- உலூரு அல்லது உலுறு (Uluru) என்பது ஆஸ்திரேலியாவின் மத்திய பகுதியில், வட ஆட்புல ஆட்சிப் பகுதியின் தெற்கே அமைந்துள்ள ஒரு பெரும் மணற்கல் பாறையைக் குறிக்கும். வடக்கு ஆஸ்திரேலியாவின் பகுதியில் 'ஆலிஸ் ஸ்பிரிங்ஸ்' (Alice Springs) என்ற ஊரில் இருந்து 500 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. ஒரே பாறையால் ஆன இந்தக் குன்று உலகிலேயே மிகப் பெரியது.
- இந்தப் பாறைக் குன்றின் இயற்கை நிறம் கருங்கல் பாறைகளுக்கே உள்ள நீலம் கலந்த சாம்பல் நிறம்தான். ஆனால், வெயில் படும்போது அது சிவப்பு நிறத்தில் மாறிவிடுகிறது. நண்பகலில் பழுப்பு நிறமாகவும், மாலைப் பொழுதில் நீலம் கலந்த சிவப்புப் பாறையாகவும் தோற்றமளிக்கும்.
- பாறையில் உள்ள தனிமங்கள் சூரிய வெப்பத்தை உள்வாங்கிக்கொள்ளும் போது ஏற்படும் மாற்றத்தாலேயே இப்படி வெவ்வேறு நிறங்களில் தோற்றமளிக்கின்றன.
அதிசயப் பாறை
- இந்த அதிசயப் பாறையை நில அளவியலாளர் 'வில்லியம் கோஸ்' (Surveyor William Gosse) என்பவர் முதன்முதலில் 1873இல் வெளி உலகுக்கு அறிமுகப்படுத்தினார்.
- தெற்கு ஆஸ்திரேலியாவின் அப்போதைய தலைமைச் செயலரான 'சர் ஹென்றி ஏயர்ஸ்' (Sir Henry Ayers) என்பவர் பெயரை அந்த கற்பாறைக்குச் சூட்டினார். இதன் காரணமாக 'ஏயர்ஸ் பாறை' (Ayers Rock) என்ற பெயரிலும் இது அழைக்கப்படுகிறது.
- உண்மையில் இந்தப் பாறை சிவப்பு நிறம் கொண்டதாகும். சூரிய உதயத்தின் போதும், மறைவின் போதும் இதன் நிறம் மாறுகிறது. சூரியன் உதிக்கும்போது அதன் கிரணங்கள் இதில் பட்டு ஊதா மற்றும் அடர்ந்த சிவப்பு நிறத்தில் தக தக என எரிவது போல் தோற்றமளிக்கும்.
- இதேபோல், சூரியன் மறையும் போது ஊதா நிறம் இதில் படிந்திருப்பதைப் பார்க்கலாம். காலையிலிருந்து மாலை வரை சூரியனின் வெப்பநிலை மாற மாற இதன் நிறங்களும் மஞ்சள், ஆரஞ்சு, சிவப்பு, ஊதா என மாறிக் கொண்டே இருக்கும்.
தட்ப வெப்ப நிலை
- இடத்திற்கேற்ப தன் நிறத்தை மாற்றிக் கொள்ளும் பச்சோந்தியைப் போல தட்ப வெப்ப நிலைக்கேற்ப தன் நிறத்தை மாற்றிக் கொள்ளும் குன்று இது. இதனால் இது பச்சோந்திக் குன்று என்றும் அழைக்கப்படுகிறது.
- இப்பகுதியில் வாழும் அனங்கு இன பழங்குடிகளுக்கு உலுறு ஒரு புனிதமான இடமாகக் கொள்ளப்படுகிறது. முழுவதும் மணற்பாறைகள் மற்றும் சிறு சிறு கற்களால் உருவான பாறைகளால் ஆனது இக்குன்று.
- முட்டை வடிவம் கொண்ட இப்பாறையின் அடிவாரத்தில் உள்ள குகைகளில் மிகப் பழமையான பழைய ஓவியங்களும் செதுக்கப்பட்ட சில உருவங்களும் உள்ளன.
- ஏயர்சு குன்று உலகிலேயே தனிக் குன்றாக இருக்கும் மிகப் பெரிய பாறைகளில் இரண்டாவது இடத்தில் உள்ளது. இது 338 மீட்டர் உயரமும் அடிப்பாகத்தில் 10 கி.மீ அகலமும் கொண்டது.
- இந்தப் பாறைக்கு அருகில் மவுன்ட் ஓல்கா தேசியப் பூங்காவை ஆஸ்திரேலிய அரசு அமைத்துள்ளது.
- இந்தப் பாறையையும், பூங்காவில் உள்ள கங்காரு, பன்டிகூட்ஸ் போன்ற பல அரிய விலங்குகளையும் காண உலகெங்கிலும் ஆயிரக்கணக்கானவர்கள் வருகின்றனர்.
- இது ஆஸ்திரேலியாவின் சுற்றுலாத் தலமுமாகும்.
நன்றி: தினமணி (29-10-2019)