TNPSC Thervupettagam

சிறிய, நடுத்தர அளவிலான தொழில்கள் நமக்குச் செய்தது என்ன?

December 6 , 2024 37 days 53 0

சிறிய, நடுத்தர அளவிலான தொழில்கள் நமக்குச் செய்தது என்ன?

  • சிறிய, நடுத்தர அளவிலான தொழில்கள் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. பொருளாதாரத்தின் அங்கமாக விளங்கும் துறைமுகங்கள் மேம்பாடு, ஏற்றுமதி, வேலைவாய்ப்பை உருவாக்குதல் ஆகியவற்றில் இந்நிறுவனங்கள் குறிப்பிடத்தகுந்த பங்கு வகிக்கின்றன. இந்தியத் தொழில் துறையில் 45% உற்பத்தி, 40% ஏற்றுமதியில் பங்கு வகிக்கும் இந்நிறுவனங்கள் 11 கோடிக்கும் மேற்பட்ட பணியாளர்களுக்கு வேலை வழங்குகின்றன.

கிராமப்புறங்களில்...

  • இந்தியாவின் சிறிய, நடுத்தர அளவிலான தொழில்கள் துறையானது குடிசை, சிறிய, நடுத்தரத் தொழில்கள் என மூன்று பிரிவுகளாக வகுக்​கப்​பட்​டுள்ளது. குறு, சிறு-நடுத்தர அளவிலான தொழில்கள் அமைச்​சகத்தின் (Ministry of Micro, Small & Medium Enterprises) 2023ஆம் ஆண்டு அறிவிப்​பின்படி, இந்தியாவில் சுமார் 6.3 கோடி குறு, சிறு - நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் (சிறிய தொழிற்​கூடங்கள் 96%), இவற்றில் 3.5 லட்சம் சிறிய தொழில்கள், 60,000 நடுத்தரத் தொழில்கள் உள்ளன.
  • தேசிய மாதிரி ஆய்வின்படி (73ஆவது சுற்று), சிறிய, நடுத்தர அளவிலான தொழில்​களில் பெரும்​பாலானவை கிராமப்பு​றங்​களில் உள்ளன. குறிப்பாக, விவசாயம் தொடர்பான நடைமுறைகள், கைவினைப் பொருள்கள், சிறிய அளவிலான உற்பத்தித் தொழில்​களில் ஈடுபட்​டுள்ள சிறு நிறுவனங்கள் உள்ளன.
  • நகர்ப்பு​றங்​களில் சேவைகள், உற்பத்தி, தகவல் தொழில்​நுட்பத் துறைகளில் ஈடுபட்​டுள்ள குறு, சிறு, நடுத்தர அளவிலான தொழில்​களும் இதில் அடங்கும். குறு, சிறு, நடுத்தர அளவிலான தொழில்கள் அமைச்​சகத்தின் 2021ஆம் ஆண்டு அறிக்கை​யின்படி, இந்தியாவின் 51% குறு, சிறிய, நடுத்தர அளவிலான தொழில்கள் கிராமப்பு​றங்​களில் உள்ளன.
  • இதில், 3.23 கோடி நிறுவனங்கள் விவசாயம் தொடர்பான தொழில்​களில் - கைவினைப் பொருள்கள், உணவுப் பொருள்கள் உற்பத்தி, கைப்பைகள், சிறிய அளவிலான உற்பத்தித் தொழில்​களில் ஈடுபட்​டுள்ளன. மற்ற 49% நிறுவனங்கள் நகர்ப்பு​றங்​களில் உள்ளன. இதில் தகவல் தொழில்​நுட்பச் சேவைகள், உற்பத்தி, துணி, பொறியியல் தொழில்கள் முதன்​மையாக உள்ளன.

சமூக மாற்றத்​துக்குப் பங்களிப்பு:

  • பாலினச் சமத்து​வத்தை ஊக்கு​விப்​பதில் குறு, சிறு, நடுத்தர அளவிலான தொழில்கள் துறையின் பங்கு மிக முக்கிய​மானது. குறிப்​பாகத் துணி உற்பத்தி, கைவினைப் பொருள்கள், உணவுப் பொருள் தயாரிப்பு, அழகு சாதனப் பொருள் உற்பத்தி, சேவைத் துறை போன்ற துறைகளில் பெண்களுக்கு வேலை வழங்கிவரும் துறை இது. இத்துறையில் பெண்கள் பங்கேற்பு 20-30% என்பது கவனிக்​கத்​தக்கது. மேலும், பல்வேறு தொழில்​களில் பரந்த பரிமாணங்​களையும் இத்துறை கொண்டிருக்​கிறது. இது உற்பத்தி, ஏற்றுமதி, வேலைவாய்ப்பு உருவாக்​கத்தில் முக்கியப் பங்கு வகிக்​கிறது.
  • ஆடை தயாரிப்பு, பட்டு நெசவு, கருவி தயாரிப்பு, ஒப்பனைப் பொருள் உற்பத்தி போன்றவை இதில் முக்கிய​மானவை.
  • இந்தியாவில் தயாராகும் கைவினைப் பொருள்கள் உலக அளவில் புகழ்​பெற்றவை. மரக்கூடைகள், மணிக் கண்ணாடிகள், நகைகள், உலோகக் கலைப்​பொருள்கள், ஓவியப் பொருள்கள் நாட்டின் பொருளாதார முன்னேற்​றத்​துக்கு முக்கியப் பங்காற்றி வரு​கின்றன.
  • உணவு பதப்படுத்​துதல் தொழிலில், ஏற்றும​திக்கும் உள்ளூர் சந்தைக்கும் ஏற்ற உணவுப் பொருள்கள் தயாரிக்​கப்​படு​கின்றன. கடலை உருண்​டைகள், பழரசம், மிளகு, மசாலா வகைகள் போன்ற பண்டங்கள் அதிக அளவில் தயாரிக்​கப்​படு​கின்றன. பொறியியல் கருவிகள், உலோகக் கருவிகள், ஆட்டோ உதிரி பாகங்கள், மின்னணுப் பொருள்கள், ரசாயனப் பொருள்கள், மருந்​துகள் போன்றவை தயாரிக்​கப்​படு​கின்றன.

தமிழ்​நாட்டின் நிலவரம்:

  • இந்திய அளவில் தொழில்​நுட்​பத்தில் வளர்ந்த மாநிலங்​களில் ஒன்றாகத் தமிழ்நாடு திகழ்​கிறது. சிறிய, நடுத்தர அளவிலான தொழில்கள், மாநிலத்தின் தொழில் துறை உற்பத்தி, வேலைவாய்ப்பு, ஏற்றுமதி ஆகியவற்​றோடு, மாநிலத்தின் பொருளாதார வளர்ச்​சிக்கும் மையமாக உள்ளது. 15 லட்சத்​துக்கும் மேற்பட்ட குறு, சிறு, நடுத்தர அளவிலான தொழில்களைத் தமிழ்நாடு கொண்டுள்ளது.
  • 2021-2022இல் இத்தொழில்கள் மாநிலத்தின் தொழில் உற்பத்​தியில் 40% பங்கு வகித்தன. கார் உற்பத்தி, அதன் உதிரி பாகங்கள் தயாரிப்பு, துணி, தோல் பொருள்கள், உணவுப் பொருள் பதப்படுத்​துதல் போன்ற பல்வேறு துறைகளில் இத்துறை முக்கியப் பங்கு வகிக்​கிறது.
  • தமிழ்​நாட்டின் ஏற்றுமதி ஆண்டு​தோறும் ரூ.2.5 லட்சம் கோடி என மதிப்​பிடப்​பட்​டுள்ளது. இதில் சிறிய, நடுத்தர அளவிலான தொழில்கள் குறிப்பாக ஆடை, தோல், பொறியியல் சாதனங்கள், உணவுப் பொருள்கள் ஆகிய துறைகள் முக்கியப் பங்கு வகிக்​கின்றன. அதேவேளை​யில், முதலீடு​களின் பற்றாக்​குறை, தொழில்​நுட்பம், ஒழுங்​கு​முறை, அடித்தளப் பிரச்​சினைகள், மனிதவளச் சவால்கள் என இந்தத் தொழில் துறைகள் பல்வேறு சவால்களை எதிர்​கொள்​கின்றன. இந்தச் சூழலில், இந்நிறு​வனங்கள் எதிர்​கொள்ளும் சிக்கல்​களுக்குத் தீர்வு ​காண்பது, ​நாட்டின் பொருளாதார வளர்ச்​சிக்கு மிக ​முக்​கியம்​.

நன்றி: இந்து தமிழ் திசை (06 – 12 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories