TNPSC Thervupettagam

இயற்கை அறிவியலின் முகமறியாப் பங்களிப்பாளர்கள்

January 27 , 2024 178 days 231 0
  • பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் தாவரங்களையும் விலங்குகளையும் அறிவியல் முறைப்படி ஆவணப்படுத்த ஆரம்பித்தனர். இது தவிர கனிம வளங்களைக் கண்டறிதல், மானுடவியல், இனவரைவியல், நிலப்படங்கள் தயாரித்தல் எனப் பல அறிவியல் துறைகளில் அவர்களது ஆதாயத்திற்காக ஆராய்ச்சிகளை முன்னெடுத்துப் பல நூல்களையும் கட்டுரைகளையும் பதிப்பித்தனர்.
  • இவற்றில் பெரும்பாலும் ஆங்கிலேயர்களின் பெயர்களே முதன்மையாக இருக்கும். எனினும், உள்ளூர் மக்கள் பலரும் அவர்களுடைய களப்பணியிலும், நூல்களை எழுதுவதிலும், அதற்கான ஓவியங்களை வரைவதிலும் பல வகையில் பங்களித்துள்ளனர். ஆனால் அவர்களது பெயர்களை வெகு அரிதாகவே நாம் அந்தப் படைப்புகளில் காண முடியும்.
  • அது போலவே அறிவியல் துறையில் ஆரம்ப காலத்திலிருந்தே பெண்கள் பலர் பெரும் பங்களித்திருந்தாலும் (அவர்கள் ஆங்கிலேயர்களாக இருந்தாலும்கூட), அவை அறியப்படாமலோ, கண்டுகொள்ளப்படாமலோ, அவர்களது படைப்புகள் வேண்டுமென்றே இருட்டடிப்புச் செய்யப்பட்டோ, தகுந்த அங்கீகாரம் தரப்படாமலோதான் இருந்திருக்கின்றன.

https://static.hindutamil.in/hindu/uploads/common/2024/01/27/17063285742006.jpg

சோலைக்கிளி ஓவியம். லிதகிராப் சி.வி. கிஸ்ட்னராஜு

  • ஓவியங்களைப் பொறுத்தவரை பல படைப்புகளில் அவற்றை வரைந்தது யார் என்பதே குறிக்கப்படாமல் இருக்கும். இதனால் வரையப்பட்ட விதத்தையோ தனித்துவத்தை வைத்தோதான் இவை ஒரே ஓவியரால் வரையப்பட்டிருக்கலாம் என்று அனுமானிக்கப்பட்டது.
  • இந்திய ஓவியர்களுக்கு இயற்கை சார்ந்த ஓவியங்களை வரையும் அனுபவம் இல்லாததால், தாவரங்களையும் விலங்குகளையும் நுணுக்கமாக, உள்ளதை உள்ளபடி வரைவதற்கு ஆங்கிலேயர்கள் அவர்களுக்குப் பயிற்சியளித்தனர். அதற்கு முன் இவர்கள் பெரும்பாலும் அரசவை ஓவியர்களாகப் பணிபுரிந்தவர்களாக இருந்திருக்கக்கூடும்.
  • தென்னிந்தியாவைப் பொறுத்தவரை, பெரும்பாலான ஓவியர்கள் தஞ்சாவூர் பாணி ஓவியங்களை வரையும், மூச்சீஸ் (Moochies) என்று அழைக்கப்பட்ட தெலுங்கு பேசும் ராஜு, நாயுடு சமூகத்தைச் சேர்ந்தவர்களாகவே இருந்திருக்கின்றனர். இவர்கள் விஜயநகரப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பின் தற்போதுள்ள ஆந்திரப் பகுதிகளில் இருந்து தெற்கு நோக்கிப் புலம்பெயர்ந்தவர்களாக இருக்கலாம்.

https://static.hindutamil.in/hindu/uploads/common/2024/01/27/17063286572006.jpg

வெள்ளி மடந்தைத் தாவரத்தின் ஓவியம்.

  • இதை வரைந்த ரங்கையாவின் பெயரை ஒரு மூலையில் காணலாம்
  • சோழ மண்டலக் கடற்கரைப் பகுதிகளில் உள்ள தாவரங்களை 1780 களில் ஆவணப்படுத்திய வில்லியம் ராக்ஸ்பர்க் தாமிரத் தகட்டில் செதுக்கி (Engraving) வரையப்பட்ட ஓவியங்களையும், அச்சுக் கட்டைகளைக் (Wood block) கொண்டு துணிகளில் அச்சிடும் சீந்த் (ஆங்கிலத்தில் Chintz) அச்சு ஓவியர்களை வைத்துமே தனக்குத் தேவைப்பட்ட தாவர ஓவியங்களை வரையவைத்துள்ளார்.
  • மதராஸ் மாகாண வனத்துறையின் முதல் வனக்காப்பாளரான ஹ்யூ கிளெக்ஹான் தற்போதைய கர்நாடகத்தில் உள்ள ஷிமோகாவில் இருந்தபோது சந்தனமரக் கடைசலில் ஈடுபடும் சமூகத்தினரை வைத்து அங்குள்ள தாவரங்களை சுமார் 500 ஓவியங்களில் ஆவணப்படுத்தினார். எனினும், இவற்றில் ஒன்றில்கூட இவற்றை வரைந்த ஓவியரின் பெயர் இல்லை.
  • தென்னிந்தியாவின் தாவர வகைப் பாட்டியலின் முன்னோடிகளில் ஒருவரான ராபர்ட் வைட் 1840களில் எழுதிய தாவரவியல் நூல்களில் கற்பாள அச்சுமுறையில் அச்சடிக்கப்பட்ட (லிதகிராப்) ஓவியங்களைத் தந்துள்ளார். இதே காலகட்டத்தில் இருந்த மற்ற ஆங்கிலேய உயிரியலாளர்களைப் போல அல்லாமல், இவரது நூல்களில் உள்ள ஓவியங்களில் வரைந்தவர்களின் பெயரைக் காணலாம். குறிப்பாக ரங்கையா (Rungiah), கோவிந்து (Govindoo) ஆகிய இரண்டு ஓவியர்களை வைத்தே பெரும்பாலான ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.
  • இங்கிலாந்தைச் சேர்ந்த இயற்கையியலின் முன்னோடிகளில் ஒருவரான ஜான் ரே லத்தீன் மொழியில் 1713ஆம் ஆண்டு பதிப்பித்த நூல் சினாப்சிஸ் மேதோடிக்கா ஏவியம்

நன்றி: இந்து தமிழ் திசை (27 – 01 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories