TNPSC Thervupettagam

அதிகரிக்கும் பாலியல் குற்றங்கள்: அரசாணை 121 உயிர் பெறுமா?

February 13 , 2025 4 hrs 0 min 13 0

அதிகரிக்கும் பாலியல் குற்றங்கள்: அரசாணை 121 உயிர் பெறுமா?

  • ஒரு நல்லாட்சிக்கான இலக்கணம் எது? இதற்குப் பல அளவீடுகளைச் சுட்டிக்காட்ட முடியும். அதில் குழந்தைகள் சார்ந்த அளவீடுகள் மிக முக்கியமானவை. ஓர் அரசுக்கு - குழந்தை நேயப்பார்வையும், குழந்தைகளுக்குப் பாதுகாப்பான - சுதந்திரமான சூழலை உருவாக்கும் ஆற்றலும், குழந்தைகளின் நலம் பேணலும், தரமான இலவசக் கட்டாயக் கல்வியை உறுதிப்படுத்துதலும், குழந்தைகளுக்கான சட்டங்களைச் சமரசமின்றி நடைமுறைப்படுத்தும் திறனும் இருப்பது அவசியமான அளவீடுகளில் ஒன்றாகும்.
  • குழந்தைகள் மீதான வன்முறைகளையும், பாலியல்ரீதியான, சாதியரீதியான வன்முறைகளையும் ஓர் அரசு எவ்வாறு குறைத்திருக்கிறது அல்லது கட்டுப்படுத்தியிருக்கிறது, பள்ளி மாணாக்கர்களிடையே சாதியப் பாகுபாடு இல்லாச் சமத்துவச் சிந்தனை உணர்வை எவ்வாறு ஏற்படுத்தியிருக்கிறது என்பதெல்லாம் இந்த வரையறைக்குள் அடங்கும்.
  • குழந்தை​களுக்கான இந்த அளவீடு​களைத் தமிழகக் களச்சூழலோடு ஒப்பிட்டுப் பார்க்கை​யில், ‘நல்லாட்​சிக்கான அறிகுறிகள்’ இதயத் துடிப்புக் குறியீடுபோல் மேலும் கீழுமாக இழுத்​துக்​கொண்டு இருப்பது பெரும் அச்சத்​தையும் கவலையையும் ஏற்படுத்துகிறது.
  • தமிழகத்தில் குழந்தை​களுக்கான சில அளவீடுகள் நம்பிக்கை தந்தா​லும், சில அளவீடுகள் ஆட்சி​யாளர்கள் மீதும், அரசு அதிகாரிகள் மீதும் நம்பிக்கை​யின்மையை ஏற்படுத்து​கின்றன. பள்ளி வளாகங்​களில் மாணவி​களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நடப்பது, ஆசிரியர்கள் முதல் அறங்காவலர் வரை பலர் இத்தகைய குற்றங்​களில் ஈடுபடுவது என அண்மைக்​காலமாக வெளிவரும் செய்திகள் மிகுந்த வேதனை அளிக்​கின்றன.

போக்சோ செயலாக்​கத்தில் தொய்வு:

  • நாடு முழுவதும் பாலினப் பாகுபாடின்றி 18 வயதுக்கு உள்பட்ட அனைத்துக் குழந்தை​களையும் பாதுகாப்​ப​தற்காக ‘பாலியல் குற்றங்​களில் இருந்து குழந்தை​களைப் பாதுகாக்கும் சட்டம்’ (The Protection of Children from Sexual Offences Act) 2012ஆம் ஆண்டு கொண்டு​வரப்​பட்டது.
  • இதனை ‘போக்சோ சட்டம்’ (Pocso act) எனச் சுருக்கமாக அழைக்​கிறோம். இந்தியச் சட்ட வரலாற்றில் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை​களைக் களையும் நோக்கில் வரையப்பட்ட முதல் சட்டம் இதுதான். இச்சட்டம் பாலியல் குற்றங்கள், பாலியல் துன்புறுத்தல், பாலியல் தாக்குதல், கொடூரப் பாலியல் தாக்குதல், பாலியல் பட நோக்கத்துடன் சித்திரித்தல் எனப் பல்வேறு விதமாக வகைப்​படுத்தி அவற்றுக்கான தண்டனை முறைகளை வகுத்​துள்ளது.
  • இக்குற்​றங்​களுக்கு 3 ஆண்டுகள் முதல் 20 ஆண்டுகள் வரையிலான சிறைத் தண்டனை​யும், அபராத​மும், அதிகபட்சமாக மரண தண்டனையும் வழங்க இச்சட்டம் வழிவகை செய்கிறது. அதுபோல பாதிக்​கப்பட்ட குழந்தைக்கு உடனடி மருத்​துவச் சிகிச்சை, உளவியல் ஆலோசனை, பாதுகாப்பு, நிவாரணம் வழங்கிட வேண்டும்.
  • இவ்வழக்​கு​களைச் சிறப்பு நீதிமன்றமே விசாரித்து ஓராண்​டுக்குள் தீர்ப்பும் வழங்கும். இவையெல்லாம் சட்டமாக மட்டுமே இருக்கின்றன; இன்னும் முழுமையாக உயிர் பெறவில்லை. அதாவது, இச்சட்டம் 13 ஆண்டு​களைக் கடந்தும் முழுமையாக நடைமுறைக்கு வரவில்லை. சிறப்பு நீதிமன்​றங்​கள்கூட இன்னும் முழுமையாக உருவாக்​கப்​பட​வில்லை. ஓராண்​டுக்குள் தீர்ப்பு என்பது கனவாகவே நீடிக்​கிறது. புகார் அளிப்பது முதல், தீர்ப்பு பெறுவது வரையிலான நடைமுறை​களில் பெரும் தொய்வு காணப்​படு​கிறது.

அரசாணை 121இன் முக்கி​யத்துவம்:

  • பள்ளி மாணவ / மாணவி​களிடம் முறைதவறி நடந்து​கொள்ளும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுத்தல், தவறுகள் ஏற்படாமல் தவிர்த்தல் தொடர்பாக மிக முக்கியமான அரசாணை (நிலை) எண் 121ஐ கடந்த 2012ஆம் ஆண்டு மே மாதம் அன்றைய தமிழ்நாடு அரசின் முதன்மைச் செயலாளர் த.சபிதா இ.ஆ.ப. வெளியிட்​டார்.
  • பள்ளி மாணாக்​கர்​களிடம் முன்னு​தா​ரண​மாகச் செயல்பட வேண்டிய ஆசிரியர்​களுள் சிலர் மாணவ / மாணவி​களிடம் முறைதவறி நடப்பதும், இதனால் அந்தக் குழந்தைகள் மோசமாகப் பாதிக்​கப்​படு​வதும் கவனத்தில் கொள்ளப்​பட்டது. இத்தகைய அவலநிலையைக் களைந்திட, பள்ளிக் குழந்தை​களிடம் ஆசிரியர்கள் முறைதவறி நடந்து​கொள்வதை முற்றிலும் தவிர்த்திட, உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவே இந்த அரசாணை வெளியிடப்​பட்டது.
  • இதன்படி, முறைதவறிய நடவடிக்கை​களில் ஈடுபடும் ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்து, அவர்களுக்குக் கட்டாய ஓய்வு (Compulsory Retirement) அல்லது பணி நீக்கம் (Removal) அல்லது அரசு சார்ந்த எந்தப் பணிக்கும் செல்வதைத் தடுக்கும் வகையிலான பணியறவு (Dismissal) போன்ற கடும் தண்டனை வழங்கப்​படும். குறிப்பாக அரசுப் பள்ளி ஆசிரியர்​களுக்கு, தமிழ்நாடு அரசுப் பணியாளர் நடத்தை விதி 19 (2) இதற்குப் பொருந்​தும். இவ்விதியை மீறுபவர்​களுக்கு மேற்குறிப்​பிட்ட தண்டனை​களுள் ஒன்று வழங்கப்பட வேண்டும் எனத் தமிழ்நாடு குடிமைப் பணி (ஒழுங்கு மற்றும் மேல்முறை​யீடு) விதி 8இல் கூறப்​பட்​டுள்ளது.
  • மேலும், சம்பந்​தப்பட்ட ஆசிரியரின் கல்விச் சான்றுகள் அனைத்தும் ரத்து செய்யப்​படும். பள்ளிக் குழந்தைகள் பிறரின் தவறான நடவடிக்கை​களி​லிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளும் வகையில், அவர்களுக்குப் போதிய விழிப்பு​ணர்வு ஏற்படுத்​தப்​படும். ஆசிரியர்கள் முறைதவறிய செயல்​களில் ஈடுபடாவண்ணம் உளவியல் ஆலோசகர்கள் மூலம் ஆலோசனைகள் வழங்கப்​படும்.
  • பள்ளிக் குழந்தை​களின் மனநிலையைப் பாதிக்கும் பிரச்​சினை​களைக் களைவதாக இந்த ஆலோசனைகள் இருக்கும். இதற்காக உளவியல் ஆலோசகர், உதவியாளர், அனைத்து வகை வசதிகளுடன் கூடிய நடமாடும் ஆலோசனை மையங்கள் ஏற்படுத்​தப்​பட்டு, மாணாக்​கர்​களுக்கு விழிப்பு​ணர்​வும், ஆசிரியர்​களுக்கு ஆலோசனை​களும் வழங்கப்​படும் என இந்த அரசாணையில் தெரிவிக்​கப்​பட்​டுள்ளது.
  • பள்ளி​களில் குழந்தைகள் எதிர்​கொள்ளும் பாலியல் வன்முறையைத் தடுத்திட, கடும் நடவடிக்கை எடுத்​திடக் கொண்டு​வரப்பட்ட இச்சிறப்பான அரசாணை நாடளவில் பாராட்டைப் பெற்றது. ஆனால், இந்த ஆணை இயற்றப்​பட்டு 13 ஆண்டுகள் ஆன நிலையில், இதன்படி எந்த நடவடிக்கையும் எடுக்​கப்​பட்​ட​தாகத் தெரிய​வில்லை. தமிழகத்தில் செயல்​படும் குடிமைச்சமூக அமைப்புகள், செயல்​பாட்​டாளர்கள், கல்வி​யாளர்கள் தொடர்ந்து வலியுறுத்​தியும் இந்த ஆணை இன்னும் செயல்​பாட்டுக்கு வந்தபாடில்லை.
  • முதன்மைக் கல்வி அலுவலர்கள் முதல் பள்ளிக் கல்வித் துறை அமைச்​சர்கள் வரை இந்த அரசாணையை முறையாகச் செயல்​படுத்த யாரும் தயாராக இல்லை என்றே கருத வேண்டி​யிருக்​கிறது. இத்தகைய போக்கு, குற்றமிழைக்கும் ஆசிரியர்களுக்கு ஆதரவான நிலைப்​பா​டாகவே கருதப்​படு​கிறது. கடந்த 13 ஆண்டு​களில் இந்த அரசாணை செயல்​படுத்​தப்பட்ட முறை குறித்துத் தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.

இனி என்ன செய்ய வேண்டும்?

  • தமிழகத்தில் பல மாவட்​டங்​களில் நாள் தோறும் பள்ளிக் குழந்தைகள் பாலியல்​ரீ​தியான தாக்குதலுக்கு உள்ளான சம்பவங்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. தனது சிறப்பான செயல்​பாடு​களால் கவனம் ஈர்த்து வரும் தமிழ்நாடு முதலமைச்சர், தமிழகத்தில் போக்சோ சட்டம் சமரசமின்றி நடைமுறைப்​படுத்​தப்​படு​வதையும் உறுதி​செய்திட வேண்டும். பள்ளிக் கல்வித் துறையின் அரசாணை (நிலை) எண் 121இன்படி கடுமையான நடவடிக்கை எடுக்​கப்​படுவதை உறுதி​செய்ய வேண்டும்.
  • இதன் தொடக்​க​மாகத் தற்போது கிருஷ்ணகிரி அரசுப் பள்ளியில் நடந்துள்ள சம்பவத்தில் கைது செய்யப்பட்ட மூன்று ஆசிரியர்கள் உள்பட இத்தகைய குற்றங்​களில் ஈடுபடும் அனைத்து ஆசிரியர்​களும் நிரந்தரப் பணிநீக்கம் செய்யப்​பட்டு அவர்களின் கல்விச் சான்றுகள் அனைத்தும் ரத்து செய்யப்​படுவதை அரசு உறுதி​செய்ய வேண்டும். தமிழக முதல்வர் இதில் சிறப்புக் கவனம் செலுத்தி நியாயத்தை நிலைநாட்ட நடவடிக்கை எடுத்​தால், பள்ளி​களில் பயிலும் அனைத்துக் குழந்தைகள், பெற்றோர், சமூகச் செயல்​பாட்​டாளர்​களுக்கு நம்பிக்கை துளிர்​க்​கும்​.

நன்றி: இந்து தமிழ் திசை (13 – 02 – 2025)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories