேபோன்று, காற்றாலை மின் உற்பத்தியில், கோபுரங்கள், பிளேடு, நாசெல்ஸ் ஆகியவை அடங்கும். கியர் பாக்ஸ், தண்டுகள், ஜெனரேட்டர், பிரேக் தொழில் நிறுவனங்களையும் இவை உள்ளடக்கியுள்ளன. இபிசி, செயல்பாடு, பராமரிப்பு, ஆட்டோமேஷன் தொழில்நுட்பங்கள் போன்ற முக்கிய சேவைகளை எரிசக்திக்கான துணை நிறுவனங்கள் வழங்கி வருகின்றன.

முதலீட்டு வாய்ப்பு:

  • இந்தியாவின் வளர்ச்சி கட்டமைப்பில் எரிசக்தி துறையானது முக்கிய பங்கு வகிக்கிறது. நாட்டின் வலுவான கட்டமைப்பை உருவாக்கல், பொருளாதார இலக்குகளை அடைவதில் எரிசக்தி மிக முக்கிய பங்கு வகிக்கிறது. காலநிலை மாற்றம், உற்பத்தித் திறன் விரிவாக்கம், தனிநபர் வருவாய் உயர்வு உள்ளிட்டவை காரணமாக அடுத்து வரும் தசாப்தத்தில் எரிசக்திக்கான தேவை பல மடங்கு உயரும் என கணிக்கப்பட்டுள்ளது. இது, முதலீட்டாளர்களுக்கு நீண்ட கால முதலீட்டு வாய்ப்புக்கான கதவுகளை திறந்துள்ளது.

புதிய மியூச்சுவல் பண்ட் திட்டம்:

  • எரிசக்தி துறையில் ஆர்வமுள்ள முதலீட்டாளர்களுக்காகவே ஐசிஐசிஐ புருடென்ஷியல் மியூச்சுவல் பண்ட் தற்போது நியூ பண்ட் ஆபர் (என்எப்ஓ) திட்டத்தை பிரத்யேகமான முறையில் அறிமுகப்படுத்தி உள்ளது. நாளை (ஜூலை 16-ம் தேதி) வரை அமலில் இருக்கும் இந்த திட்டம் எரிசக்தி துறைக்கான முதலீட்டில் கூடுதல் கவனம் செலுத்துகிறது. இதில், எண்ணெய்-எரிவாயு, மின்சாரம், பசுமை எரிசக்தி தொடர்பான திட்டங்களும் அடங்கும்.

நன்றி: இந்து தமிழ் திசை (15 – 07 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories