TNPSC Thervupettagam

இந்தியாவில் குழந்தைத் திருமணம்

November 27 , 2024 50 days 74 0
  • இந்தியாவில் ஒரு நிமிடத்தில் மூன்று குழந்தைத் திருமணங்கள் நடப்பதாகச் சமீபத்திய ஆய்வு கூறுகிறது. ‘இந்தியா சைல்டு புரொடெக்ஷன்’ (India Child Protection) என்னும் குழந்தைகள் உரிமைப் பாதுகாப்பு அமைப்பு வெளியிட்டிருக்கும் இந்த ஆய்வறிக்கையில், “இந்தியாவில் ஒரு நிமிடத்தில் 3 சிறுமிகளுக்குக் குழந்தைத் திருமணம் நடைபெறுகின்றன; அதேநேரத்தில், குழந்தைத் திருமணம் தொடர்பாக ஒரு நாளில் 3 வழக்குகள் மட்டுமே பதிவுசெய்யப்படுகிறது” எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
  • 2011 மக்கள்​தொகைக் கணக்கெடுப்பு, தேசியக் குற்ற​வியல் ஆவணக் காப்பகப் பதிவுகள், தேசியக் குடும்ப நல ஆய்வு ஆகியவற்றின் தரவுகளின் அடிப்​படையில் இந்த ஆய்வு முடிவு வெளியிடப்​பட்​டுள்ளது. உலக நாடுகளில் குழந்தைத் திருமணங்கள் அதிகம் நடைபெறும் நாடாக இந்தியா உள்ளது. உலகளவில் நடைபெறும் குழந்தைத் திருமணங்​களில் 45% தெற்காசி​யாவில் நடைபெறுகின்றன. இதில் 34% இந்தியாவில் நடப்ப​தாகத் தரவுகள் தெரிவிக்​கின்றன.

இந்தியா - தமிழ்நாடு:

  • இந்தியச் சட்டங்​களின்படி பெண்களின் திருமண வயது 18, ஆண்களின் திருமண வயது 21 என வரையறுக்​கப்​பட்​டுள்ளது. இதற்குக் குறைவான வயதுடையோர் இடையே நடைபெறும் திருமணங்கள் குழந்தைத் திருமணங்கள் என அழைக்​கப்​படு​கின்றன. இந்தியாவில் 20-24 வயதுக்கு உள்பட்ட பெண்களில் 18 வயதுக்கு முன் திருமணம் செய்து​வைக்​கப்​பட்​ட​வர்கள் எத்தனை பேர் என்பதே குழந்தைத் திருமணத்தைக் கணக்கிடு​வதற்கான பொதுவான அளவுகோல்.
  • அதன்படி, இந்தியாவில் 20-24 வயதுப் பிரிவைச் சேர்ந்த பெண்களில் குழந்தைத் திருமணம் செய்து​வைக்​கப்​பட்​ட​வர்கள் மேற்கு வங்கம் (42%), பிஹார் (41%), திரிபுரா, (40%) ஜார்க்​கண்ட் (32%), அசாம் (31%) ஆகிய மாநிலங்​களில் அதிகமாக உள்ளதாக தேசியக் குடும்ப சுகாதார ஆய்வு - 5இல் (2019 - 2021) தெரிவிக்​கப்​பட்​டுள்ளது. நாகாலாந்து (6%), இமாச்சலப் பிரதேசம் (5%), ஐம்மு - காஷ்மீர் (5%), லடாக் (3%), லட்சத் தீவுகள் (1%) போன்ற மாநில/மத்திய ஆட்சிப் பகுதி​களில் இதே வயதுப் பிரிவைச் சேர்ந்த பெண்களில் குழந்தைத் திருமணம் செய்து​வைக்​கப்​பட்​ட​வர்கள் குறைவாக உள்ளனர்.
  • தமிழ்நாடு போன்ற வளர்ச்​சி​யடைந்த மாநிலங்​களிலும் குழந்தைத் திருமணங்கள் கரோனா காலத்​துக்குப் பிறகு கணிசமாக அதிகரித்​துள்ளன. தமிழ்​நாட்டில் ஒரு நாளில் சராசரியாக 10 குழந்தைத் திருமணங்கள் நடப்ப​தாகத் தமிழ்நாடு அரசின் சமூகநலன் - மகளிர் உரிமைத் துறை வெளியிட்​டுள்ள புள்ளி​விவரங்கள் கூறுகின்றன.

வறுமையும் வேலையின்​மையும்:

  • குழந்தைத் திருமணங்​களுக்கு முதன்மைக் காரணம் குடும்பத்தில் நிலவும் வறுமை. குடும்பத்தின் பொருளா​தாரச் சூழல் வலிமையாக இல்லாத​போது, பெண் குழந்தை​களைச் சிறு வயதிலே திருமணம் செய்து​வைக்கும் முடிவைப் பெற்றோர் எடுக்​கின்​றனர். குழந்தை​களுக்குக் கல்வி சரியாகக் கிடைக்​காத​போதும், பொருளா​தாரச் சூழல் உள்ளிட்ட காரணங்​களால் கல்வி கற்பதில் தடை ஏற்படும்​போதும் குழந்தைத் திருமணங்கள் அதிகரிக்​கின்றன.
  • அடுத்து வேலையின்மை. உள்ளூரில் வேலைவாய்ப்பு இல்லாத சூழலில் பிழைப்புத் தேடிப் பிற மாவட்​டங்​களுக்குச் செல்லும் பெற்றோர் பாதுகாப்பு குறித்த அச்சத்தின் காரணமாக, பெண் குழந்தை​களுக்குப் பதின்​பருவம் தொடங்கிய உடனேயே திருமணம் செய்து​வைக்கும் போக்கும் தொடர்​கிறது. குழந்தைத் திருமணம் நகரங்​களைக் காட்டிலும் கிராமங்​களில் கூடுதலாகப் பதிவாகிறது. கிராமங்​களில் 20-24 வயதுப் பெண்களில் 27% பேர் குழந்தைத் திருமணம் செய்து​வைக்​கப்​பட்​ட​வர்கள். நகரங்​களில் 15%.

கொடிய விளைவுகள்:

  • குழந்தைத் திருமணங்​களால் பெண் குழந்தை​களின் கல்வி பறிக்​கப்​படு​வ​தால், தமது அனைத்துத் தேவைகளுக்கும் குடும்பத்​தினரையே அவர்கள் சார்ந்​திருக்கும் சூழல் ஏற்படு​கிறது. குறிப்பாக, இத்திரு​மணங்கள் சிறுமிகளைக் குடும்ப வன்முறைக்கும் சுரண்​டலுக்கும் உட்படுத்து​கின்றன.
  • இந்தியாவில் கட்டாயப்​படுத்​தப்​பட்டுத் திருமணம் செய்து​வைக்​கப்​படும் சிறுமிகளில் 60%க்கும் அதிகமானோர் ரத்தசோகையால் பாதிக்​கப்​படு​கின்​றனர். இப்பா​திப்பால் இவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகள் ஊட்டச்​சத்துக் குறைபாட்டுடன் பிறக்​கின்றன. பிரசவத்​தின்போது குழந்தை இறப்பும் நிகழ்​கிறது.

குழந்தைத் திருமணத்தைத் தடுக்க...

  • குழந்தைத் திருமணங்​களைத் தடுக்​க​வும், குழந்தைத் திருமணங்​களில் ஈடுபடு​பவர்​களுக்கு எதிராகத் தண்டனை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் ‘குழந்தைத் திருமணத் தடைச் சட்டம்’ (2006) இயற்றப்​பட்​டுள்ளது. இந்தச் சட்டத்​தின்படி, குழந்தைத் திருமணம் நடத்திவைப்​பவர், திட்ட​மிட்​டவர், திருமணச் சடங்கை நிகழ்த்​துபவர் ஆகியோ​ருக்கு அதிகபட்சமாக 2 ஆண்டுகள் கடுங்​காவல் தண்டனை அல்லது ரூ.1 லட்சம் அபராதம் அல்லது இரண்டும் வழங்கப்​படு​கிறது. ஆனால், திருமணத்தை நடத்தி​வைத்​த​தாகக் குற்றம்​ சாட்​டப்​பட்​டவர், தான் செய்து​வைத்தது குழந்தைத் திருமணம் என்பது தனக்குத் தெரியாது என்பதை நிரூபித்தால் அவர் தண்டனையிலிருந்து தப்பிவிட முடியும்.
  • குழந்தைத் திருமணங்​களைத் தடுக்கப் பெண்களின் திருமண வயதை 18இலிருந்து 21 ஆக உயர்த்த வழிவகை செய்யும் சட்டம் இமாச்சலப் பிரதேசச் சட்டப்​பேர​வையில் நிறைவேற்​றப்​பட்​டிருக்​கிறது. தேசிய அளவிலும் இச்சட்​டத்தைச் செயல்​படுத்த மாநிலங்​களில் தொடர்ந்து விவாதங்கள் நடத்தப்​பட்டு​ வரு​கின்றன. மேலும், குழந்தைத் திருமணம் தொடர்​பாகப் புகார் அளிக்க 1098 என்கிற எண்ணும் அரசுத் தரப்பில் அறிவிக்​கப்​பட்​டுள்ளது.

முன்னு​தா​ரணமான அசாம்:

  • குழந்தைத் திருமணத்தைக் கட்டுப்​படுத்தும் நடவடிக்கை​களில் இந்தியாவில் பிற மாநிலங்​களுக்கு அசாம் முன்னு​தா​ரண​மாகி​யுள்ளது. 2021 - 2022, 2023 - 2024 காலக்​கட்​டங்​களில் அசாமில் 20 மாவட்​டங்​களில் உள்ள 1,132 கிராமங்​களில் குழந்தைத் திருமணம் கிட்டத்தட்ட 81% குறைந்​துள்ள​தாகத் தேசியக் குடும்ப சுகாதார ஆய்வு கூறுகிறது. அசாமில் 2021 - 2022இல், 3,225 குழந்தைத் திருமணங்கள் பதிவான நிலையில், இந்த எண்ணிக்கை 2023 - 2024இல் 627 ஆகக் குறைந்​துள்ளது.
  • 2023இல் மட்டும் குழந்தைத் திருமணம் தொடர்பாக 3,000 கைது நடவடிக்கைகளை அசாம் அரசு மேற்கொண்​டிருக்​கிறது.
  • 2022இல் பதிவான, 3,563 குழந்தைத் திருமண வழக்கு​களில் வெறும் 181 வழக்குகள் மட்டுமே வெற்றிகரமாக முடித்து வைக்கப்​பட்​ட​தாகச் சுட்டிக்​காட்டும் குழந்தை நல ஆர்வலர்கள், குழந்தைத் திருமணங்​களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கைகளை நடைமுறைப்​படுத்​தியதன் மூலமே அசாமில் குழந்தைத் திருமணங்கள் குறைந்​திருப்​ப​தாகத் தெரிவிக்கின்றனர்.

யுனிசெஃப் கணிப்பு:

  • குழந்தைத் திருமணங்கள் அனைத்தும் கட்டாயத் திருமணங்களே எனச் சுட்டிக்​காட்டும் உச்ச நீதிமன்றம், அத்திரு​மணங்கள் நிகழாமல் தடுப்பது மிகவும் முக்கியம் என வலியுறுத்​தி​யிருக்​கிறது. இந்தியாவில் 2006இல் 20-24 வயதுடைய பெண்களில் 47% பெண்கள் குழந்தைத் திருமணம் செய்து​வைக்​கப்​பட்​ட​வர்களாக இருந்​தனர். 2019-21 இல் இது 23.3% ஆகக் குறைந்துள்ளது. இருப்​பினும், ஆந்திரப் பிரதேசம், அசாம், பிஹார், ஜார்க்​கண்ட், ராஜஸ்​தான், தெலங்​கானா, திரிபுரா, மேற்கு வங்காளம் போன்ற மாநிலங்​களில் குழந்தைத் திருமணங்களின் எண்ணிக்கை தேசியச் சராசரியைவிட அதிகமாகவே உள்ளது.
  • 2030க்குள் தெற்காசி​யாவில் குழந்தைத் திருமணங்​களின் எண்ணிக்கை குறைந்​தாலும் அவற்றை முழுமையாக அகற்ற 55 ஆண்டுகள் தேவைப்​படலாம் என ஐ.நா. குழந்தை நல அமைப்பான யுனிசெஃப் கணித்​துள்ளது. இதைக் கவனத்தில் கொண்டு, வரும் காலத்தில் குழந்தைத் திருமணம், குழந்தை மகப்பேறு குறித்த பாடங்​களைப் பள்ளிக் கல்வியில் அறிமுகப்​படுத்​துதல், பாலியல் கல்வியை அறிமுகம் செய்தல் போன்ற விழிப்பு​ணர்வு நடவடிக்கை​களில் அரசு இறங்க வேண்​டும். குழந்தைத் ​திரு​மணங்​களில் ஈடு​படு​வோரைத் தண்​டிப்​ப​தற்கான சட்​டங்​களையும் வலுப்​படுத்த வேண்​டும்.

நன்றி: இந்து தமிழ் திசை (27 – 11 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories