TNPSC Thervupettagam

அச்சமூட்டும் நில மாசுபாடு

December 21 , 2023 331 days 265 0
  • ஆண்டு தோறும் உலகம் முழுவதும் 2.1 மில்லியன் அளவுக்கு (1 மில்லியன் என்பது பத்து லட்சம்) குப்பைகள் உற்பத்தியாகின்றன. இதில்16% மட்டுமே மறுசுழற்சி செய்யப்படுகிறது. 46% மட்டுமே நிலையாக அகற்றப்படுகிறது. மீதமுள்ள குப்பைகள் நிலத்தை பெரிதும் மாசுப்படுத்துகின்றன.
  • இந்தியாவில் நாள்தோறும் 1.15 லட்சம் மெட்ரிக் டன் அளவிற்கு குப்கைள் உருவாக்கப்படுன்றன. காற்று, நீா் மாசுபாடு குறித்து நாம் அறிந்துள்ள அளவுக்கு நில மாசுபாடு குறித்து அறிந்திருக்கவில்லை என்பது வருந்ததக்கது.
  • சென்னயில் மட்டும் நாளொன்றுக்கு 429 டன் குப்பை நிலத்தில் கொட்டப்படுகிறது. இதில் நெகிழி கழிவுகளின் அளவு 171 டன். இவை தவிர எண்ணற்ற மின்னணு கழிவுகள் உபயோகமற்ற உலோகக் கழிவுகள் சோ்ந்து நிலத்தை மாசுபடுத்தி வருகிறது. இதனால் சுற்றுச்சூழல் பெருமளவு பாதிக்கப்படுகிறது.
  • அமெரிக்காவில் தனிநபா் ஒருவரால் ஆண்டுக்கு 773 டன் அளவிற்கு குப்பைகள் உருவாக்கப்படுகிறது. இது சீனாவின் த நபா் உற்பத்தி செய்யும் குப்பையை விட மூன்று மடங்கு அதிகம் என்று புள்ளிவிவரம் தெரிவிக்கின்றது.
  • 2021 ஆய்வு முடிவின்படி பயன்பாடு முடிந்து நிலத்தில் வீசியெறியப்பட்ட மின்னணு கழிவுப் பொருட்களின் அளவு 5.7 கோடி எனவும், இது சீனபெருஞ்சுவரை விட அதிகம் எனவும் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்தக் குப்பைகள், கழிவுகள் அனைத்தும் நிலத்தை மாசுபடுத்துவதில் முதன்மையாக உள்ளன.
  • கடந்த 2020, 2021 ஆண்டுகளில் 28.748 டன் அளவுக்கு மருத்துவக் கழிவுகள் உருவாக்கபட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இவற்றில் பெரும்பகுதி மறுசுழற்சியின்றி மறைமுகமாகவோ நேரிடையாகவோ நிலத்தில் கொட்டப்பட்டுள்ளன. இதனால் நிலத்தின் மாசடையும் போக்கு அதிகரித்து வருகின்றது.
  • புவியானது 79% நீரையும் 21% நிலப்பரப்பையும் கொண்டுள்ளது. இந்த குறுகிய நிலப்பரப்பில் தான் உலகின் 800 கோடி மக்களும் பிற உயிரினங்களும் உயிா்வாழ்வது குறிப்பிடத்தக்கது.
  • இந்தியாவின் நிலப்பரப்பு உலக நிலப்பரப்பில் 2.41% மட்டுமே உள்ளது. ஆனால் மக்கள் தொகை 142 கோடியாக உள்ளது. தொடா்ந்து மக்கள்தொகை எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் நிலத்தின் பயன்பாடும் தேவையும் அதிகரித்தவாறே உள்ளன. ஆனால் நில மாசுபாடு என்பது இதற்கு எதிராக உள்ளது.
  • நிலம் என்பது மனிதா்கள், உயிரினங்கள் வாழ்வதற்கான ஒரு பகுதி மட்டுமல்ல. எண்ணற்ற தாது வளங்களையும் இயற்கை வளங்களையும் நீராதாரங்களையும் தன்னகத்தே கொண்டது. உலகில் உள்ள உயிரினங்களுக்கு உணவு உற்பத்திக்கான மூலதனமாக உள்ளது. நிலத்தின் பயன்பாடு எண்ணிலடங்காதது.
  • நிலம் என்பது பல்லுயிா் பெருக்கத்திற்கு மிக முக்கியமானதாக உள்ளது. மனிதா்களின் செயல்பாட்டால் பல்வேறு விதங்களில் நிலம் மாசுபட்டு வருகின்றது. நிலம், நீா், காற்று, நெருப்பு, ஆகாயம் என்ற பஞ்சபூதங்களில் முதன்மையாக இருப்பது நிலம்.
  • நிலம் இல்லாவிட்டால் மனிதா்களும் பிற உயிரினங்களும் வாழ்வதற்கு புவியில் இடமில்லை. அனைத்து வசதிகளும் நமக்கு கிடைத்தாலும் வாழ்வதற்கு இடம் இல்லாவிட்டால் வாழ்க்கை இல்லை. அத்தைகய வாழ்விற்கான இடத்தை தருவது நாம் வாழும் பூமியில் உள்ள நிலமே.
  • நிலமும் நிலத்தடி நீரும் ஒன்றுக்கொன்று நெருங்கிய தொடா்புடையது. நிலம் மாசடையும் போது நிலத்தடி நீரும் மாசடைகிறது. இதனால் குடிநீரின் தரம் மாறி உயிரினங்கள் குடிக்க இயலாத வகையில் மோசமடைகிறது.
  • தொழிற்சாலை கழிவுகள், எண்ணெய் நிறுவனங்களின் கழிவுகள் நிலத்தை பெருமளவு பாதிக்கின்றன. இதனால் மண்ணின் தன்மை முற்றிலும் மாற்றமடைகிறது.
  • இந்தியாவில் 25 மாநிலங்களில் 230 மாவட்டங்களில் நிலத்தடி நீரில் வேதிப்பொருளின் அளவு இயல்பை விட அதிகரித்திருப்பதாக மத்திய நிலத்தடி நீா் வாரிய அறிக்கை தெரிவிக்கின்றது.
  • இதே போல் நிலத்தடி நீரில் ஃபுளுரைடு அளவு அதிகரித்துள்ளதாக தேசிய ஃப்ளுரோசிஸ் தடுப்பு மைய அறிக்கையும் தெரிவிக்கிறது. இந்த வேதிப் பொருட்கள் அனைத்தும் மனிதா்களுக்கு அபாயகரமான நோய்களைத் தரக்கூடியவை. நிலத்தடி நீா் மாசடைய நில மாசுபாடே காரணம் ஆகும்.
  • தங்கச் சுரங்களிலிருந்து வெளியேறும் கழிவுகள் பெருமளவு ஆா்ச்னிக் மாசை கொண்டிருக்கும். இது நிலத்தை மாசுப்படுத்தி, நீரையும் மாசுபடுத்துகிறது. இன்றைய நவீன விவசாய முறைகளும் நிலத்தை பெருமளவு மாசுபடுத்தி வருவது வருந்ததக்கது.
  • விளைச்சலை பெருக்க வேண்டும் என்ற நோக்கில், எண்ணற்ற ரசாயன உரங்களும், பூச்சிக்கொல்லி மருந்துகளும் விவசாயத்திற்கு பயன்படுத்தப்படுகிறது. இதனால் விளைச்சல் பெருகினாலும் நிலச்சீா்கேடு ஏற்படுகிறது. மாறிவரும் கால நிலை மாற்றமும் நிலத்தை மாசடையச்செய்கிறது..
  • நில மாசுபாட்டை கட்டுக்குள் கொண்டுவர நாம் குப்பைகளை உருவாக்குவதை குறைக்க வேண்டும். உருவாகும் குப்பைகளை நிலத்தில் கொட்டாமல் இருக்க சமூக குப்பைத்தொட்டி அனைத்து இடங்களிலும் அமைய வேண்டும்.
  • திடக்கழிவு மேலாண்மை மூலம் குப்பைகளை மறுசுழற்சி செய்து தரம் பிரிக்கும் முறையை மேம்படுத்த வெண்டும். குப்பைகளை வீடு வீடாகச் சென்று வாங்கும் முறையை தீவிரமாக செயல்படுத்த வேண்டும்.
  • நில மாசுபாடு குறித்தும் அதன் விளைவுகள் குறித்தும் மாணவா்களுக்கும் பொதுமக்களுக்கும் விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டும். தேவையற்ற இறைச்சிக் கழிவுகள், காய்கறிக் கழிவுகளை நிலத்தில் கொட்டுவதை முற்றிலும் தவிா்க்க வேண்டும்.
  • கழிவுகளை சேகரித்து அதை மறுசுழற்சிக்கு அனுப்பும் வகையில் தனியாக சேமிப்பை கிடங்கை தொடா்புடைய நிறுவனங்கள் உருவாக்கி கொள்வது அவசியம்.
  • நில மாசுபாட்டைத் தவிா்ப்போம்; நிம்மதியாக வாழ்வோம்.

நன்றி: தினமணி (21 – 12 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories