TNPSC Thervupettagam

சுற்றுச்சூழல் பாதிப்புகள் தீவிரமடைந்த ஆண்டு!

December 20 , 2024 1 hrs 0 min 12 0

சுற்றுச்சூழல் பாதிப்புகள் தீவிரமடைந்த ஆண்டு!

  • டிசம்பர் 9 ஆம் தேதியன்று ஐரோப்பாவின் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கான கோப்பர்நிகஸ் சேவை அமைப்பு (Copernicus Climate Change Service) ஓர் அறிக்கையை வெளியிட்டது. செயற்கைக்கோள்கள், கப்பல்கள், விமானங்கள், உலகெங்கிலும் உள்ள வானிலை ஆய்வு மையங்கள் ஆகியவற்றிலிருந்து கிடைத்த தரவுகளையெல்லாம் தொகுத்து உருவாக்கப்பட்ட இந்த அறிக்கையில், 2024ஆம் ஆண்டு வரலாற்றிலேயே மிகவும் வெப்பமான ஆண்டு (Hottest year on record) என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
  • டிசம்பர் நீங்​கலாக மற்ற 11 மாதங்​களில் சேகரிக்​கப்​பட்ட கணக்​கு​களின் அடிப்​படை​யில், இந்த ஆண்டின் சராசரி உலகளாவிய வெப்​பநிலை 1.6 டிகிரி செல்​சி​யஸாக இருந்​தது. தொழிற்​புரட்​சிக்கு முந்தைய காலக்​கட்​டத்​தோடு ஒப்பிடும்​போது, உலகளாவிய வருடாந்திர சராசரி வெப்​பநிலை 1.5 டிகிரி செல்​சி​யஸுக்கு மேல் அதிகரித்​திருப்பது இதுவே முதல் முறை. காலநிலை மாற்​றத்​தின் தீவிரக் கட்டத்தை நாம் எட்டி​விட்​டோம் என்ப​தையே இது காட்டு​கிறது.

கவலை​யூட்டும் பேரிடர்கள்:

  • இந்த ஆண்டு மொத்தம் 124 காலநிலை சார்ந்த பேரிடர்கள் ஏற்பட்​டுள்ளன. இரண்டு வறட்​சிகள், 10 வெப்ப அலைகள், 17 நிலச்​சரிவுகள் (இவற்றில் பல நிகழ்வுகள் வெள்​ளத்​தால் ஏற்பட்​ட​வை), 58 வெப்​பமண்​டலப் புயல்​கள், 37 காட்டுத்தீ நிகழ்வுகள் எனப் பல விதங்​களில் இவை நிகழ்ந்​துள்ளன. ஒட்டு மொத்​தமாக இவற்​றால் 310 பில்​லியன் அமெரிக்க டாலர்கள் நிதி இழப்பு ஏற்பட்​டு உள்ளதாக ஒரு கணிப்பு தெரிவிக்​கிறது.
  • இந்தியா​வில் 2024ஆம் ஆண்டில் ஏற்பட்ட தீவிர வானிலை நிகழ்வுகள் பற்றிய ஒரு விரிவான அறிக்கையை அறிவியல் - சுற்றுச்​சூழல் மையம் வெளி​யிட்​டிருக்​கிறது. அதன்​படி, 2024ஆம் ஆண்டின் முதல் 9 மாதங்​களில் 93% நாள்​களில் ஏதேனும் ஒரு தீவிர வானிலை நிகழ்வு ஏற்பட்​டிருக்​கிறது. இவற்​றால் மொத்தம் 3,238 பேர் உயிரிழந்​திருக்​கிறார்​கள். 32 லட்சம் ஹெக்​டேர் விளைநிலம் பாதிக்​கப்​பட்​டிருக்​கிறது. 9,457 கால்​நடைகள் உயிரிழந்​திருக்​கின்றன.
  • மிக அதிக​மாகப் பாதிக்​கப்​பட்ட மாநிலங்​களில் மத்தியப் பிரதேசம் முதல் இடத்​தில் இருக்​கிறது. உயிரிழப்பு என்கிற வகையில் மிகவும் பாதிப்​படைந்​திருக்​கும் மாநிலம் கேரளம். வெள்​ளத்​தால் மட்டுமே இந்தியா​வில் இந்த ஆண்டு 1,376 பேர் உயிரிழந்​திருக்​கிறார்​கள். வெப்ப அலையால் உயிரிழந்​தோர் 210 பேர். தீவிர வானிலை நிகழ்வு​களால் உயிரிழப்​பவர்​களின் எண்ணிக்கை அதிகரித்​துக்​கொண்டே போகிறது என்றும், 2022 நிலவரத்​தோடு ஒப்பிடும்​போது, இந்த எண்ணிக்கை 18% அதிகம் என்றும் இந்த அறிக்கை எச்சரிக்​கிறது.

உச்சி​ மா​நாடு​களால் என்ன பலன்?

  • உயிர்ப்​பன்​மைக்கான 16ஆவது உச்சி​மா​நாடு கொலம்​பி​யா​வில் அக்டோபர் 21 முதல் நவம்பர் 1 வரை நடைபெற்​றது. மரபணு சார்ந்த வளங்​களில் இருந்து கிடைக்​கும் பயன்களை நியாயமான முறை​யில் பங்கிட்டுக்​கொள்​வது, உயிர்ப்​பன்​மை​யைக் காப்​ப​தில் தொல்​குடிகளின் பங்களிப்பை அங்கீகரிப்பது எனப் பல முக்கிய முடிவுகள் இந்த மாநாட்​டில் எடுக்​கப்​பட்டன.
  • காலநிலை மாற்​றத்​துக்கான 29ஆவது உச்சி​மா​நாடு நவம்பர் 11 முதல் 22ஆம் தேதிவரை அசர்​பைஜானில் நடந்​தது. காலநிலை நிதி ஒதுக்​கீட்டை மூன்று மடங்காக உயர்த்​துதல், கரிமச் சந்தை பற்றிய முன்னெடுப்புகள் ஆகியவை இந்த மாநாட்​டில் எடுக்​கப்​பட்ட முக்கிய முடிவு​கள். ஆனால், காலநிலைச் செயல்​பாடு​களின் தீவிரத்​தன்​மைக்கு ஏற்ற​வாறு இந்த மாநாட்​டில் முடிவுகள் எட்டப்​பட​வில்லை. இந்த மாநாடு பெரும் ஏமாற்​றத்தை அளிப்​ப​தாகவே இருந்​தது.
  • பாலை​வன​மாதலைத் தடுப்​ப​தற்கான 16ஆவது உச்சி​மா​நாடு சௌதி அரேபி​யா​வில் டிசம்பர் 2 முதல் 13ஆம் தேதி வரை நடைபெற்​றது. சீர்​குலைந்த நிலத்தை மீட்​டெடுப்​பது, வறட்​சியி​லிருந்து மீள்​வது, பெண்​களுக்கான நில உரிமைகள் போன்ற முக்கிய அம்சங்கள் இந்த மாநாட்​டில் விவாதிக்​கப்​பட்டன.
  • தொடர்ந்து உலகளாவிய உச்சி​மா​நாடுகள் நடைபெற்று​வரு​கின்றன என்றாலும், அவற்றின் செயல்​திறன் போதுமான அளவில் இருக்​கிறதா என்பது பெரிய கேள்வி. குறிப்​பாக, காலநிலை சார்ந்த பல பேச்சு​வார்த்​தைகளில் பெரிதாக எந்த முன்னேற்​ற​மும் ஏற்படு​வ​தில்லை. இந்த உச்சி​மா​நாடுகளை இன்னும் வலுவானவையாக மாற்ற வேண்​டும். உலகளாவிய அரசி​யலில் இதுபோன்ற சூழலியல் கூட்​டமைப்பு​கள்​/​மா​நாடு​களின் குரல் உரக்க ஒலிக்க வேண்​டும். சூழலியல் செயல்​பாட்​டாளர்கள் இதை இந்த ஆண்டு தீவிரமாக வலியுறுத்​தி​யிருக்​கின்​றனர்.

செயல்​பாடு​களில் போதாமை:

  • 2024இல் உலகளாவிய கரிம உமிழ்வு​களின் அளவு 3,740 கோடி டன்னாக இருந்​தது. 2023ஆம் ஆண்டின் அளவைவிட இது 0.8% அதிகம். 2024 டிசம்​பரில் வெளியான ஓர் ஆய்வுக் கட்டுரை​யில், ஓர் ஆண்டுக்கு 10 லட்சம் சதுர கிலோமீட்டர் நிலம் பாழாகிவருவது உறுதி​செய்யப்பட்டிருக்கிறது.
  • ஆண்டு​தோறும் காடழிப்பு அதிகரித்​த​ படியே இருக்​கிறது. இந்த ஆண்டின் முதல் நான்கு மாதங்​களில் கடலின் வெப்​பநிலை அதீதமாக உயர்ந்​தது. இதனால் உலகளாவிய பவளத்​திட்டு வெளிறுதல் நிகழ்வு (Global coral bleaching event) ஏற்பட்​டது. சூழலியலைப் பாது​காக்​கும் செயல்​பாடு​களில் உள்ள போதாமையை இவை சுட்​டிக்​காட்டு​கின்றன.
  • கரிம உமிழ்வு​களைக் குறைக்க வேண்​டும் என்றும் காலநிலைப் பிரச்​சினை​களைச் சரிசெய்ய நிதி வேண்​டும் என்றும் மூன்​றாம் உலக நாடுகள் தொடர்ந்து குரல்​கொடுத்து​வரு​கின்றன. ஆனால், வளர்ந்த நாடுகள் இதைப் பெரி​தாகக் கண்டு​கொள்​ளாமல் தங்களுக்​குச் சாதகமான முடிவு​களையே எடுத்து​வரு​கின்றன. காலநிலை மறுப்​பாளரான டொனால்டு டிரம்ப் அமெரிக்கா​வில் மீண்​டும் பதவிக்கு வரவுள்​ளார். இது உலகளாவிய காலநிலைச் செயல்பாடுகளில், குறிப்பாக நிதி ஒதுக்​கீட்​டில் மோசமான தாக்​கத்தை ஏற்படுத்​தும் என்று எதிர்​பார்க்​கப்​படு​கிறது.

பரிந்​துரைகள்:

  • உலகளாவிய சூழலியல்​சார் உச்சி​மா​நாடுகள் மீது வளரும் நாடு​களுக்கு நம்பிக்கை குறைந்​து​வரு​கிறது. இந்த நிலை மாற வேண்​டு​மா​னால் சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்​தக்​கூடிய (Legally binding) ஒப்பந்​தங்கள் உருவாக்​கப்பட வேண்​டும். உறுதி​மொழிகளைப் பின்​பற்றாத நாடுகள் மீது நடவடிக்கை எடுக்​கப்​படும் என்கிற விதி​முறை இருந்​தால், சூழலியல்​சார் செயல்​பாடு​களில் நாடுகள் தீவிரமாக இயங்​கும். சர்வதேச நீதி​மன்​ற​மும் ஐ.நா. அவையும் இணைந்து இதற்கான ஒப்பந்​தங்​களை​யும் சட்டங்​களை​யும் உருவாக்க வேண்​டும். நிலக்​கரியைச் சார்ந்​திருக்​கும் இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள் மாற்று எரிபொருளைக் கண்டறிய வேண்​டும்.
  • இந்தத் தேடு​தலுக்​கும் ஆய்வுக்​குமான நிதி ஒதுக்​கப்பட வேண்​டும். காடழிப்​பைத் தடுக்​கும் வகையில் கடுமையான சர்வதேசச் சட்டங்கள் இயற்​றப்பட வேண்​டும். காலநிலை-சுற்றுச்​சூழல்​-உ​யிர்ப்​பன்மை எனப் பல்வேறு கோணங்​களில் உலகளாவிய பிரச்​சினைகள் ஆராயப்பட வேண்​டும். கரிமச் சந்தைக்கான விதி​முறை​களும் கடல் வளங்கள் பற்றிய விதி​முறை​களும் உடனடியாக உருவாக்​கப்பட வேண்​டும். காலநிலை மாற்​றத்தை எதிர்​கொள்​வ​தில் மட்டுமல்​லாமல் காலநிலை மாற்​றத்​தைக் கட்டுக்​குள் வைப்​ப​தி​லும் நாடுகள் முனைப்புடன் செயல்பட வேண்​டும்.
  • ஏற்கெனவே, தொழிற்​புரட்​சிக் காலத்​தை விட 1.5 டிகிரி செல்​சியஸ் கூடுதல் வெப்​பநிலை உயர்வை எட்டி​விட்​டோம் என்னும்​ நிலை​யில், அத​னால் ​விளை​யும் மோசமான ​பாதிப்புகளையும் எ​திர்​கொள்ள ​நாம் த​யாராக வேண்​டும். அதே​நேரம், இதைத் ​தாண்டி வெப்பநிலை உய​ராமல் இருக்க எல்லா ​முயற்சி​களும் மேற்​கொள்​ளப்பட வேண்​டும். இல்லையென்​றால், பு​வியை​யும் மக்​களை​யும்​ ​காப்​பாற்​றுவது கடினம்​.

நன்றி: தினமணி (20 – 12 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories