TNPSC Thervupettagam

குழந்தைகளுக்கு ஊட்டச்சத்துக் குறைபாடு

November 16 , 2024 61 days 72 0

குழந்தைகளுக்கு ஊட்டச்சத்துக் குறைபாடு

  • இந்தியாவில் குறிப்பிட்ட சில மாநிலங்களில் உள்ள குழந்தைகள், பலதரப்பட்ட சத்துகளை உள்ளடக்கிய உணவை எடுத்துக்கொள்ளாமல் இருப்பதாகப் புதிய ஆய்வு ஒன்று கூறுகிறது. இந்த ஆய்வு முடிவை அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் இந்திய தேசிய மருத்துவ இதழில் வெளியிட்டுள்ளது.
  • ‘பலதரப்பட்ட சத்துகளை உள்ளடக்கிய உணவு, போதுமான அளவு புரதங்களைக் கொண்டது என்பதால் அதைக் குழந்தைகளுக்கு அளிப்பது சிறந்தது என உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது. ஆனால், இந்தியாவில் உத்தரப் பிரதேசம் (86.1%), ராஜஸ்தான் (85.1%), குஜராத் (84%), மகாராஷ்டிரம் (81.9%), மத்தியப் பிரதேசம் (81.6%) ஆகிய மாநிலங்களில் உள்ள குழந்தை களுக்குப் பலதரப்பட்ட சத்துகளை உள்ளடக்கிய உணவு கிடைப்பதில்லை. இதனால், குழந்தைகள் ஊட்டச்சத்துக் குறை பாட்டினால் பாதிக்கப்படும் சூழல் நிலவுகிறது’ என்று அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
  • தாய்ப்பால், பால், விட்டமின் கே நிறைந்த உணவு (காய்கறிகள், கீரைகள்), பழங்கள், இறைச்சி, மீன், முட்டை, தானியங்கள் உள்ளிட்டவை அடங்கிய உணவே பலதரப்பட்ட சத்துகளைக் கொண்ட உணவு என அழைக்கப்படுகிறது. பிறந்து 6 மாதம் முதல் 23 மாதங்கள் வரையுள்ள குழந்தைகளுக்கு மேற்கூறிய உணவை அளிக்க வேண்டும் என மருத்துவர்களும் பரிந்துரைக் கின்றனர்.

நன்றி: இந்து தமிழ் திசை (16 – 11 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories