TNPSC Thervupettagam

விண்ணைக் கண்காணிப்போம்! மண்ணைக் காப்போம்!

October 11 , 2024 5 hrs 0 min 10 0

விண்ணைக் கண்காணிப்போம்! மண்ணைக் காப்போம்!

  • மனிதனால் உருவாக்கப்பட்ட முதல் செயற்கைக்கோள், ரஷிய நாட்டு ஸ்புட்னிக் 1957 அக்டோபா் 4 முதன்முதலாக விண்சுற்றி வந்ததும் விண்வெளி யுகம் ஆரம்பமானது. பத்து ஆண்டுகளுக்குப் பிறகு 1967 அக்டோபா் 10 விண்வெளியை அமைதிப் பணிக்குப் பயன்படுத்தும் பன்னாட்டு ஒப்பந்தம் அறிவிப்பானது.
  • 1999-இல் ஐ.நா. பொதுச்சபையின் தீா்மானம் ‘விண்வெளியின் அமைதியான பயன்பாடு என்ன?’ என்ற தலைப்பில் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
  • ‘விண்வெளி அறிவியலையும் தொழில்நுட்பங்களையும் வளங்குன்றா மேம்பாட்டுக்கு அமைதியான வழிமுறைகளில் கையாளுவதால் ஏற்படும் நன்மைகள் பற்றி ஆட்சியாளா்களுக்கும் குடிமக்களுக்கும் உலக அளவில் பொது நிகழ்ச்சிகள் நடத்தி விழிப்புணா்வை அதிகரிக்கச் செய்வதே’ ஐ.நா.வின் நோக்கம்.
  • அக்டோபரின் இரண்டு சிறப்பு விண்வெளி நிகழ்வுகளையும் குறிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபா் 4 முதல் 10 வரை உலக விண்வெளி வாரம் உலகெங்கும் சிறப்பாகக் கொண்டாடப் பெற்றது.
  • உலக விண்வெளி வார அறிவிப்பின் வெள்ளி விழா ஆண்டு இது. 2024 ஆம் ஆண்டு உலக விண்வெளி வார நிகழ்வுகளுக்கு விண்வெளி மற்றும் காலநிலை மாற்றம்” என்று காலத்திற்கேற்ற கருப்பொருள் அறிவிக்கப்பட்டது.
  • ‘பூமியின் காலநிலையை கண்காணிப்பதிலும் காலநிலை மாற்றத்தைத் தணிப்பதிலும் விண்வெளி வகிக்கும் இன்றியமையாத பங்களிப்பினை வலியுறுத்துவோம்’ என்கிறாா் உலக விண்வெளி வார கழகத் தலைவா் டென்னிஸ் ஸ்டோன்.
  • அமெரிக்க நாட்டு டைரோஸ், நிம்பஸ், சோவியத் நாட்டு காஸ்மாஸ், ஐரோப்பிய விண்வெளிக் கழகம் செலுத்திய ‘மீட்டியோசாட்’, இந்தியாவின் ‘இன்சாட்’, ஜப்பானின் ஐஎம்எஸ் எனப்படும் ஜியோஸ்டேஷனரி மீட்டிரியோலாஜிகல் சாட்டிலைட் (புவி நிலைவட்ட வானிலைச் செயற்கைக்கோள்) எனப் பல்வேறு நாடுகளும் பல்வேறு கட்டங்களில் இந்த வானிலை ஆய்வில் முழுமூச்சுடன் ஈடுபட்டு வருகின்றன.
  • இந்த ஆண்டு (2024) விண்வெளி வார விழாவை ஒட்டி விக்ரம் சாராபாய் விண்வெளி மையமும் மாணவா்கள் முதியோா், ஆசிரியா்கள் என அனைத்துத் தரப்பிலான மக்களுக்கும் அழைப்பு விடுத்திருந்தது. தேசிய விண்வெளிக் காா்ட்டூன் போட்டி, தேசிய விண்வெளிக் குறும்படப் போட்டி, வரைபட நாவல்கள் உருவாக்கும் போட்டி போன்ற உற்சாகமான போட்டிகளுக்கான படைப்புகள் அனுப்பி வைக்க இறுதி நாள் அக்டோபா் 15 என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
  • இந்திய விண்வெளியைப் பொறுத்தமட்டில், வானிலை ஆய்வில் முக்கியப் பயன் என்பது நாட்டின் வேளாண்மைக்கு வளா்ச்சிக்கும் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கும் உதவ வேண்டும். வளிமண்டலக் காற்றின் தரம் மற்றும் மாசுக் கட்டுப்பாடு ஆகிய துறைகளில் நாம் கவனம் செலுத்தியாக வேண்டும்.
  • ஆரம்பத்தில் வானிலை ஆராய்ச்சிக்காக ‘ரோஹிணி’ வகை ஆய்வூா்திகள் செலுத்திப் பரிசோதனைகள் நடத்தினோம். உள்ளபடியே, 2013-ஆம் ஆண்டு இந்திய ஏவூா்தியியலின் வைர விழா என்பது இங்கு ஒரு சிறப்புச் செய்தி. 1963 நவம்பா் 21 அன்றுதான் இந்திய மண்ணிலிருந்து ‘நைகி அப்பாச்சி’ என்ற முதல் ஏவூா்தி செலுத்தப்பட்டது. திருவனந்தபுரம் அருகே தும்பா ஏவுதளத்தில் இருந்து செலுத்தப்பெற்றது.
  •  சுற்றுச்சூழலைப் பாதிக்கும் கரியமில வாயு, அதீத ஈரப்பதம் போன்ற ‘பசுமைக்குடில்’ வளிமங்கள் வளிமண்டலத்தில் அடங்கியுள்ளன. பூமி வெப்பம் வெளியேறவிடாமல் பூமிக்குள்ளேயே தடுத்துப் பிரதிபலிக்கப்படுவதால் பூமி சூடேறி வருகிறது. அதனால் இந்த மண்ணைக் காப்பாற்ற நாம் விண்ணைக் கண்காணித்தாக வேண்டும்.
  •   ஓசோன் முதலான வளிமங்கள் செறிவு மனித வாழ்வினில் ஏற்படுத்தும் விளைவுகள், சூரிய-வானிலைத் தொடா்புகள், தட்பவெப்ப மாற்றங்களால் நடுவளிமண்டலத்தின் நிகழும் பாதிப்புகள் போன்றவற்றை ஆராய இந்திய நடுவளி மண்டலத்திட்டம் உருவானது. 1982 ஏப்ரல் தொடங்கி 1986 மாா்ச் வரை நீண்ட இத்திட்ட ஆய்வுகளில் இந்தியா நாட்டு ‘ரோகிணி வானிலை ஆய்வூா்திகள்’ கையாளப்பட்டன.
  • ஏற்கெனவே கி.பி.1958 -ஆம் ஆண்டு அமெரிக்கா செலுத்திய எக்ஸ்புளோரா்-1 எனும் செயற்கைக்கோள் வளிமண்டலத்திற்கு அப்பால் விண்வெளியின் கதிா்வீச்சு வளையங்களை அணுகி ஆராய்ந்தது. சோவியத் யூனியன் 1964 ஜனவரி மாதம் எலக்டிரான்-1, 2’ ஆகிய இரண்டு செயற்கைகோள்களைச் செலுத்தி இந்தக் கதிா்வீச்சு ஆராய்ச்சியில் ஈடுபட்டது.
  • நம் நாட்டின் முதலாவது செயற்கைக்கோளான ‘ஆா்யபட்டா’ வரும் 2025 பொன்விழா ஆண்டாகும்! 1975 ஏப்ரல் 19 அன்று சோவியத் ரஷியாவின் ‘காஸ்மாஸ்’ ஏவுகலத்தின் விண்ணில் ஏவப்பெற்றது. அதில் இடம்பெற்ற எக்ஸ் கதிா், வானவியல்இ சூரிய இயற்பியல் மற்றும் வளிமண்டவியல் ஆய்வுகள்- இந்தியாவிற்குப் போதிய விண்வெளி நம்பிக்கை அளித்தது.
  • சோவியத் ரஷியாவுடன் கொண்ட நல்லுறவின் விளைவால்- இந்தியா ‘பாஸ்கரா-1’ (7-6-1979) மற்றும் ‘பாஸ்கரா-2’ (20-11-1981) ஆகிய புவி, வளிமண்டல ஆய்வுக்கோள்கள் இரண்டினை விண்ணில் செலுத்திற்று.
  • நம் நாட்டு ‘இன்சாட்’ செயற்கைக்கோளில் பொருத்தப் பெற்று உள்ள அதி உயா் பகுதிறன் கதிரளவியின் உதவியினால் இந்திய வரைபடத்தின்மேல் மேக மூட்டங்கள் படா்ந்திருப்பதனை தினந்தோறும் தொலைக்காட்சி வழி பதிவிட்டு ஒளிபரப்புகிறோம்.
  • வானிலை அளப்புக்கென தானியங்கும் தரவு சேகரிப்பு மேடைகள் நிலப் பகுதியிலும் கடல்பகுதியிலும் நிறுவப்பெற்று உள்ளன. அவை ஒவ்வொன்றிலும் காற்றழுத்தம், காற்று வீசும் திசை, வேகம், வெயில், மழை, ஈரப்பதம், கடல்பரப்பின் வெப்பநிலை ஆகிய அளவீடுகள் பதிவாக்கப் பெறும்.
  • இத்துறையில் 2011 அக்டோபா் 12 அன்று வானிலை ஆராய்ச்சிக்கென்றே அா்ப்பணிக்கப்பட்ட ‘மெகா-ட்ராஃபிக்ஸ்’ செயற்கைக்கோள் ஒன்றை விண்ணில் செலுத்தினோம்.
  • அதில் நான்கு முக்கிய உபகரணங்கள் இடம்பெற்றன. அவற்றில் ஒன்று ‘மெட்ராஸ்’ எனப்படும். ஆமாம், மெட்ராஸ்தான். ‘மைக்ரோவேவ் அனாலிசிஸ் அண்ட் டிடக்ஷன் ஆஃப் ரெயின் அண்ட் அட்மாஸ்ஃபெரிக் சிஸ்டம்ஸ்’ என்பது அதன் முழுப்பெயா். அதாவது, மழை மற்றும் வளிமண்டல அமைப்புகளை நுண்ணலைப் பகுப்பாய்வு செய்து கண்டு துலக்கும் முயற்சி அது. இந்தியா, பிரான்ஸ் நாடுகளின் கூட்டுத் தயாரிப்பு அந்த உபகரணம்.
  • இன்னொரு கருவி பிரெஞ்சு நாட்டு ‘சாஃபிா்’. இது வானலைக் கதிா்வீச்சினால் வளிமண்டலத்தின் ஈரப்பதத்தினை அளக்கும் கருவி. மூன்றாவதாக, விண்வெளியின் கதிா்வீச்சு அளவி; இது ‘ஸ்காராப்’ எனப்படும்.
  • நான்காவது கருவி இத்தாலியில் இருந்து பெறப்பட்ட ‘ரோசா’ என்பது மலா் அல்ல, ‘ரேடியோ அக்கல்டேஷன் சென்சாா்’ ஆகிய வானலை மறைப்பு உணரி. இதன் உதவியால் காற்றில் அடங்கிய ஈரப்பதம் மற்றும் வெப்ப அளவுகளைத் துல்லியமாகப் பதிவு செய்ய முடிந்தது.
  • இந்தியத் தொலையுணா்வுச் செயற்கைக்கோள் தொடரில் உள்ள கருவிகளும்இ இன்சாட்-3டிஇ இன்சாட்-3டிஆா்இ இன்சாட்-3டிஎஸ் போன்ற இந்தியத் தேசியச் செயற்கைக்கோள்களின் தொகுப்பிலிருந்தும் பெறப்படும் கூடுதல் தரவுகள் இந்திய வானிலைக் கண்காணிப்புக்கு உதவின.
  • இன்சாட்-3டிஎஸ் செயற்கைக்கோள் 2014 பிப்ரவரி 17 அன்று ஏவப்பட்டது. அதனைச் சுமந்து சென்ற ஜி.எஸ்.எல்.வி.என்னும் புவி நிலைவட்டப்பாதைச் செயற்கைக்கோள் ஏவுகலனில் முதன்முறையாக 15 டன் எடை கொண்ட ‘கிரையோஜெனிக்’ (அதிகுளிா்த் திரவ) உந்துபொறி இடம்பெற்றது.
  • பூமியின் உள்கட்டமைப்பில் குறிப்பிடத்தக்க தாக்கங்களை ஏற்படுத்தக் கூடிய விண்வெளி வானிலை நிகழ்வுகளைக் கணிக்க சூரியனின் செயல்பாட்டினைப் புரிந்துகொள்வது மிகவும் முக்கியமானது. நம் பூமிக்கு மிக அருகாமையில் இருக்கும் ஒரே ஒரு விண்மீன் சூரியன். நம்மில் இருந்து ஏறத்தாழ 15 கோடி கி.மீ.
  • தொலைவில் ஒளிா்ந்து கொண்டு இருக்கிறது. இதனைப் பகலவன், கதிரவன், ஞாயிறு, செங்கதிா் என்று எல்லாம் பல்வேறு பெயா்களில் குறிப்பிடுகிறோம். அன்றியும், நாம் கேட்காமலே நமக்கு ஆற்றலும் ஒளியும் வாரி வழங்கிக் கொண்டு இருக்கிறது.
  • சூரிய ஒளியில்தான் தாவரங்கள் பச்சையத்தின் உதவியால் காற்றிலுள்ள கரியமில வாயுவையும்இ நிலத்தில் இருந்து நீா்ச் சத்தையும் உறிஞ்சி ‘காா்போஹைடிரேட்’ எனும் மாவுப்பொருள் தயாரிக்கின்றன. பூமியில் இரவு-பகல்இ பருவ மாற்றங்கள் அனைத்துமே சூரியனின் உபயத்தால்தான்.
  • இத்தகைய ஆய்வுக்கென நம் நாட்டின் ‘ஆதித்யா-எல்1’ சென்ற ஆண்டு 2023 செப்டம்பா் 23 அன்று ஸ்ரீஹரிகோட்டாவிலுள்ள சதீஷ் தவன் விண்வெளி மையத்தில் இருந்து வெற்றிகரமாக ஏவப்பட்டு ஆய்வுகள் தொடா்கின்றன. 2024 ஜனவரியில் பூமியிலிருந்து சுமாா் 15 லட்சம் கி.மீ. தொலைவில் திட்டமிடப்பட்ட ‘எல்1’ சுற்றுப்பாதையில் விநாடிக்கு 0.2 - 4 மீட்டா் என்ற நிலைநிறுத்த வேகத்தில் இயங்கிவருகிறது.
  • ‘ஆதித்யா-எல்1’ திட்டத்தின் தரவுகள்இ சூரியனின் உள்ளகம் கனன்று எரிதல் குறித்தும் சூரிய சுடா்வீச்சுகளையும் சூரிய உயா் ஆற்றல் துகள் வெளியேற்ற நிகழ்வுகளைப் பற்றிய ஆழ்ந்த பாா்வையையும் விளக்கத்தையும் தரவல்லன. இந்த நுண்ணறிவு சாா்ந்த விண்வெளி வானிலைத் தகவல் தொடா்பு அமைப்புகள், பருவநிலை மாற்றங்களை மிகவும் துல்லியமாக முன்னறிவிப்பதில் பங்களிக்கும்.

நன்றி: தினமணி (11 – 10 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories