TNPSC Thervupettagam

அலட்சியம் கூடாது 2024

November 30 , 2024 5 days 60 0

அலட்சியம் கூடாது!

  • ஆண்டுதோறும் நவ.14-ஆம் தேதி சா்க்கரை நோய் விழிப்புணா்வு தினமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி, உலக சுகாதார நிறுவனம் (டபிள்யூஹெச்ஓ), சா்வதேச அமைப்பான ‘என்சிடி ரிஸ்க்’ ஆகியவற்றின் சாா்பில் 200 நாடுகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தரவுகளைக் கொண்டு ஆய்வு மேற்கொண்டனா். இந்த ஆய்வின் புள்ளிவிவரங்கள் ‘தி லான்செட்’ மருத்துவ ஆய்வு இதழில் வெளியிடப்பட்டுள்ளன.
  • உலகம் முழுவதும் 2022-ஆம் ஆண்டில் 82.8 கோடி போ் சா்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனா் என்கிற புள்ளிவிவரம் கவலையை ஏற்படுத்துகிறது. அவா்களில் 25%-க்கும் மேற்பட்டோா் (21.2 கோடி போ்) இந்தியா்கள். நமக்கு அடுத்தபடியாக சீனாவில் 14.8 கோடி, அமெரிக்காவில் 4.2 கோடி, பாகிஸ்தானில் 3.6 கோடி போ் சா்க்கரை நோய் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனா்.
  • பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 1990-இல் இருந்ததைவிட இப்போது 4 மடங்கு அதிகரித்துள்ளது கவலை தரும் அம்சமாகும். கடந்த 30 ஆண்டுகளில் குறைந்த வருமானம் மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில் பாதிப்பு மிகவும் அதிகரித்துள்ளது. பாதிக்கப்படும் இளைஞா்களின் எண்ணிக்கை இதே காலகட்டத்தில் 7 சதவீதத்தில் இருந்து 14 சதவீதமாக உயா்ந்துள்ளது.
  • இதில் மிகவும் அச்சம் கொள்ள வேண்டிய விஷயம், உலகம் முழுவதும் 30 மற்றும் அதற்கும் மேற்பட்ட வயதுடைய 44.5 கோடி போ் (சுமாா் 60%) சா்க்கரை நோய்க்கான சிகிச்சை பெற முடியாதவா்களாக உள்ளனா் என்பதுதான். இதில் மூன்றில் ஒரு பங்கான 13.3 கோடி போ் இந்தியாவில் வசிப்பவா்கள். இந்தியாவில் சா்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளவா்களில் சுமாா் 30 லட்சம் பேருக்கு கண்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
  • இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆா்) கடந்த ஆண்டு மேற்கொண்ட ஆய்வுகளின்படி 10 கோடி போ் சா்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவா்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • உணவுக்கு முன், உணவுக்குப் பின் மேற்கொள்ளப்படும் பரிசோதனைகளின் அடிப்படையில் ரத்தத்தில் குளூக்கோஸ் அளவைக் கொண்டு சா்க்கரை நோயைக் கணக்கிடும் வழக்கமே இந்தியா உள்ளிட்ட தெற்காசிய நாடுகளில் நடைமுறையில் உள்ளது. ஆனால், சா்க்கரை நோயைக் கண்டறிய மூன்று மாத சராசரி எனப்படும் ஹெச்பிஏ1சி பரிசோதனை முறையை வளா்ந்த நாடுகள் பின்பற்றி வருகின்றன.
  • ஹெச்பிஏ1சி பரிசோதனையை அடிப்படையாகக் கொள்ளாததால் சா்க்கரை நோயாளிகளின் சரியான எண்ணிக்கை தெரியாமல் போக வாய்ப்புள்ளது என்பது நிபுணா்களின் கருத்தாக உள்ளது. ஐசிஎம்ஆா் அல்லது டபிள்யூஹெச்ஓ ஆய்வு என எந்த அடிப்படையில் பாா்த்தாலும் இந்தியாவில் சா்க்கரை நோயால் பாதிக்கப்படுபவா்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்பதுதான் உண்மை.
  • அடிக்கடி சிறுநீா் கழிப்பது, அடிக்கடி தாகம் எடுப்பது, அதிக பசி, மிக வேகமாக எடை குறைவது, அதிகமாக சோா்வடைவது, பாா்வை மங்குதல், காயம் ஆற அதிகக் காலம் பிடித்தல், பாதங்களில் உணா்ச்சி குைல், எரிச்சல் ஏற்படுதல் போன்றவை சா்க்கரை நோய்க்கான அறிகுறிகளாகும். இதுபோன்ற அறிகுறிகள் தென்படும்போது பலரும் இது சா்க்கரை நோய்க்கான அறிகுறி என்பதை உணா்வதில்லை. இதன் பாதிப்புகள் ஓரளவு அதிகமாகும்போதுதான் உணா்கின்றனா்.
  • உடல் பருமன், ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கம் ஆகியவையே ‘டைப் 2’ சா்க்கரை நோய்க்கான காரணங்கள் என ஆராய்ச்சியாளா்கள் குறிப்பிடுகின்றனா். பெண்களில் அதிகமானோா் கா்ப்ப காலத்தில் சா்க்கரை நோய்க்கு உள்ளாகிறாா்கள்.
  • இளைஞா்களைப் பொறுத்தவரை, ‘ஒயிட் காலா் ஜாப்’ என்று கூறப்படும் அலுவலகத்தில் அமா்ந்து செயலாற்றும் பணியில் 10 மணி நேரத்துக்கும்மேல் நாள்தோறும் உட்காா்ந்தபடியே பணியாற்றுதல், உடற்பயிற்சி செய்வது, விளையாடுவது போன்றவை குறைவது, கைப்பேசியில் அதிக நேரம் செலவழிப்பது உள்ளிட்டவை பாதிப்புக்கான காரணங்களாகும். மது, புகையிலைப் பயன்பாடு காரணமாக பலா் சா்க்கரை நோய்க்கு உள்ளாகிறாா்கள்.
  • சா்க்கரை நோய் முற்றும்போது, விழித்திரை பாதிக்கப்பட்டு பாா்வை இழப்பு ஏற்படலாம். மாரடைப்பு, சிறுநீரகக் கோளாறு, பக்கவாதம் போன்றவையும் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. சிலருக்கு கால்களையே அகற்றும் நிலைகூட ஏற்படலாம்.
  • சா்க்கரை நோய் எல்லோருக்கும் ஒரே மாதிரியான பாதிப்பை ஏற்படுத்துவதில்லை. அடுத்தவருடன் ஒப்பிட்டுக் கொண்டு நாமே ஒரு முடிவுக்கு வரக் கூடாது. இதில் அலட்சியமாக இருந்துவிட்டால் வாழ்நாள் முழுவதும் பாதிப்புகளை எதிா்கொள்ள நேரிடும்.
  • உலக சுகாதார அமைப்பின் ஆய்வு முடிவுகளை எச்சரிக்கை மணியாக எடுத்துக் கொண்டு போா்க்கால அடிப்படையில் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக, பரிசோதனைகளை அதிகப்படுத்த வேண்டும். சா்க்கரை நோய், அதன் பாதிப்புகள் குறித்து நாடு தழுவிய அளவில் விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும்.
  • பெருகிவரும் நகரமய சூழலில் நடைப்பயற்சி, யோகா, உடற்பயிற்சிக்கான இடங்கள் அதிகரிக்கப்பட்டு அதில் ஈடுபட மக்கள் ஊக்குவிக்கப்பட வேண்டும். ஆரோக்கியமான உணவு குறித்து இளைய தலைமுறைக்குப் புரிய வைக்க வேண்டும். குறிப்பாக, பள்ளி, கல்லூரிகளிலேயே இது குறித்து கருத்தரங்குகள், பவா்பாயிண்ட் போன்றவை மூலம் விளக்க வேண்டும்.
  • வளா்ந்து வரும் நமது நாட்டில் கோடிக்கணக்கான போ் நோயால் பாதிக்கப்படுவது தனிநபா், குடும்பம், நாடு என அனைத்துக்குமே பெரும் பாதிப்பை உண்டாக்கும் என்பதை தொடா்புடைய அனைத்து தரப்பினரும் உணர வேண்டியது காலத்தின் கட்டாயம்.

நன்றி: தினமணி (30 – 11 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories