TNPSC Thervupettagam

வளர்ப்பு விலங்குகளிடம் தள்ளி இருங்கள்

March 15 , 2025 1 hrs 0 min 3 0
  • விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு நேரடியாகவோ மறைமுகமாகவோ பல நோய்கள் பரவுகின்றன. இந்நோய்கள் பெரும்பாலும் விலங்குகளிடம் நேரடி யாக பெரும்பாலும் தொடர்புள்ளவர்களையே அதிகம் தாக்குகின்றன.
  • சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மூலம் அந்நோய்களின் தாக்குதலிலிருந்து நம்மைப் பாது காத்துக்கொள்ள இயலும். மனிதர்களுக்கு விலங்குகளிடமிருந்து பரவும் நோய்களில் வெறிநாய்க்கடி மூலம் ஏற்படும் வெறி நோய், புருசில்லோசிஸ் எனப்படும் கருச்சிதைவு, ஆந்த்ராக்ஸ் எனப் படும் அடைப்பான், லெப்டோஸ்பை ரோசிஸ் எனப்படும் எலிக் காய்ச்சல், சமீபகாலமாகத் தீவிரமாக உருவெ டுத்துவரும் நிபா வைரஸ், பறவைக் காய்ச்சல் போன்றவை முக்கிய மானவை.

வெறிநாய்க்கடி நோய்:

  • விலங்குகளிடமிருந்து மனித ருக்குப் பரவும் முக்கிய நோய்களில் ஒன்று வெறிநாய்க்கடி. வெறிநாய்க்கடி நோயை உருவாக்குபவை ராப்டோ வைரஸ் வகையைச் சார்ந்த ‘லைசா’ வைரஸ்களாகும். அனைத்து வெப்ப ரத்த உயிரினங்களையும் இவை தாக்கும் என்றாலும், மனிதரில் பெரும்பாலும் நாய்களின் கடிமூலமே இந்நோய் ஏற்படு கிறது. தவிர இந்நோய்வாய்ப்பட்ட விலங்குகள் கடிப்பதன் மூலமோ, உடல் காயங்களில் நக்கு வதன் மூலமோ நோய் பரவக்கூடும்.
  • வெறிநாய்க்கடியால் பாதிக்கப்பட்ட விலங்குகளின் உமிழ்நீரிலேயே இவ்வைரஸ்கள் பெரும்பாலும் காணப் படுகின்றன. இவ்விலங்குகள் கடிக்கும் போதோ, உடற்காயங்களில் உமிழ்நீர் தொடர்பு ஏற்படுவதன் மூலமோ, நோயால் பாதிக்கப்பட்ட பூனை போன்ற வளர்ப்பு விலங்குகள் நம் கால் பாதங்களை நக்குவதன் மூலமோ வைரஸ்கள் உடலினுள் நுழைந்து, மத்திய நரம்பு மண்டலம் வழியாக மூளையைச் சென்றடைகின்றன.

நடையில் தடுமாற்றம்:

  • செல்லப் பிராணிகளில் காணப்படும் சிறிய அளவிலான மாறுபட்ட செய்கைகளைக்கூடக் கவனத்துடன் கண் காணிக்க வேண்டும். நாய்களுக்குத் திடீரென ஏற்படும் பசியின்மை, இலக்கில்லா நடை, குரைக்கும்போது புலப்படும் வேறுபாடு, பின்கால்கள் தளர்வால் நடையில் காணப்படும் தள்ளாட்டம், எதையும் ஆக்கிரமித்து தாக்கும் மனோபாவம் போன்றவை முக்கியமான அறிகுறிகள்.
  • சாந்தமான நோய் அறிகுறியில், நோயுற்ற விலங்குகள் இருளடைந்த மூலைகளில் படுத்துக்கிடப்பதுடன் உடல் தளர்ந்து மூச்சுத்திணறலுடன் காணப் படுகின்றன. வெறிநோய் வைரஸ்கள் சோப்பு நுரையிலும், வெப்பத் திலும் வீரியமற்றுவிடுகின்றன. எனவே, ஆரம்பகட்ட நோய்த் தடுப்பு முறையாகக் கடிபட்ட பகுதியை ஓடும் நீரில் 15 நிமிடங்கள் தொடர்ந்து சோப்பால் கழுவவேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.

கண்காணிப்பு:

  • வெறிநோய் அறிகுறி இல்லாமலும், விலங்குகளின் மூலம் கடி ஏற்பட்டால் அல்லது கடித்த விலங்கிற்கு வெறி நோய் இருப்பதாகக் கருதினால் அந்த விலங்குகளுடன் நெருங்கிப் பழகுவதைத் தவிர்க்க வேண்டும். பாது காப்பான இடங்களில் அவற்றைக் கட்டிவைத்து உணவும், குடிநீரும் வழங்கிக் குறைந்தது பத்து நாள் கள் அவற்றைக் கண்காணித்துவர வேண்டும்.
  • ஏனெனில், நோய் தீவிரத் தன் மையை அடைந்தால் மட்டுமே, விஞ் ஞானப்பூர்வமாக நோயை நிரூபிக்க மூளையில் வைரஸ்கள் காணப்படும். இவ்வாறு தனியாகக் கட்டப்பட்டுக் கண்காணிக்கப்பட்ட விலங்குகள் பத்து நாள்களுக்குள் இறந்தால், நோயைத் துல்லியமாகக் கண்டறிய வேண்டும். இதற்கு இறந்த விலங்குகளின் மூளைப்பகுதியிலுள்ள வைரஸை முறையான சோதனைகள் மூலம் உறுதிப்படுத்திய பின்னரே, நோய் துல்லியமாகக் கண்டறியப்படும்.

தடுப்பூசிகள்:

  • வெறிநோயைக் கட்டுப்படுத்த ஒருங்கிணைந்த நடவடிக்கைகளே தேவை. இந்நோயை உருவாக்குபவை விலங்கு கள்; குறிப்பாக நாய்கள் என்பதால் அவற்றின் வளர்ப்பில் போதிய அக்கறைகாட்ட வேண்டும். வளர்ப்பு விலங்குகளான நாய்களுக்கும் பூனைகளுக்கும் அவற்றின் 6-8 வார வயதின்போது முதல் வெறிநோய்த் தடுப்பூசியைச் செலுத்த வேண்டும். பின் 3-4 வாரங்கள் சென்ற பின் இரண்டாம் தவணை தடுப்பூசியைச் செலுத்த வேண்டும்.
  • பின் ஒவ்வொரு வருடமும் தவறாது தடுப்பூசி செலுத்தி, விவரங்களைக் குறித்து வைத்துக்கொள்ள வேண்டும். வளர்ப்பு விலங்குகளுக்குத் தடுப்பூசி போட்டாலும்கூட அவற்றிடமிருந்து நமக்குக் கடி ஏற்பட்டாலோ அல்லது நம் உடல் காயங்களில் அவை நக்கினாலோ நாமும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். கட்டுரையாளர், முதன்மை மருத்துவர்/ உதவி இயக்குநர், கால்நடை பன்முக மருத்துவமனை, நாகர்கோவில்.

பறவைக் காய்ச்சல்:

  • இது வெளிநாட்டுப் பறவைகள் வந்து செல்லும் பறவை சரணாலயங்களுக்கு அருகிலுள்ள பகுதிகளிலேயே பதிவாவ தால், அச்சரணாலயங்களுக்கு அருகில் கோழிகள் மற்றும் வாத்துகளை வளர்க் காமல் இருப்பது நல்லது. கோழிகள் தீவனம் உண்ணாமல் சோர்ந்து காணப்படுதல், தலை வீங்கி இருத்தல், கொண்டை நீல நிறமாகக் காணப்படுதல், முட்டை உற்பத்தி திடீரெனக் குறைதல் போன்றவை இதன் அறிகுறியாகும். கோழி எச்சம் உள்ள இடங்களில் சிறார்களை விளையாட அனுமதிக்கக் கூடாது. கோழி வளர்க்கும் இடங்களில் பாதணிகள் அணிந்து நடக்கவேண்டும்.
  • கோழிப்பண்ணைகளைச் சுத்தம் செய்யும்போது முகக்கவசம் அணிந்து கொள்ள வேண்டும். பண்ணைகளைச் சுத்தம் செய்தபின், கோழி மற்றும் கோழி இறைச்சியைக் கையாளும் முன்னும் பின்னும் கைகளை நன்றாக சோப்பு போட்டுக் கழுவ வேண்டும். கோழிக்கறியை நன்றாகச் சமைத்து உண்ண வேண்டும். 70 டிகிரி சென்டிகிரேடு வெப்பத்தில் பறவைக் காய்ச்சல் வைரஸ்கள் அழிந்து விடுகின்றன.
  • முழுக்கோழியை அப்படியே சமைக்கக் கூடாது. ஏனெனில் கோழி உடலின் உள்பகுதி முழுவதும் குறிப்பிட்ட 70 டிகிரி சென்டிகிரேடு வெப்பம் எட்டாமல் போய்விடலாம். முதலாவதாக, வளர்ப்பு விலங்குகளுக்குத் தேவையான தடுப்பூசிகளைத் தக்க நேரத்தில் போட்டு வர வேண்டும். நோயால் பாதிக்கப்பட்ட, நோய்த் தாக்குதலுக்குள்ளானவை எனச் சந்தேகப்படும் கால்நடைகளுக்கு உடனே சிகிச்சை அளிப்பதோடு அவற்றுடன் மிக நெருக்கமாகப் பழகுவதைத் தவிர்க்கவேண்டும். எலி, தெரு நாய்கள் எண்ணிக்கை கட்டுப்படுத்தப்பட வேண்டும்.

கருச்சிதைவு நோய்:

  • கறவை மாடுகளின் பாலின் வழியே பரவுகிற மற்றொரு முக்கிய நோய் புருசில்லோசிஸ் எனப்படும் கருச்சிதைவு நோய். புருசில் லோசிஸ் நோயால் பாதிக்கப்பட்டு, கருச்சிதை வடைந்த பசுக்களின் நஞ்சுக்கொடி, இதரக் கழிவைக் கையாளும் கால்நடை வளர்ப்போர், கால்நடை மருத்துவர்கள் ஆகியோர் அதிகமாகப் பாதிக்கப்படுகின்றனர். தவிர மேற்கூறிய மாடுகளின் பாலை அருந்தும் மக்களும் இந்நோயால் பாதிக்கப்படுகின்றனர்.
  • நன்றாக வேகாத பன்றி, மாட்டிறைச்சியை உண்ணுவதன் மூலம் மனிதர்கள் நாடாப்புழுக்களின் தாக்குதலுக்கு உள்ளாகின்றனர். தவிர மாடுகள், நாய்களின் வயிற்றில் உள்ள நாடாப் புழுக்களின் முட்டைகள் நம் உணவுப் பொருள்களில் கலந்து, அவ்வுணவை உண்ணு வதன் மூலம் உடலைச் சென்றடைகின்றன. பின்னர் நாடாப்புழுக்கள் கல்லீரல், மூளைப் பகுதியைச் சென்றடைந்து கட்டிகளை உருவாக்குகின்றன.

அடைப்பான் நோய்:

  • கால்நடை மருத்துவம் சார்ந்தவர்களையும், கறிக்கடைக்காரர் களையும், தோல் பதனிடுவோரையும் ஒன்றுபோல் பாதிக்கிற நோய் ஆந்த்ராக்ஸ் எனப்படும் அடைப்பான் நோயாகும். இந்நோயால் இறந்த கால்நடைகளின் உடல், தோலை மேற்கூறியோர் கையாளுவதன் மூலம் இந்நோய்த் தாக்குதலுக்கு உள்ளாகின்றனர்.
  • பேசில்லஸ் ஆந்த்ரசிஸ் என்னும் ஸ்போர் பாக்டீரியாவால் தோன்றும் இந்நோய் கால்நடைகளில் காணப் படும் ஒரு கொடூரநோயாகும். நாய்களில் காணப்படும் டாக்ஸோகாரா என்னும் உருளைப் புழுக்களின் முட்டைகள் நம் உணவில் கலந்து, உடலை அடைந்து, நம் உள்ளுறுப்புகளில் காயத்தை ஏற்படுத்துகின்றன.
  • நாய்களில் காணப்படும் மற்றொரு வகைக் கொக்கிப்புழுக்களின் லார்வாக்கள் மனிதர்களின் தோலைத் துளைத்துக் காயத்தை ஏற்படுத்துகின்றன. நம் உணவுப் பொருள்களில் உணவு நச்சை ஏற்படுத்துவதில் சால்மோனெல்லா கிருமிகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன.
  • இக்கிருமிகளை வளர்ப்பு விலங்குகள், பறவைகள் பரப்புகின்றன. இவ்விலங்குகள் வெளியேற்றும் கழிவுகள் மூலம் பரவும் சால்மோனெல்லா அணுக்கள் நம் உணவுப்பொருள்களை அசுத்தமாக்கி, நோயைத் தோற்றுவிக்கின்றன. மேலும், கோழி அம்மை நோயைத் தோற்றுவிக்கிற வைரஸ்கள் மனிதர்களிடம் சிவப்புக்கண் நோயை ஏற்படுத்துகின்றன.

எலிக்காய்ச்சல்:

  • விவசாயிகளைப் பாதிப்பதில் மிகவும் முக்கிய மானது லெப்டோஸ்பைரோசிஸ் எனப்படும் எலிக் காய்ச்சல் நோயாகும். லெப்டோஸ்பைரா எனப்படும் பாக்டீரியாவால் தோன்றும் இந்நோயால் அதிகம் பாதிக்கப்படுவோர் விவசாயிகளாவர். இந்நோயின் தாக்குதல் பெரும்பாலும் நோயால் பாதிக்கப்பட்ட விலங்குகளின் சிறுநீர், பால், நஞ்சுக்கொடி முதலானவற்றைக் கையாளும்போது நிகழ்கிறது.
  • எலிக்காய்ச்சலின் தோற்றுவாய்க் காலம், பத்து நாள்களாகும். மெதுவாக ஆரம்பிக்கும் இந்நோயின் பாதிப்பாக மனிதருக்குத் தலை வலி, உடல் வலி, வாந்தி, வயிற்றுப்போக்கு, ஆரம்பநிலையில் காய்ச்சல், இருமல், நெஞ்சு வலி போன்ற அறிகுறிகள் காணப்படுகின்றன. இந்நோயால் கர்ப்பிணிகளிடம் கருச்சிதைவு ஏற்படுகிறது. நோயால் பாதிக்கப்பட்ட விலங்குகளை முறையான பரிசோதனைகள் மூலம் கண்டறிந்து, அப்புறப்படுத்தி, அவற்றின் கழிவுப் பொருள்களுடன் எவ்விதத் தொடர்பும் இல்லாமல் இருப்பதன் மூலமும் சுற்றுப்புறத்தைச் சுகாதாரமாக வைப்பதன் மூலமும் இந்நோயைத் தவிர்க்கலாம்.

நன்றி: இந்து தமிழ் திசை (15 – 03 – 2025)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories