TNPSC Thervupettagam

சுகாதாரத் திட்டங்கள் நிரந்தரமாக்கப்படுமா?

February 11 , 2025 2 hrs 0 min 14 0

சுகாதாரத் திட்டங்கள் நிரந்தரமாக்கப்படுமா?

  • 2013ஆம் ஆண்டு முதல் இயங்கி வரும் தேசிய சுகாதாரத் திட்டத்தின் (National Health Mission) பெயரை ‘பிரதம மந்திரி சம்ங்கர சுவஸ்தயா மிஷன்’ என்று மாற்றுவதாக மத்திய அரசு அறிவித்திருக்கிறது. அனைத்து மாநில மக்கள் இந்தப் பெயரை அழைப்பதில் சிக்கல்கள் இருப்பதாக எதிர்ப்பு அதிகரித்துவருகிறது. எனினும், பெயர் மாற்றத்தையெல்லாம் தாண்டி இதில் பணியாற்றும் மருத்துவப் பணியாளர்கள், நோயாளிகளின் நிலை குறித்தும் விவாதிக்கப்பட வேண்டும்.

குறைவான ஊதியம்:

  • மாநில அளவில் செயல்​படுத்​தப்​படும் ‘மக்​களைத் தேடி மருத்​துவம்’ திட்​டத்​தில் 573 பிசி​யோதெரபிஸ்ட்கள் (இயன்​முறை மருத்​துவர்​கள்) பணிபுரிந்​து​வரு​கின்​றனர். மேலும் மருத்துவ அதிகாரி​கள், செவிலியர்​கள், ஆய்வகத் தொழில்​நுட்பர் (lab technicians) என ஆயிரக்​கணக்​கானவர்கள் ஒப்பந்த அடிப்​படை​யில் பணிபுரிந்து வருகின்​றனர்.
  • அதேவேளை​யில், மனித ஆற்றல் மீது முறையான கவனம் செலுத்​தாமல் திட்​டங்களை வெற்றிகரமாக முன்னெடுத்​துச் செல்ல முடி​யாது. ஒப்பந்​தத்​தில் ரூ.13,000 பிசி​யோதெரபி மருத்​துவர்​களுக்கு மாதச் சம்பளமாக நிர்​ண​யித்து, இந்த ஒப்பந்தக் காலத்​தில் வேறு எங்கும் பணிபுரியக் கூடாது என்று கையெழுத்து வாங்கி​யிருக்​கிறார்​கள்.
  • அரசுத் திட்​டங்​களில் பணிபுரிவ​தால் தங்களுக்கான தொழில் வளர்ச்சி முன்னேற்றம் காணும் என்ற நம்பிக்கை​யில் இவர்கள் பணியில் சேர்​கின்​றனர். குறைந்த சம்பளத்தை வைத்​துக்​கொண்டு அல்லல்​படும் இவர்களில் யாரேனும், பகுதி நேரமாகப் பணிக்​குச் செல்ல வேண்டிய சூழலுக்​குத் தள்ளப்​படும்​போது, குற்ற உணர்​வுக்கு ஆளாகிறார்​கள். உண்மை​யில், தமிழ்​நாட்​டில் மட்டுமே பிசி​யோதெரபிஸ்ட்​களுக்​குக் குறைவான ஊதியம் வழங்​கப்​படு​கிறது.

மாற்றம் அவசியம்:

  • இந்நிலை​யில், தேசிய அளவில் ஒரே மாதிரியான மனிதவள மேலாண்மை விதிகளை உருவாக்கி, அனைத்து மாநிலங்​களி​லும் முறை​யாகப் பின்​பற்ற ஆவன செய்ய வேண்​டும். அதில் பணிபுரி​யும் மருத்​துவப் பணியாளர்​களது அடிப்படை உரிமை​கள், பணிப் பாது​காப்பு, வளர்ச்சி ஆகிய​வற்றுக்கு முக்​கி​யத்துவம் கொடுத்துத் திட்​டத்​தைச் செயல்​படுத்த மாநில அரசு முன்வர வேண்​டும்.
  • அதேநேரத்​தில், நோயாளி​களுக்கு மருந்து விநி​யோகம், இயன்​முறை சிகிச்சை ஆலோசனை சரியான கால இடைவெளி​யில் கிடைத்​திடும் வகையில் திட்​டத்​தின் செயல்​பாடுகளை மாற்றியமைக்க வேண்​டும். தற்போது ஒரு நோயாளியைச் சந்திக்​கும் பிசி​யோதெரபி மருத்​துவர் அதே நோயாளியை மீண்​டும் சந்திக்கப் பல நாள்கள் ஆகின்றன.
  • நோயாளி தரப்​பில் இருந்து பார்த்​தால் அவர்​களது தீவிரப் பாதிப்பு​களுக்கு ஏற்ற ‘தகுந்த சிகிச்சை’ இது எனக் கருத முடி​யாது. நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலை​யங்​களைச் சார்ந்து உள்ள பயனாளி​கள், கிராமப்புற ஆரம்ப சுகாதார நிலை​யங்​களைச் சார்ந்து உள்ள பயனாளிகள் என இரு தரப்​பினரும் சுகாதார வசதிகளை அணுகும் நிலை​யில் பல்வேறு வித்​தி​யாசங்​கள், பிரத்யேக சவால்கள் இருக்​கின்றன.
  • உதாரண​மாக, போக்கு​வரத்து வசதியை எடுத்​துக்​கொண்​டாலே இருதரப்​புக்​கும் இடையே மிகப்​பெரிய இடைவெளி இருக்​கும். எனவே, புவி​யியல் பகுதி​களுக்கு ஏற்ப நோயாளி​களுக்கான சிகிச்சை அணுகு​முறை​களைத் திட்​டங்​களில் உருவாக்க வேண்​டும்.
  • ‘மக்​களைத் தேடி மருத்​துவம்’ திட்டம் நிரந்தர மருத்துவ சேவை வழங்கல் திட்​டமாக மாறி​னால்​தான் நன்மை​களின் வீச்​சும் அதிகரிக்​கும். தேசிய சுகா​தாரத் திட்​டத்​தின் கீழ் வழங்​கப்​படும் சமூக நலத் திட்​டங்களை மட்டும் பயன்​படுத்தி, மக்களுக்​குப் பொது சுகாதார சேவை சார்ந்த தேவை​களைப் பூர்த்தி​செய்ய முயல்வதை அரசாங்கம் மறுஆய்வு செய்ய வேண்​டும்.
  • தொற்​றா நோய்​களால் பாதிக்​கப்​பட்ட மக்களுக்கான புதிய திட்​டங்களை மாநிலம் முழு​வதும் ஒரே நேரத்​தில் அமல்​படுத்துவதை வருங்​காலங்​களில் தவிர்க்​கலாம். மண்டல வாரி​யாகத் திட்​டத்தை அறிமுகப்​படுத்​திச் செயல்​படுத்​தும்​போது, பட்ஜெட் ஒதுக்​கீடு சரியான முறை​யில் செலவழிக்​கப்​படும், வெற்றிகர​மாகத் திட்டம் நடைமுறைக்கு வந்து​விட்​டதைக் கண்காணித்து, அதிகபட்​சமாக மூன்று ஆண்டு​களில் அத்திட்​டத்தை நிரந்​தரத் திட்​டமாக மாற்றிவிட வேண்​டும். அது நோயாளி​களுக்​கும் திட்​டங்​களில் பணியாற்றக் கூடிய மருத்​துவப் பணியாளர்​களுக்​கும் நம்பிக்கை​யை​யும் வளர்ச்​சி​யை​யும் உறுதிப்​படுத்​தும்.

போலி மருத்​துவத்​தைத் தவிர்க்​க...

  • எந்தத் திட்​டமாக இருந்​தா​லும் மனித வளங்​களுக்​குச் செலவழிக்​கக்​கூடிய தொகையே நிதி ஒதுக்​கீடு செய்​வ​தில் பெரும்​பங்காக இருக்​கும், தனியார் துறை​களில்கூட அதுதான் வழக்​கம். அரசுத் திட்​டங்கள் என்னும்​போது மனிதவள ஆற்றலுக்​குப் போதுமான நிதி ஒதுக்​கீடு செய்​து​தான் ஆக வேண்​டும். மனித நலன் கருதிச் செயல்​படுத்​தப்​படும் திட்​டங்​களுக்காக உழைப்​பவர்களை ஊக்கப்​படுத்தி, அவர்​களிடம் ​இருந்து ஆக்கபூர்​வமான மருத்துவ சேவை வழங்​கலைப் பெற்றாக வேண்டிய கடமை அரசாங்​கத்​துக்கு உண்டு.
  • பல சுகா​தாரப் பிரச்​சினைகள் ஒன்றன் பின் ஒன்றாகப் படையெடுத்து​வரும் நிலை​யில், அத்தகைய பிரச்​சினை​களுக்​குப் பொது சுகாதார வசதி​களைப் பெறக் குறிப்​பிட்ட காலத்​துக்​குள் பலன் கிடைக்காத சமூகநலத் திட்​டங்களை மட்டுமே நம்பி இருக்​கும் நிலையை மக்களுக்கு ஏற்படுத்​தி​விடக் கூடாது. நம்பிக்கை​யின்​மை​யால் மக்கள் அத்திட்​டங்​களைச் சாராமல் மாற்று வழிகளை நாட வேண்டிய நிலைக்​குத் தள்ளப்​படு​வார்​கள். இதனால் போலி மருத்​துவம் வளரும்.
  • ‘மக்​களைத் தேடி மருத்​துவம்’ திட்டம் வெற்றிகரமான திட்டம் எனத் தமிழக அரசு முன்​மொழிந்து வருகிறது. அத்திட்​டத்தை நிரந்​தரத் திட்​டமாக மாநில அரசு செயல்​படுத்​தும் காலம் கனிந்​துள்ள​தால், அதைச் செயல்​படுத்த அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்​டும். நிரந்தரச் சுகா​தாரத் திட்​டங்​களாலும், கட்​டமைப்பு வச​தி​களாலும் தமிழகம் சு​கா​தார வச​தி​களில் ​முன்னோடி ​மாநிலமாகத் ​தி​கழத் தொடங்கி, தற்​போதும் அதைத் தக்​க​வைத்​துக்​கொண்​டிருக்​கிறது. இது தொடர மேற்​கண்ட ​மாற்​றங்​கள் செய்​யப்​படு​வதன் தொடக்கப் புள்​ளியாக நிரந்​தரப் பொதுச் சு​கா​தா​ரத் ​திட்​டங்​கள்​ இருக்​கட்​டும்​.

நன்றி: இந்து தமிழ் திசை (11 – 02 – 2025)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories