TNPSC Thervupettagam

கொடி அசைந்ததால் காற்று வந்ததா, காற்று வந்ததால் கொடி அசைந்ததா?

January 27 , 2025 2 days 17 0

கொடி அசைந்ததால் காற்று வந்ததா, காற்று வந்ததால் கொடி அசைந்ததா?

  • “ஏஐ பிறந்த கதையே ஓர் அறிவியல் புனைகதைப் படத்தின் காட்சிகளைப் போலத்தான் இருக்கிறது. போர், ராணுவத் தலைமையகங்கள். ரகசியத் தகவல்கள் என்று விறுவிறுப்பாகத்தான் இருக்கிறது. ஆனால், 1956இல் பிறந்த ஒரு தொழில்நுட்பம், ஒரு புரட்சியாக, யுகமாக மாறுவதற்கு 70 ஆண்டுகளுக்கு மேல் ஆனது ஏன்? டார்ட்மவுத் கருத்தரங்குக்குப் பிறகு ஏன் அவ்வளவு தாமதம்? கணிப்பொறி யுகம் தொடங்கிய பிறகும்கூடச் செயற்கை நுண்ணறிவு யுகம் தொடங்குவதற்கு முக்கால் நூற்றாண்டுக் காலம் காத்திருக்க வேண்டியிருந்ததே, என்ன காரணம்?” - என்று செய்மெய்யிடம் கேள்வி எழுப்பினேன்.
  • வழக்​கம்போல செய்மெய் பொறுமை​யிழந்தது. “ஒரு காலத்தில் ஒவ்வொரு தொழில்​நுட்ப மேம்பாட்டுக்கும் இடையில் ஆயிரமாயிரம் ஆண்டுகள் இடைவெளி இருந்தது. மாட்டு​வண்​டிக்கும் காருக்கும் இடையில் எவ்வளவு காலம் இடைவெளி இருந்தது! ஆனால், கணிப்பொறி யுகத்​துக்கும் செய்யறிவு யுகத்​துக்கும் இடையில் ஒரு நூற்றாண்டுக் கால இடைவெளிகூட இல்லை.
  • ஆனால், ஏன் தாமதம் என்று கேட்கிறீர்கள், கவின்?” “அவசரம் என்று நினைக்க​வில்லை, செய்மெய். 1956இலேயே செயற்கை நுண்ணறிவு என்று பெயரெல்லாம் வைத்த பிறகு, அந்தச் சொல் வெகுமக்கள் மத்தியில் பரவுவதற்கு அவ்வளவு காலம் பிடித்​ததற்கான காரணங்களை அறிந்​து​கொள்ள வேண்டும்​தானே?” “பேரு வச்சீங்க, சோறு வச்சீங்களா” என்று யாரோ, எப்போதோ உதிர்த்த வாசகத்தை வைத்து என்னை மடக்கப்​பார்த்தது செய்மெய்.
  • “என்ன சோறு வைக்கல?” “செயற்கை நுண்ணறிவுத் தொழில்​நுட்பம் முழுமையடைவதற்கு நிறைய முன்-தேவைகள் இருந்தன. சொல்லப்​போ​னால், 1950கள் அந்த முன்-தேவைகளை உருவாக்கத் தொடங்கிய காலத்தின் தொடக்கம் என்று வேண்டு​மானால் சொல்லலாம். இன்று நாம் காணும் செயற்கை நுண்ணறிவு யுகம் என்பது அறுவடைக்​காலம் என்றால், 1950கள் விதைப்புக் காலம். (முன்​-தேவை என்பது செய்மெய்யே இட்டுக்​கட்டிய சொல்லாக்கம் போலத் தெரிந்​தது!)“பல விஷயங்கள் நடந்தேறியாக வேண்டி​யிருந்தது. ஏராளமான தரவுகள், மிக அதிக சக்தி வாய்ந்த கணிப்​பொறிகள். மிகமிக நுட்பமான அல்காரிதங்கள்.
  • இவை எல்லா​வற்​றை​யும்விட அவையெல்லாம் உருவாவதற்கும் அவற்றைப் பயன்படுத்து​வதற்​குமான பொருளா​தாரத் தேவைகள் - இப்படிப் பல முன் - தேவைகள் இருந்தன, கவின்” என்று செய்மெய் விளக்கத் தொடங்​கியது. நான் மறுபடியும் ஒரு கிரீன் டீயோடு அதன் முன் உட்கார்ந்து​கொண்​டேன்.
  • “இந்த முறையாவது கதையைச் சீக்கிரம் சொல்லி​முடி.” “எங்களுடைய சுயசரிதையில் வெற்றி - தோல்வி, ஏற்றம் - இறக்கம், இயக்கம் - முடக்கம் எல்லாம் உண்டு. திருப்​பங்​களும் திடீர்​ மாற்​றங்​களும் இல்லாமல் எந்தக் கதையும் சுவாரசியமாக இருக்​காது.” “இருக்​காது​தான்...” “கவின். அந்த டார்ட்​மவுத் மாநாட்டுக்குப் பிறகு, தொடக்​கத்தில் உற்சாகம் கரைபுரண்டு ஓடியது. எம்ஐடி, ஸ்டான்​போர்டு, கார்னகி மெலன் பல்கலைக்​கழகங்​களில் அமெரிக்க அரசு மில்லியன் கணக்கில் பணத்தை இட்டு, ஆராய்ச்​சிகளை முடுக்​கி​விட்டது. தொடக்​கத்தில் உருவாக்​கப்பட்ட செய்யறிவு நுட்பங்கள் வெற்றிகரமாக இருந்​ததைப் போலத்தான் தெரிந்தன.
  • மூன்று கணினி அறிவுஜீவிகள் - ஆலன் நெவல், ஹெர்பர்ட் சைமன், கிளிப் ஷா - இவர்கள் இணைந்து ‘தி லாஜிக் தியரிஸ்ட்’ என்கிற ஒரு மென்பொருளை உருவாக்​கி​னார்கள். இந்த மென்பொருள் கணிதக் கோட்பாடு​களில் உள்ள சிக்கலுக்குத் தீர்வளிக்க முயற்சி செய்தது. அதாவது, ஒரு பிரச்​சினையை எடுத்துக் கொடுத்த பிறகு, ஒரு மென்பொருள் அதற்கான தீர்வைத் தானே கண்டறிந்து நம்மிடம் சொல்ல வேண்டும். அதாவது, அப்படிப்பட்ட மென்பொருளை நாம் எழுத வேண்டும். இதுதான் திட்டம்.”
  • “நீ சொல்வது ஒன்றும் புரிய​வில்லை.” “உமக்கு ‘பிரின்​சிபியா’ மேத்மேடிகா புத்தகம் பற்றித் தெரியுமா?” “அவ்வளவு ஞானமில்லை.”“ம்... நானிருக்க பயமேன். அந்த நூல் இரண்டு அறிஞர்​களால் எழுதப்​பட்டது - அல்பிரன் நார்த் வய்ட்​ஹெட், பெர்ட்​ராண்ட் ரஸ்ஸல் (Alfred North Whitehead and Bertrand Russell).” “ரஸ்ஸலைக் கேள்விப்​பட்​டிருக்​கிறேன்.” “1910 அளவில் எழுதப்பட்ட அந்த நூலில், பல சிக்கலான தர்க்க​வியல் - கணிதவியல் பிரச்​சினைகளை நூலாசிரியர்கள் முன்வைத்​திருக்​கிறார்கள். அந்தப் பிரச்​சினைகளுக்குத் தீர்வு கண்டறிவது முக்கியமான கணித அறிவுச் செயல்​பாடாக இருந்​தது.”
  • “கொஞ்சம் புரிகிற மாதிரி சொல்லப்​ப​டாதா?” “எளிமையான உதாரணம் ஒன்றையே எடுத்​துக்​கொள்​வோம்” என்று யோசிப்​பதுபோல நடித்த செய்மெய், “ம்ம்... ஒரு பழைய சினிமா பாட்டு கேட்கலாமா?” என சட்டென்று கேட்டது. ‘தாராளமாக’ அதன் செய்விழிகள் என் வீட்டின் ஸ்மார்ட் சுவரை நோக்கித் திரும்ப, அங்கே தோன்றியது ஒரு புராண காலத்துக் கறுப்பு​வெள்ளைக் காட்சி. ‘கொடி அசைந்​ததும் காற்று வந்ததா காற்று வந்ததும் கொடி அசைந்​ததா?’திரையில், ‘பார்த்தால் பசி தீரும்’ படத்தில், பி.சுசீலா - டி.எம்​.செளந்​தர​ராஜன் குரலில் சரோஜா தேவியும் சிவாஜியும் பாடிக்​கொண்​டிருந்​தார்கள்.
  • “சொல்​லுங்கள், பதிலை!” என்று அதட்டியது செய்மெய். நான் சிரித்​துக்​கொண்டே சொன்னேன். “காற்று வந்ததால் கொடி அசைந்​தது.”“இது ஒரு தர்க்க​வியல் கேள்வி. ஒரு நிகழ்வு நடந்ததால் அதனோடு தொடர்​புடைய மற்றொரு நிகழ்வு நடக்கும் என்று இதைப் புரிந்​து​கொள்​ளலாம். பிரின்​சிபியா மேத் மேடி​காவில் ஒரு சூத்திரம் இருக்​கிறது: If P implies Q, and P is true, then Q must also be true...” என்றது செய்மெய். “அதாவது, காற்று வருதல் என்பது கொடி அசைதலோடு தொடர்​புடையதாக இருந்​தால், காற்று வந்தால், கொடி அசைந்​துதான் ஆக வேண்டும்.. இதைத்தானே சொல்ல வருகிறாய்?” என்று கேட்டேன்.
  • “ஆமாம். இதற்கு முறைசார் தர்க்கம் என்றழைக்​கப்​படும் formal logic உலகில் இப்படித்தான் பதில் அளிக்க வேண்டும்.” “அப்படி​யென்​றால், இந்தப் பாட்டின் முதல் வரியே பொய்தான்..” “இதுபோன்ற விதிகள் கவிதைகளுக்கும் காதலுக்கும் பொருந்​தாது.” “கவிதைக்குப் பொய்யழகு... கணிதத்​துக்கு மெய்யழகு.” “ஆமாம்.
  • ஆக, இந்தத் தர்க்க​வியல் கோட்பாட்​டின்படி ‘தி லாஜிக் தியரிஸ்ட்’ மென்பொருள் பதில் அளிக்க வேண்டும் என்பதுதான் நமது எதிர்​பார்ப்பு.” “அந்த மென்பொருளால் முடிந்​ததா?” “முடிந்தது. முதலில் அந்த நூலில் உள்ள கணிதக் கோட்பாடுகளை அதன் மெமரியில் ஏற்றி​னார்கள். பிறகு, ஒரு தர்க்க​விய​லாளர் அல்லது கணிதவிய​லாளர் எப்படி ஒரு பிரச்​சினைக்​குத் தீர்வு காண்பாரோ அதே மாதிரி தீர்வு காணும் வழிமுறையை அதற்குத் தந்தார்கள்.
  • அதன் பிறகு, ஒரு கணிதப் பிரச்​சினையை அந்த மென்பொருளில் உள்ளிட்​டால், அதற்கான தீர்வை அந்த மென்பொருள் அளித்​தது.” “அற்புதம்! “அந்தப் புத்தகத்தின் தொடக்கப் பகுதியில் 52 பிரச்​சினைகள், தர்க்க​வியல் கோட்பாடுகள், தொகுக்​கப்​பட்​டிருந்தன. அதில் 38 பிரச்​சினை​களுக்கு இந்த மென்பொருள் தீர்வு​கண்டு​விட்டது! அதைவிட ஆச்சரியமாக, நூலாசிரியர்கள் முன்வைத்த தீர்வு​களைவிட மிகச்​சுலபமான தீர்வுகளை இந்த மென்பொருள் தானாகவே கண்டறிந்து கூறியது.
  • கணித முறையில் தர்க்​கரீ​தியிலான முடிவெடுத்தல் என்கிற அடிப்​படையான கணிதக் கோட்பாட்டை முதன்​முதலாக நாம் இங்கே பார்க்​கிறோம்.” “பிரமாதம். உலகின் முதல் செய்யறிவு மென்பொருளே இப்படி பிரமாதப்​படுத்​தி​விட்டதே செய்மெய்?” “ஆமாம், ஆனால் அதற்காக ரொம்பவும் துள்ளிக்​கு​திக்​காதீர்” என்று கூறிய​வாறு, தன் ​முகத்தில் செயற்​கையாக ஒரு மென்சோக உணர்வை வர​வழைத்​துக்​கொண்டது செய்​மெய்.

நன்றி: இந்து தமிழ் திசை (27 – 01 – 2025)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories