மனநோய்களுக்கு ஒருங்கிணைந்த சிகிச்சை அவசியம்
- ஒருவருக்கு உளப்பிறழ்வு (மன நோய்) ஏற்பட்டால், அதற்குக் காரணம் பேய், பிசாசு, பூதம் போன்ற தீய சக்திகள்தான் என்று நினைத்துக் கொண்டிருந்த காலத்தில், ‘மனநோய் களுக்குக் காரணம் தீய சக்திகள் அல்ல, மூளையில் ஏற்படும் மாற்றங்களே’ என்பதை எடுத்து ரைத்தவர்கள் சித்தர்கள். பேய், பிசாசுகள்தான் மனப்பிறழ்விற்கான காரணம் என்று அவற்றின் மீது குற்றம் சுமத்தி, மனநோயால் பாதிக்கப்பட்டவர் களைப் பாடாய்ப்படுத்தும் சூழல் இன்றும் தொடர்கிறது.
- மனநோய்கள் குறித்தும் அதற்கான மருந்துகள் பற்றி யும் பல்வேறு குறிப்புகள் சித்த மருத்துவத்தில் பொதிந்து கிடக்கின்றன. மனநலம் பற்றி ‘அகத்தியர் மானிட கிறுக்கு நூல்’ விரிவாகப் பேசுகிறது. மேலும், தேரையர், யூகி போன்ற சித்தர்களின் நூல்களும் மனநோய்களைப் பற்றிப்பல்வேறு இடங்களில் கூறியுள்ளன.
காரணங்கள்:
- மனநோய்கள் ஏற்படுவதற்குச் சூழல், மரபு, வாழ்க்கை முறை, தவறான சிகிச்சை முறைகள் என்று அறிவியல் ரீதியான காரணங்களைச் சித்த மருத்துவம் பட்டியலிடுகிறது. மனநோய்கள் ஏற்பட அதீத கோபம், குற்றவுணர்வு, தூக்கமின்மை, தோல்வி, விஷத் தாவரங்களைப் பயன்படுத்துதல், போதைப் பழக்கம், சமூகத்தோடு பழக முடியாத சூழல், தனிமை, பயம், தலையில் அடிபடுதல் ஆகியவை மிக முக்கியக் காரணங் களாகப் பழமையான சித்த மருத்துவ நூல் ஒன்று சுட்டிக்காட்டுகிறது.
ஒப்பீடு:
- மனநலம் சார்ந்த சித்த மருத்துவ நூல்கள், பொத்தாம் பொதுவாக மனநிலை பாதிக்கப்பட்டவர்களின் செயல்பாடுகளை வைத்து ஒட்டுமொத்தமாக ‘மனநோய்’ என்று வகைப்படுத்தவில்லை. அறிகுறி களைக் கருத்தில் கொண்டு கிரிகை, உன்மத்தம், மதநோய், மத அழிவு, பிரமை போன்ற நோய்ப் பிரிவு களாகப் பிரித்துக் காட்டியுள்ளன. அதிலும் மனநோய்கள் சார்ந்த பல்வேறு உள்பிரிவுகளும் உள்ளன. நவீன மருத்துவம் வகைப்படுத்தி இருக்கும் பல்வேறு மன நோய்களில் (உதா ரணம்: Schizophrenia, Depression, Mania) காணப்படும் அறிகுறிகளை, சித்த மருத்துவத்தில் கூறப்பட்ட மனநோய்களின் அறிகுறிகளோடு பொருத்திப் பார்க்கலாம்.
சிகிச்சை முறைகள்:
- பல வகையான சித்த மருந்துகளை நாசித் துளை களுக்குள் செலுத்தும் நசிய சிகிச்சை, கண்களுக்கான கலிக்க மருத்துவம், உடல் முழுவதும் பூசப்படும் துவாலை சிகிச்சை, புகை மருத்துவம், வேது பிடித்தல், எண்ணெய்க் குளியல், தாரை சிகிச்சை போன்ற வெளி மருத்துவ சிகிச்சைகள், மூலிகைகள், தாதுப்பொருள்கள் - ஜீவப் பொருள்கள் கொண்டு தயாரிக்கப் பட்ட உள்மருந்துகள் என மனம் சார்ந்த நோய்களுக்கு எண்ணற்ற மருந்துகளை உள்ளடக்கியது சித்த மருத்துவம். சித்த மருத்துவத்தின் கரங்களுள் ஒன்றான திருமூலர் யோக மருத்துவத்தில் கூறப் பட்டுள்ள சில ஆசன வகைகளும் தியான வகைகளும் உறுதியாக மனதளவில் தாக்கத்தை ஏற்படுத்தும்.
- வெவ்வேறு மனநோய்களின் தன்மைக்கு ஏற்ப உள்மருந்துகளைப் பிரயோகிக்கலாம். கிளர்ச்சியுற்ற மனநிலையில் (உதாரணத்துக்கு Manic state), மனதைச் சாந்தப்படுத்தக் கூடிய மருந்துகளும், சோர்வுற்ற மனநிலையில் (Depression) மனதை உற்சாகப்படுத்தக்கூடிய மருந்துகளும் என நோய்களின் தன்மைக்கேற்ப எண்ணற்ற மருந்துகள் உள்ளன.
- பிரமி நெய், அண்டபற்பம், அமுக்கரா, வல்லாரை சேர்ந்த மருந்துகள், லேகிய வகைகள், பல்வேறு மூலிகைகள் (நோயின் தன்மையைப் பொறுத்து மருத்துவரின் மேற்பார்வையில்) கொடுக்கலாம். வாந்திக்குக் கொடுக்கப்படும் வமன சிகிச்சை, பேதிக்கான விரேசன சிகிச்சை என உடற் தாதுகளைச் சரிசெய்து நோயைக் குணமாக்கும் தத்துவ வழிமுறைகளையும் சித்த, ஆயுர் வேத மருத்துவ முறைகளில் பார்க்க முடியும்.
தத்துவம்:
- தத்துவ அடிப்படையில், பித்தம் அதிகரிக்கும் நிலையை, மனப் பிறழ்வுக்கான காரணமாகச் சொல்லலாம். அன்றாட வாழ்வில் ‘பித்தம் தலைக்கு ஏறிடுச்சு பாரு’ என்கிற பதம் உருவானதற்குத் தத்துவ அடிப்படை மிக முக்கியக் காரணம். தத்துவ ரீதியில் சில விதிவிலக்கு களும் உண்டு. பித்தத்தை அடிப் படையாகக் கொண்டு வாதம், பித்தம், கபம் என்கிற முக்குற்ற அடிப்படையிலும் மனநோய்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளன. அறிகுறிகள் அடிப்படையிலும் நோயாளர்களின் அடிப்படையிலும் தத்துவங்கள் கணிக்கப்படுகின்றன.
ஒருங்கிணைந்த மருத்துவம்:
- மனநிலை பாதிக்கப்பட்டவர் களுக்கு இப்போதைய தேவை ஒருங்கிணைந்த மருத்துவம். நவீன மருத்துவ முறையோடு பாரம்பரிய சித்த மருத்துவம் மற்றும் இந்திய மருத்துவ முறைகளையும் இணைத்து சிகிச்சை அளிக்கும் மருத்துவச் சூழல் அவசியம். மன நோய்களுக்காக நவீன மருத்துவ முறையில் வழங்கப்படும் மருந்துக ளோடு (Anti-psychotic drugs), பாரம்பரிய மருத்துவ முறைகளில் உளம் சார்ந்த நோய்களுக்குச் சொல்லப்பட்ட சிகிச்சை முறைகளை முயன்று பார்த்து, நோயாளிகளின் நலன் காப்பது சிறப்பானதாக இருக்கும்.
- மேலும், நீண்ட நாள் களுக்கு உட்கொள்ளப்படும் சில மருந்துகளால் பக்க விளைவுகள் ஏற்படும்பட்சத்தில், அவற்றுக்கு மாற் றாக வெளிப்புற மருத்துவச் சிகிச்சை முறைகளின் மூலம் மன நோய்களின் தீவிரத்தைக் குறைக்க முடியுமா என்பது போன்ற சிந்தனைகள் துளிர்விட வேண்டியது அவசியம்.வருங்காலத்தில் ஒரு மனநோயாளி மருத்துவமனைக்கு அழைத்து வரப்படும்போது, பாரம்பரிய மருத்துவர்களோடு சேர்த்து நவீன மருத்துவர்களின் ஆய்வுக்கும் உட்படுத்தப் பட்டு, நோயாளிக்குத் தேவைப்படும் மனநலச் சிகிச்சை முறைகளை வடிவமைப்பது நல்லது.
- இம்முறை மூலம் மனநோயின் தீவிரத்தைக் குறைக்க முடியு மென்றால், மருத்துவத் துறைக்குக் கிடைக்கும் மிகப்பெரிய வெற்றி யாகச் சொல்ல முடியும். அனைத்து நோய்களுக்கும் ஒருங்கிணைந்த சிகிச்சை குறித்த குரல்கள் ஒலித்துக்கொண்டிருக்கும் தற்போதைய சூழலில், மனம் சார்ந்த நோய்களுக்கு ஒருங்கிணைந்த சிகிச்சை கொடுப்பதென்பது மிகச் சிறப்பானதாக இருக்கும்.
- ஒருங்கிணைந்த சிகிச்சை முறையால் உடல் சார்ந்த அறிகுறிகளில் என்ன முன்னேற்றம் கிடைத்திருக்கிறது, மனநோய்களில் முறை பிறழ்ந்து கிடக்கும் வேதிப் பொருள்களின் (உதாரணத்திற்கு டோபமைன், செரடோனின், நார்-எபினெப்ரைன்) அடிப்படையில் ஏதேனும் மாற்றங்கள் நிகழ்கின் றனவா என்பது போன்றவற்றை ஆவணப்படுத்தி, மிகப்பெரிய அளவில் ஒவ்வொரு மனநோய்க்கும் ஆய்வுகள் நடைபெறத் தொடங்குவது அவசியம்.
- மன நோய்களால் பாதிக்கப் படுபவர்களின் எண்ணிக்கை கடந்த பத்தாண்டுகளில் பல மடங்கு அதிகரித்துள்ளதாக ஆய்வு முடிவுகள் சொல்கின்றன. அதற்குப் பல காரணங்களோடு, வாழ்க்கைமுறை ரீதியாக நமக்குள் ஏற்பட்ட மாற்றங்களும் முக்கியக் காரணம். மனதளவில் பாதிக்கப்பட்டவர்களை வித்தியாசமாகப் பார்க்கும் நிலையும் சமுதாயதில் மாற வேண்டும்.
- நமக்கு அருகில் இருப்பவர்களுக்கு நீண்ட நாள்களாக மனரீதியாக மாற்றங்கள் இருப்பின், உடனடியாக மருத்துவரின் ஆலோசனையோடு சிகிச்சையைத் தொடங்குவது அவசியம். ஆரம்ப நிலையில் தங்களது மனநிலையில் மாற்றத்தை உணர்ப வர்கள், தாமாகவே மருத்துவரை நாடலாம். பெரும்பாலான மனம் சார்ந்த பாதிப்புகளுக்கான காரணம், சில வேதிப் பொருள்களின் ஏற்ற இறக்கங்களும், தனிமை உண்டாக் கும் மாற்றங்களும்தான். முறையான சிகிச்சையும், உடனிருப்பவர்களின் அன்பும் போதும் மனம் குதூகலிக்க!
- மனதளவில் பாதிக்கப்பட்டவர்கள் விலக்கிவைக்கப்பட வேண்டியவர்கள் அல்ல. வாரி அணைக்கப்பட வேண்டியவர்கள். இயற்கையின் துணை, அழகான சூழல், பேரன்பு, ஆதரவு, பரிவு, முறையான மருத்துவம் ஆகிய அனைத்தும் நரம்பு செல்களில் அரங்கேறும் பரிமாற்றங்களை முறைப்படுத்தும் காரணிகள். மனநோய்களுக்கான காரணத்தைக் கண்டறிந்து, ஒருங்
- கிணைந்த சிகிச்சையை மேற்கொண் டால் மூளையின் தேவையான பகுதி களில் மாற்றங்கள் நிகழும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை; ஒருங்கிணைவோம்.
நன்றி: இந்து தமிழ் திசை (22 – 02 – 2025)