இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியிலும் வேலைவாய்ப்பு உருவாக்கத்திலும் தகவல் தொழில்நுட்பத் துறை (ஐ.டி.) மிக முக்கியப் பங்கு வகிக்கிறது. இந்தியாவின் டிஜிட்டல் பயணம் ஐ.டி. துறை வளர்ச்சியின் வழியாகவே சாத்தியமாகியுள்ளது. தற்போது நாட்டின் மொத்த ஜிடிபியில் ஐ.டி. துறையின் பங்கு 7.5 சதவீதமாக உள்ளது.
உலக அளவில் ஐ.டி. துறை ஏற்றுமதியில் இந்தியா முக்கிய இடத்தில் உள்ளது. 2022-23 நிதி ஆண்டில் இந்தியாவில் ஐ.டி. துறை 245 பில்லியன் டாலர் (ரூ.20 லட்சம் கோடி) வருவாய் ஈட்டியுள்ளது. இதில் 194 பில்லியன் டாலர் (ரூ.16 லட்சம் கோடி) ஐ.டி. சேவை ஏற்றுமதி மூலம் கிடைத்துள்ளது.