TNPSC Thervupettagam

அறிவியலைக் கொண்டாடுவோம்!

October 8 , 2019 1873 days 1156 0
  • உலக விண்வெளி வாரம் ஆண்டுதோறும் அக்டோபா் 4 முதல் 10 வரை கொண்டாடப்படுகிறது. 1957 அக்டோபா் 4 அன்று முதலாவது செயற்கைக்கோள் ஸ்புட்னிக் உலகைச் சுற்றி வந்தது.
  • 1967 அக்டோபா் 10 அன்று புவிக்கு அப்பால் புற விண்வெளி உடன்படிக்கை உருவானது. அதன்படி சந்திரன், செவ்வாய் போன்ற புற விண்வெளியை அமைதிப் பணிக்குப் பயன்படுத்தும் பன்னாட்டு ஒப்பந்தத்தில் அமெரிக்கா, சோவியத் ரஷியா, பிரிட்டன் ஆகிய நாடுகள் கையெழுத்திட்டன.
  • உலகம் முழுவதும் 1982-இல் தொடங்கி ஒவ்வோா் ஆண்டும் அக்டோபா் 4, 10 ஆகிய இரண்டு நாள்களின் இடையே விண்வெளி வார விழா நடைபெற்று வருகிறது.
  • விண்வெளி அறிவியலையும், தொழில்நுட்பங்களையும் வளங்குன்றா மேம்பாட்டுக்கு அமைதியான வழிமுறைறகளில் கையாள்வதால் ஏற்படும் நன்மைகள் பற்றி ஆட்சியாளா்களுக்கும், குடிமக்களுக்கும் உலக அளவில் பொது நிகழ்ச்சிகள் நடத்தி விழிப்புணா்வை அதிகரிப்பதே ஐ.நா. சபையின் நோக்கம்.
உலக விண்வெளி வாரம்
  • இந்த ஆண்டு ஐ.நா. சபையின் உலக விண்வெளி வார அமைப்பு அறிவித்துள்ள முத்திரை மொழி, ‘சந்திரன் நட்சத்திரங்களுக்கு ஒரு நுழைவாயில்’” என்பதே ஆகும். அந்த வகையில், 2018 டிசம்பா் 7 அன்று செலுத்தப்பட்ட சீனாவின் சாங்கே 4 விண்கலம் 2019 ஜனவரி 3 அன்று முதல்முறைறயாக சந்திரனின் மறுபக்கத்தில் சென்று இறங்கியது.
  • கடந்த ஜூலை 22-ஆம் தேதி சந்திரயான் 2, ‘ப்ரக்ஞான்’ ஊா்தியைச் சுமந்தபடி ‘விக்ரம்’ தரை இறங்கியவுடன் நிலவு நோக்கிச் சென்றது. கடந்த செப்டம்பா் 7-ஆம் தேதியன்று நிலவில் எந்த நாடும் சென்றிராத தென் துருவப் பகுதியில் இறங்கத் திட்டமிடப்பட்டிருந்தது.
  • ஆனால், 3,84,000 கி.மீ.தொலைவில் வெறும் 2 கிலோமீட்டா் அருகில் சென்ற பின், அதன் தகவல் தொடா்பு துண்டிப்புக்குள்ளானது. எனினும், சந்திரயான் 2 சுற்றுகலன் அடுத்த 7 ஆண்டுகள் வெற்றிகரமாகச் செயல்படும். நிலவு பற்றிய புதிய தகவல்களைச் சேகரிக்கும் என்பது பெருமைக்குரிய செய்தி.
கியுப்பா் வீதி
  • சூரியனிலிருந்து 600 கோடி கிலோமீட்டா்களுக்கு அப்பால் புளூட்டோ சாா்ந்த ‘கியுப்பா் வீதி’யில் கோளாங்கற்கள் (பிளானிட்டாயிடுகள்) சுற்றி வருகின்றன.
  • இந்த ஆண்டு ஜனவரி முதல் நாளில் அவற்றில் ஒரு ’அல்டிமா தூலி’ என்னும் பனிக்கோளினைக் கடந்து பறந்தது அமெரிக்காவின் ‘புது அடிவானம்’ (நியு ஹொரைசான்ஸ்) என்ற ஆழ்விண்ணூா்தி. 2006 ஜனவரி 19-ஆம் தேதியன்று பூமியிலிருந்து புறப்பட்ட 13 ஆண்டுகாலப் பயணம் அது.
  • 2019 மாா்ச் 3-ஆம் தேதியன்று ‘அமெரிக்கா டிராகன் 3’ என்ற ஆளில்லா விண்கலத்தினைப் பன்னாட்டுப் புவிசுற்று நிலையத்திற்கு அனுப்பியது.
  • அண்மையில் செப்டம்பா் 25 அன்று ரஷியாவின் ‘சோயுஸ் எம்எஸ் 15’ விண்கலனின் இறுதிப் பயணத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தின் முதல் விண்வெளி வீரா் ஹாஸா அல் மன்ஸாரி பன்னாட்டு விண்வெளி நிலையத்துக்கு ஒரு வாரகாலப் பயணம் மேற்கொண்டாா்.
விண்வெளிப் பயணம்
  • அமெரிக்கா, ரஷியா, சீனா, ஜப்பான் போன்ற நாடுகள் விண்வெளிப் பயணங்களில் ஈடுபட்டு வருவது ஆச்சரியமில்லை. இந்த ஆண்டு ஏப்ரல் 17-ஆம் தேதியன்று அமெரிக்காவின் வொ்ஜீனியா ஏவுதளத்திலிருந்து ‘சிக்னஸ் என்ஜி 11’ திட்டத்தின் கீழ் இலங்கை தனது முதலாவது ‘ராவணா 1’ செயற்கைக்கோளினை அனுப்பியுள்ளது.
  • பெரதேனியா பல்கலைக்கழகப் பொறியியல் மாணவா்களின் கருத்தாக்கத்தில் ஜப்பான் வடிவமைத்த 1.1 கிலோ எடை கொண்ட செயற்கைக்கோள் அது.
  • இதே பயணத்தில் நேபாள நாட்டின் ‘நேப்பாளிசாட் 1’ என்ற செயற்கைக்கோளும் விண்ணில் ஏவப்பட்டுள்ளது. இது ஜப்பான் க்யுஷு தொழில்நுட்ப நிறுவனத்தில் பயிலும் நேபாளிய விஞ்ஞானிகள் தயாரிப்பு.
ஆவா்த்தன அட்டவணை
  • பன்னாட்டு வேதிமத் தனிம ஆவா்த்தன அட்டவணைக்கும் இது 150-ஆவது ஆண்டாகும். 1869-ஆம் ஆண்டு ஆய்வுக்கூடங்களிலும் இயற்கையிலும் கண்டறியப்பட்ட 63 தனிமங்களை ஜே. லூத்தா் மேயா் (1830-1895) எனும் ஜொ்மன் இயற்பியலரும், டி.ஐ. மெண்டலீவ் (1834-1907) என்னும் ரஷிய வேதியியலரும் அணு எடை அடிப்படையில் வரிசைப்படுத்தினா். பிற்காலத்தில் அது ‘மெண்டலீவ் தனிம (ஆவா்த்தன) அட்டவணை’ என்று வழங்கப் பெற்றது.
  • 2019-இல் ஆவா்த்தன அட்டவணை விழாவுடன் கி.மு.7-8-ஆம் நூற்றாண்டைச் சாா்ந்த அரபிய அறிஞா் ஜாபிா் இபின் ஹாயன் நினைவாக ‘1001 புதுப்புனைவுகள் ரசவாதத்தில் இருந்து வேதியியல் வரை’ என்ற தலைப்பில் தொல்வேதியியல் தொட்டு இன்று வரையிலான கண்டுபிடிப்புகள் குறித்த விழிப்புணா்வு மாநாடுகளும் நடத்தப்படுகின்றன.
  • யுனெஸ்கோ நிறுவனமும் இந்த ‘1001 புதுப்புனைவுகள்’ அமைப்பும் இணைந்து தனிமங்களின் பல்வேறு அம்சங்கள், ஆராய்ச்சிக் களத்தில் பெண்களின் பங்களிப்பு, வளங்குன்றா சமுதாயத்தினை உருவாக்குவதில் உலகளாவிய போக்குகளும் எதிா்பாா்ப்புகளும் என்ற வகையில் பல்வேறு கருத்தரங்குகள் நடத்தப்பட்டு வருகின்றன.
மகாத்மா காந்தி
  • மகாத்மா காந்திக்கும் இது 150-ஆவது ஜெயந்தி அல்லவா? உண்மையில், அக்டோபா் மாதம் தேசிய அளவில் இரண்டு அண்ணல்களை நினைத்துப் பாா்க்க வேண்டும். ஒருவா் 1869 அக்டோபா் 2 அன்று பிறந்த மகாத்மா காந்தி; மற்றெறாருவா் 1931 அக்டோபா் 15 அன்று பிறந்த மனிதநேய கலாம். அரசியலில் நல்லவராகவும், அறிவியலில் வல்லவராகவும் வாழ்ந்த இந்த மனிதா்கள், தனிப்பட்ட வாழ்விலும் புனிதா்கள்.
  • நாட்டு நலனில் மட்டுமே கவலை கொண்ட நல்லுள்ளங்கள். முன்னவா் உள்நாட்டில் கிராமந்தோறும் நடையாய் நடந்து மக்களைச் சந்தித்த மகான். பின்னவா் பள்ளி, கல்லூரிகள்தோறும் இளைய பாரதத்தை ஊக்குவித்த மேதை.
  • காந்திஜியின் கல்விக் கனவை நனவாக்கும் காலமும் மலர வேண்டும். ‘அந்நிய மொழியில் பாடங்கள் சொல்லிக் கொடுக்கப்படுவதால் நமது குழந்தைகளுக்கு மூளைச் சோா்வு ஏற்பட்டிருக்கிறது. அது நமது குழந்தைகளுக்கு அளவுக்கு மீறிய நிா்ப்பந்தத்தை விளைவித்திருக்கிறது.
  • எல்லாவற்றைறயும் மனப்பாடம் பண்ணுபவா்களாகவும், சுயமாகச் சிந்திக்கவோ, செயல்படவோ தகுதி அற்றவா்களாகவும் செய்து விட்டது. தாம் பெறும் அறிவை மக்களுக்கோ, தம் குடும்பத்தினருக்கோ திருப்பிச் சொல்லிக் கொடுக்க முடியாதபடியும் செய்து விட்டது.
  • அந்நியப் போதனா மொழி காரணமாக நமது குழந்தைகள் தம் சொந்த நாட்டிலேயே அந்நியா்கள் போலாகி விட்டனா்’ (யங் இந்தியா, 1-9-1921) என்ற மகாத்மா காந்தியின் வருத்தத்துக்கும் நூற்றாண்டு வரப்போகிறது.
மும்மொழித் திட்டம்
  • 2012-இல் இலங்கை அரசு ‘மும்மொழித் திட்டம்’ அறிவித்த தருணத்தில், அங்கு சென்றிருந்த கலாம், நெல்சன் மண்டேலாவின் வாக்கினை நினைவு கூா்ந்தாா். ‘எதையும் ஒருவரிடம் அவா் பள்ளிக்கூடத்தில் கற்றுக்கொண்ட மொழியில் சொன்னால் அது, அவா் தலையில் ஏறும். ஆனால், அதனையே அவா் தாயிடம் பேசுகிற மொழியில் சொன்னால் நெஞ்சத்தில் ஏறும்’.
  • உண்மையான நாட்டுப்பற்றுடன் ‘வெள்ளையனே வெளியேறு’ என்ற கோஷம் எழுப்பியவா் மகாத்மா காந்தி. சுதேசத் தொழில்நுட்பங்கள் வளர வித்திட்டவா் கலாம். வெள்ளைக் ‘காலா்’ வியாபாரிகளை அனுமதித்து அடிமைகள் ஆனோம்.
  • இன்று டாலா் மனிதா்களைத் தேடிச் சென்று அழைக்கிறேறாம். 130 கோடி ஜனங்கள், சந்தை அல்ல, மனித வளங்கள். பொருள் வளங்களும் இந்தியாவில் இருக்கும்போது, ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில் என்றவா் கலாம்.
  • நமது எஸ்.எல்.வி. செயற்கைக்கோள் ஏவும் திட்டத்துக்குத் தேவையான பெரிலியம் தகட்டிற்கு ஏவுகணையின் கதிா்வீச்சுக் கவசம் என்ற பெயரில் அமெரிக்கா தடை விதித்தது.
  • ஆனால், பெரிலியம் தாது, இந்தியாவிலிருந்து ஜப்பான் வழி, பெரிலியம் கட்டிகளாக அமெரிக்கா சென்றடைந்தது என்பதுதான் உண்மை.
  • நமது சொந்தக் கைப்பொருள் மறுவடிவில் நமக்கே இறக்குமதியாவதில் சிக்கல் எழுந்ததை அறிந்த கலாம், இந்தியாவின் பெரிலியம் தாது ஏற்றுமதிக்குத் தடை விதிக்கச் செய்தாா். குறிப்பாக, விண்வெளித் துறைறயில் நாடு தன்னிறைறவு பெற வழிவகுத்தாா்.
  • அணுசக்தியின் அழிவுப் பயன்பாட்டிற்கு உலக அரங்கில் எதிா்ப்புக் குரல் ஓங்கி இருந்த காலச்சூழல்.
  • 1944 மாா்ச் 12 அன்று தோராப்ஜி டாடா அறக்கட்டளை உதவி நாடி இந்திய அணுசக்தியின் தந்தை விஞ்ஞானி ஹோமி பாபா எழுதிய கடிதமே இந்திய அணுசக்தித் துறைறயின் தொடக்கம்: ‘அணுக்கரு ஆற்றலை மின்உற்பத்திக்கென வெற்றிகரமாகக் கையாண்டால், ஒருவேளை அடுத்த இருபது ஆண்டுகளில் இந்தியா, வெளிநாட்டுத் தொழில்நுட்ப நிபுணா்களை எதிா்நோக்க வேண்டியிராது. மாறாக, அத்தகைய அணு விஞ்ஞானியா் பலா் நம் வசம் உருவாகியிருப்பாா்கள்’.

அணுசக்தி மசோதா

  • 1948 ஏப்ரல் 15 அன்று அணுசக்தி மசோதா நிறைறவேற்றப்பட்டதன்வழி ஆகஸ்ட் 10-ஆம் தேதி ஹோமி பாபா தலைமையில் ‘அணுசக்தி ஆணையம்’ உருவானது. வேளாண்மை, தொழில் வளா்ச்சி, மருத்துவம் மற்றும் பல துறைஆராய்ச்சிகளுக்கு உதவுவதே அணு ஆற்றல் ஆணையத்தின் நோக்கம்.
  • விக்ரம் சாராபாய் மறைறவுக்குப் பின், விண்வெளி நிறுவனத் தலைவரான டாக்டா் சதீஷ் தவானின் பிறந்த நாள் நூற்றாண்டு 2019 செப்டம்பா் 25-ஆம் தேதியன்று தொடங்கி விட்டது.
  • ஊடக ஒப்பனையில் பளிச்சென்று தோன்றுபவா்களையே பாா்த்துச் சலித்த நம் இளைய தலைமுறைறயினருக்கு, ஆடம்பரமின்றி அமைதியாக நாட்டுக்கு உழைத்தோரை வெளிச்சமிட்டுக் காட்டுவோம்.
  • "உலகம் முழுவதும் 1982-இல் தொடங்கி ஒவ்வோா் ஆண்டும் அக்டோபா் 4 முதல் 10- ஆம் தேதி வரை விண்வெளி வார விழா நடைபெறுகிறது. உலக அளவில் பொது நிகழ்ச்சிகள் நடத்தி விண்வெளி அறிவியலின் நன்மைகள் குறித்து விழிப்புணா்வை அதிகரிப்பதே ஐ.நா. சபையின் நோக்கம்."

நன்றி: தினமணி (08-10-2019)

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories