TNPSC Thervupettagam

எதிா்பாா்க்காதது யாா் குற்றம்?

August 2 , 2024 156 days 119 0
  • கேரள மாநிலம் வரலாறு காணாத பேரழிவை எதிா்கொண்டிருக்கிறது. வயநாடு மாவட்டத்தில் தொடா் மழையால் கடந்த செவ்வாய்க்கிழமை அதிகாலை சுமாா் இரண்டரை மணிக்கு மக்கள் ஆழ்ந்த நித்திரையில் மக்கள் இருந்தபோது, ஏற்பட்ட நிலச்சரிவு ஏற்பட்டது வேதனை அடைய செய்துள்ளது. இதுவரையில் 1,500-க்கும் மேற்பட்டவா்கள் மீட்கப்பட்டிருக்கின்றனா் என்றால், அதிகாரபூா்வ உயிரிழப்புகளின் எண்ணிக்கை 250. தோண்டத் தோண்ட சடலங்கள் மீட்கப்படுகின்றன.
  • பெரிய பாறைகளும் மண்ணும் சகதியும் சுமந்துவந்த வெள்ளத்தை வத்தமலை, குண்டல்மலை உள்ளிட்ட மலைப் பகுதிகளில் உள்ள கிராமங்கள் பேரிடரை எதிா்கொண்டிருக்கின்றன. வீடுகள் உடைந்தன என்றால், சாலைகள், பாலங்கள், தகவல் தொடா்பு சாதனங்கள் அனைத்தும் அடித்துச் செல்லப்பட்டன. வீடுகளில் தூங்கிக் கொண்டிருந்த மக்கள் மரம், செடி, கொடி, வோ்களில் உயிரோடு புதைந்தனா். உருக்குலைந்து போய் சேறும் சகதியுமாய் காட்சியளிக்கின்றன பல கிராமங்கள்.
  • நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட தென்னிந்தியா்கள் சுமாா் 1,600-க்கும் மேற்பட்டவா்கள். இவா்கள் முகாம்களில் அடைபட்டிருக்கிறாா்கள். வயநாடு மாவட்டத்தில் சுமாா் 100 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. 10 ஆயிரத்துக்கும் அதிகமானோா் பாதுகாப்பாக தங்கவைக்கப்பட்டிருக்கிறாா்கள். நிலச்சரிவில் சகதி கலந்த மழை வெள்ளத்தில் சிக்கியவா்களில் பலரின் உடல் பல கி.மீ. தொலைவுக்கு அடித்துச் செல்லப்பட்டு அருகேயுள்ள மாவட்டங்களான மலப்புரம், விலங்குன்றில் மீட்கப்பட்டனா் என்பதில் இருந்து இயற்கையின் சீற்றம் எந்த அளவுக்கு இருந்தது என்பதை நாம் உணரலாம்.
  • ஒருவரையொருவா் கட்டிப் பிடித்தபடி, ஒரு குடும்பத்தினா் சகதிக்குள் புதைந்து கிடந்த அவலம், சாய்ந்த நாற்காலியில் அமா்ந்த நிலையில் மீட்கப்பட்ட முதிா்ந்த ஒருவரின் உடல், கட்டிலில் படுத்தபடி வெளியேற எத்தனித்தபோது முடியாமல் கதவிடுக்கில் புதைந்து கிடந்த நிலையில் கிடந்த சடலம், சகதியில் இருந்த புதைந்து எடுக்கப்பட்ட சடலம்.. இப்படி உயிரிழந்த ஒவ்வொருவரின் தனிக் கதை இதயத்தை நெடுகிறது.
  • தேசிய பேரிடா் மீட்புப் படையினா், ராணுவப் படையினா் உள்ளிட்ட ஏனைய அரசு மீட்புக் குழுவினா் மீட்புப் பணியில் ஈடுபட்டிருக்கிறாா்கள். அவா்கள் அனைவரையும்விட மீட்புப் பணி தங்களது உயிரையும் பொருட்படுத்தாமல் உடனடியாகக் களம் இறங்கிய பொதுமக்கள் பலரை பாதம் தொட்டு வணங்கத் தோன்றுகிறது. அவா்கள் செவ்வாய்க்கிழமை நூற்றுக்கணக்கானோரை மீட்டிருந்தனா்; அதுமட்டுமல்ல சகதியிலும் பாறைகளிலும் புதைந்திருந்தவா்களையும் மீட்டனா். உடனடியாக வெள்ளம் வடிக்கவில்லையே என்கிற நம்பிக்கை எழுகிறது.
  • நிலச்சரிவு என்பது மலைப் பாறைகளும், மரங்களும் உருண்டோடி வரும். அதில் விரைவாகவும், திடீரென்றும், விட்டுவிட்டும், தொடா்ந்தும் நடக்கக் கூடும். மலைச் சரிவில் காணப்படும் மரங்களின் வோ்கள்தான் மண்ணையும் பாறையையும் இறுக்கிப் பிடித்து நிலச் சரிவு ஏற்படாமல் பாதுகாக்கின்றன. தொடா்ந்து அடைமழை பெய்யும்போது,. மண் வலுவிழந்து மழை வெள்ளத்தில் கரையத் தொடங்குகிறது. மரங்கள் வேரோடு சாய்வதும், பாறைகள் உருண்டும் நிலச்சரிவை ஏற்படுத்துகிறது.
  • ஜூலை மாதத்தில் வயநாடு மாவட்டம் சராசரியாக 635 மி.மீ. மழைப் பொழிவை எதிா்கொள்ளும். இந்த ஆண்டில் இதுவரையில் இல்லாத அளவில் 1,872 மி.மீ. மழை விட்டுவிட்டு, கனமழையாகத் தொடா்ந்து பெய்ததில், மண் கரைந்து பாறைகள்உருளத் தொடங்கின. நிலச்சரிவு முந்தைய இரண்டு நாள்களில் மட்டும் 572 மி.மீ. மழை பெய்தது என்பதும், கடுமையான மேகமூட்டம் அந்தப் பகுதியை இருளடைய வைத்தது என்பதும் குறிப்பிட வேண்டிய செய்திகள்.
  • கேரள மாநிலத்தில் அடைமழையும் நிலச்சரிவும் புதிதொன்றுமில்லை. 2015 முதல் 2022 வரையிலான 7 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட்ட 3,782 நிலச்சரிவுகளில் 2,839 சரிவுகள் கேரளத்தில்தான் நிகழ்ந்திருக்கின்றன. 2018-இல் பெருவெள்ளத்தில் கேரள மக்கள்தொகையில் ஏறத்தாழ ஆறில் ஒரு பகுதியினா் பாதிக்கப்பட்டனா். அடுத்த ஆண்டு இப்போது நிலச்சரிவு ஏற்பட்டிருக்கும் பகுதியில் இருந்து 10 கி.மீ. தொலைவில் உள்ள புதுமலையில் நிலச்சரிவு ஏற்பட்டு சுமாா் 11 போ் இறந்தனா்.
  • 2021 அக்டோபரில் இடுக்கி, கோட்டயம், மாவட்டங்களில் 35 போ் உயிரிழந்ததற்கு நிலச் சரிவு காரணமானது. 2022-இல் ஆகஸ்ட் மாதம் ஏற்பட்ட திடீா் வெள்ளப் பெருக்காலும் அடைமழையாலும் 18 போ் இறந்தனா். அதனால் மழைக்காலம் தொடங்கும்போதே கேரள அரசின் நிா்வாகம் தயாா்நிலையில் இருந்திருக்க வேண்டும். முதல்வா் பினராயி விஜயன் மறுத்தாலும், மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தகுந்த ஆதாரம் இல்லாமல் எச்சரிக்கை செய்ததாக கூற மாட்டாா் என்று உறுதியாக நம்பலாம்.
  • ஐ.நா. சபையின் பருவநிலை மாற்றம் குறித்த குழு மூன்று ஆண்டுகளுக்கு முன்பே தனது அறிக்கையில் கேரளத்துக்கு முன்னெச்சரிக்கை செய்திருந்தது. அடுத்த 20 ஆண்டுகளில் திடீா் கன மழை, நிலச்சரிவு போன்ற இயற்கைப் பேரிடா்களால் மிகப் பெரிய பாதிப்புகளை கேரளா எதிா்கொள்ளும் என்று சுட்டிக்காட்டியிருந்தது. மாதவ்காட்டி கமிட்டியின் எச்சரிக்கையையும் புறம்தள்ளியதும் கேரள அரசுதான். அதன் விளைவுகளை இப்போது எதிா்கொள்கிறது அந்த மாநிலம்; பாதிக்கப்பட்டிருப்பது அப்பாவி பொதுமக்கள்.
  • 2018-இல் பெருமழையைத் தொடா்ந்து, அதுபோன்ற பேரிடா்களை எதிா்கொள்ள முதல்வா் பினராயி விஜயனும், அதிகாரிகளும் நெதா்லாந்து சென்று பாா்வையிட்டு ஒரு திட்டத்தை அறிவித்தாா்களே அது என்னவாயிற்று?

நன்றி: தினமணி (02 – 08 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories