TNPSC Thervupettagam

எல்லை மீறும் அழகு மதிப்பீடுகள்

August 4 , 2024 118 days 143 0
  • முகேஷ் அம்பானியின் மகன் அனந்த் அம்பானியின் திரு மணம் பிரமாண்டமாக நடந்து முடிந்தது. பல்வேறு நாடுகளில் இருந்து ஏராளமான பிரபலங்கள் அதில் கலந்துகொண்டனர். ஒரு மாதத்துக்கு மேலாக நடைபெற்ற இந்தத் திருமண நிகழ்வில் பிரபலங்கள் என்ன உடை அணிந் திருந்தார்கள், யாரெல்லாம் எடை கூடியிருக்கிறார்கள், குறைந் திருக்கிறார்கள் என அனைத்தும் சமூக ஊடகங்களில் அலசி ஆரயப்பட்டன.
  • திரைப் பிரபலங்கள் மீதான இத்தகைய அலசல்கள் காலம் காலமாகத் தொடர்வதுதான் என்றாலும், இம்முறை ஒருபடி மேல சென்று பிரபலங்களின் பிள்ளைகளும் அழகு சார்ந்த விமர்சனத் தராசில் ஏற்றப்பட்டனர். இந்திய கிரிக் கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் மகள் ஸிவா, ஐஸ்வர்யா ராயின் மகள் ஆராத்யா, ஷாருக் கானின் மகள் சுஹானா என யாரும் இதிலிருந்து தப்பவில்லை. அந்தப் பிரபலத்தின் குழந்தை இன்னும் நிறமாக இருந்திருக் கலாம், கூடுதல் முக லட்சணத்துடன் இருந்திருக்கலாம் என வரிசையான பதிவுகளைச் சமூக ஊடகங்களில் காண முடிந்தது.
  • காங்கிரஸ் கட்சியின் அயலக அணித் தலைவர் சாம் பிட்ரோடா, தென்னிந்திய வர்களை ஆப்பிரிக்கர்களுடன் ஒப்பிட்ட தும் இந்தியக் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு நிறத்திற்காகக் கிண்ட லுக்கு உள்ளாவதும் நிறம் சார்ந்த இந்திய மனநிலையின் வெளிப்பாடு கள். அழகு சார்ந்து இந்தியச் சமூகம் எத்தகைய நிலைப்பாட்டைக் கொண்டுள்ளது என்ப தைத்தான் இவை உணர்த்துகின்றன.

தொடக்கம்

  • 1940க்குப் பிறகு அழகுக்கென்று தனி வரையறைகள் உருவாக ஆரம்பித்தன. இதைத் தொடர்ந்து உலக அழகி, பிரபஞ்ச அழகி, பூலோக அழகி என வரிசையாகப் பட்டங்கள் வழங்கப்பட்டன. அழகிப் பட்டங்களின் வருகைக்குப் பின்னர் அழகு குறித்த பொதுவான பிம்பம் உருவான தோடு, அழகு சாதனப் பொருள் களுக்கான மிகப் பெரிய சந்தையும் உருவானது.
  • தொடக்கத்தில் அழகு சாதனப் பொருள்களின் உற்பத்தியில் பிரான்ஸ், ஜெர்மனி, அமெரிக்கா போன்றவை ஆதிக்கம் செலுத்தின. ஆனால், தற்போது ஜப்பான், சீனா, தென் கொரியா போன்ற ஆசிய நாடுகள் கோலோச்சி வருகின்றன. அதிலும் கொரியாவின் கே - பாப் (k – pop) இசைக் குழுக்களுக்குக் கிடைத்த உலகளாவிய வரவேற்பு, கொரிய அழகு சாதனப் பொருள்களின் தேவையைப் பன்மடங்கு அதிகரித்தது.

சுரண்டல்

  • இந்தியச் சமூகத்தைப் பொறுத்த வரை நிறம் தொடர்பான கிண்டல்கள் குடும்பங்களில் மிக இயல்பாக நடந்து கொண்டிருக்கின்றன. தோலை வெளுப் பாக்குவது என்பது பிற நாடுகளில் சர்ச்சைக்குரிய விஷயம். ஆனால், இந்தியாவில் அது பணம் கொழிக்கும் வர்த்தமாக மாறியிருக்கிறது. தோலைவெளுப்பாக்கும் அழகு சாதனப் பொருள்கள் உலகிலேயே இந்தியாவில் தான் அதிகம் விற்பனையாகின்றன. அதிலும், சமூக ஊடக இன்ஃபுளுயன்சர் களால் ஈர்க்கப்படும் இளம் வயதினர், தோலை வெளுப்பாக்கும் வேதிப்பொருள்களை மருத்துவர்களின் ஆலோசனை இன்றித் தாமாகவே பயன்படுத்திவருகின்றனர். தோலின் நிறத்தை எப்படியாவது மாற்றிவிட வேண்டும் என்கிற விருப்பத்தில், அதன் பின்னால் இருக்கும் எதிர் விளைவுகளை உணராமல் அழகு சார்ந்த சுரண்டலில் இன்றைய தலைமுறை சிக்கியிருக்கிறது.

விடுதலையா, அடக்குமுறையா?

  • அழகுக்காக மேற்கொள்ளப்படும் அறுவை சிகிச்சைகள் உலகம் முழுவதும் அதிகரித்து வருகின்றன. இவை அமெரிக்கா, கொரியாவில் அதிக அளவில் நடைபெற்றுவந்த நிலையில் தற்போது இந்தியாவில் அந்தப் போக்கு ஆரம் பித்திருக்கிறது. அறுவைசிகிச்சை மூலம் உடலிலுள்ள கொழுப்பை அகற்றுவது, முக அமைப்பை மாற்றிக்கொள்வது, மார்பகங்களைப் பெரிதாக்கிக்கொள்வது, ஒல்லியான உடல் தோற்றத்திற்காக ஆபத்தான உணவுக் கட்டுப்பாடுகளைப் பின்பற்றுவது என்கிற போக்கு சாமானிய மக்களிடையே அதிகரிக்கத்துவருகிறது.
  • இவ்வாறு பெண்கள் மீது திணிக்கப் படுகிற ‘perfect women’ என்கிற வர்த்தக மாயவலையில் விழாமல் தப்பிப்பது சவாலானது. ஒவ்வொரு பெண்ணும் தன் உடலமைப்பும் நிறமும் தன் தனித்துவம் என உணர்வதோடு, அது சார்ந்து ஆழ்ந்த தன்னம்பிக்கையையும் உருவாக்கிக் கொள்வதன் மூலம் அழகு குறித்த கற்பிதத்தை எதிர்கொள்ள முடியும். அழகு சார்ந்து நம் முன் நிறுத்தப்படும் மதிப்பீடுகளை எதிர்த்துக் கேள்விகளை எழுப்பப் பழக வேண்டும். ‘அழகு’ குறித்து சமூகம் முன்னிறுத்தும் வரையறைகள் விடுதலையா, அடக்குமுறையா என்பதில் நம் ஒவ்வொருவருக்கும் தெளிவு தேவை.

நன்றி: இந்து தமிழ் திசை (04 – 08 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories