TNPSC Thervupettagam

ததும்பும் நித்திய சோகம்

January 26 , 2025 26 days 62 0

ததும்பும்  நித்திய சோகம்

  • திண்டுக்கல் தமிழ்ப்பித்தனின் கோட்டோவியங்களை தொகுத்துப் பார்க்கும்போது, அவர் அடைந்திருக்கும் பரிணாமம் மெச்சத்தக்கது. அவரது பழைய ஓவியங்களில் வெளிப்பட்ட முக வார்ப்புகள், ஓவியர் புகழேந்தி வரைந்த மனிதர்களின் முகங்களை நினைவுக்குக் கொண்டு வந்தன. ஆனால், விளிம்பு நிலை வாழ்வு வாய்த்தவர்களுக்கும், விளிம்பு நிலை அழகியலைக் கைக்கொள்ளும் கலைஞர்களுக்கும் இவை பொதுவான தன்மைகளே என்ற முடிவை பின்னர் அடைந்தேன்.
  • மேலும், ஒவ்வொரு ஓவியரின் கோடுகளுக்கும், அவர்களது வண்ணங்களுக்கும் உள்ள தனித்துவம் என்னென்ன என்பதை நோக்கிய கேள்விகளை எனக்குள்ளே கேட்டுக்கொள்ளத் தொடங்கினேன். அந்த வகையில், ஆர்கிலிக் ஓவியங்கள், சுவரோவியங்கள், சாக்பீஸ் ஓவியங்கள், முக வார்ப்புகள் (Portraits) எனப் பல வகைமைகளில் தடம் பதித்து வரும் தமிழ்ப்பித்தன் ஓர் ஆளுமையாக உருக்கொள்வது அவரது கோட்டோவியங்களிலும், அதை ஊடகமாகக் கொண்ட நிகரோவியங்களிலும்தான்(Illustrations).
  • ஓ​வி​யத்​தின் மிக முக்கிய அங்கமான வண்ணங்​களைக் கைவிட்டு​விட்டு ஒருவர் வெறும் கோடுகளை நம்பி அதிலேயே பல ஆண்டுகள் ஈடுபடு​வதும், திளைப்​பதும் சாதா​ரண​மானது அன்று. இப்படி அவர் பல காலம் ஈடுபட்டு வரைந்த கோட்​டோ​வி​யங்​களும் இலக்​கி​யத்​தின் பொருட்டு வரைந்த நிகரோ​வி​யங்​களும் இன்று அசலான, தனித்த படைப்பு​களாக நிலைத்​திருக்​கின்றன.
  • தமிழ்ப்​பித்தன், ஓவியக் கல்லூரி​யில் தொழில் பயின்றவர் அல்ல. தொடக்​கத்​தில் ஓவியர் யாக்​க​னின் பாதிப்பு தனக்கு இருந்ததை அவரே ஒரு நேர்​காணலில் சொல்​கிறார். ஓவியர்கள் ஆதிமூலம், சந்ரு, தனபால், இந்திரன் ஆகிய ஆளுமை​களுடன் ஏற்பட்ட தொடர்​பும், அவர்​களுடைய ஓவியங்​களைப் பார்த்​துக் கற்றுக் கொள்​ளும் வாய்ப்பும் அவருக்​குள் பாதிப்பை ஏற்படுத்​தி​யுள்​ளது. இவையும் அவரது தீவிரமான உழைப்புமே தமிழ்ப்​பித்தனின் கோட்​டோ​வி​யங்​களில் பல்வேறு மாற்​றங்​களைக் கொண்டு வந்திருக்​கின்றன.
  • இவ்வாறு, அவருடைய ஓவியங்களை அடிக்​கடிப் பார்த்து, உணர்ந்து, புரிந்​து​கொள்ள முயற்​சித்து திரட்டிய ஓவியங்​களை, யதார்த்தப் பாணி ஓவியங்கள் (கழுதை போன்ற மிரு​கங்​களின் கோட்​டோ​வி​யங்​கள், சதுக்கபூதம், கருப்​பசாமி போன்ற தெய்வ உருவங்​கள்), சன்னக் கோடு​களாலான ஓவியங்கள் (நீண்ட ஒற்றைக் கம்பிகளை நெகிழ்த்தி வரையப்​பட்டவை போன்ற வார்ப்பு​கள்), கருத்​துப்​படங்களை ஒத்த ஓவியங்கள் (இவை கதைகளுக்காக வரையப்​பட்​டிருக்​கலாம் என்று அனுமானிக்​கிறேன்.
  • புத்​தரை​யும் பெரி​யாரை​யும் ஒரே ஓவியத்​தில் கதம்​பாக்​கிக் காட்டு​வது, நாலடி​யார் என்ற பனுவலின் சுவடி​யானது அருகில் கிடக்க, புலவர் அல்லது அந்நூலின் தொகுப்​பாசிரியர்​களுள் ஒருவர் அந்நூலைத் தட்டச்சு செய்வது போன்று வரைதல் உள்ளிட்ட படங்கள்), அரூபத்​தன்​மைக் கூடிய அவருடைய புதிய முயற்சிகள் (உருவ முயக்​கங்கள் கொண்ட ஓவியங்​கள்), நெருக்கக் கோட்​டோ​வி​யங்கள் (பல்​வேறு கோடு​கள், முக, உடல் வார்ப்பு​கள், மிருக, மனிதக் கலப்பு​டல்​கள், குறியீட்​டர்த்தம் பொதிந்த ஓவியங்​கள்) ஆகிய ஐந்தாக வகைப்​படுத்​திக் கொண்​டேன். இந்தப் பகுப்பு அவருடைய ஓவியங்களை மிகவும் அணுக்​க​மாகப் புரிந்​து​கொள்ள​வும், அவற்றின் பரிணா​மத்​தை​யும், பரிமாணங்​களை​யும் புரிந்​து​கொள்ள​வும் உதவும்.
  • எல்லைக் கோடு​களை​யும், வெளி​களை​யும் கொண்ட நெருக்கக் கோட்​டோ​வி​யங்கள் என்று நான் வசதி கருதி பெயரிட்​டிருக்​கும் ஓவியங்கள் முதல் பார்​வை​யின் நிமித்தமே ஆச்சரியம் அளிக்கத் தக்கவை​யாக, அபாரமான வடிவ நேர்த்தி​யுடன் வரையப்​பட்​ட​வையாக உள்ளன.
  • சில நேரங்​களில் முகங்கள் இத்தகைய அடர்த்திக் கொண்​ட​வை​யாக​வும், வேறு சில சந்​தர்ப்​பங்​களில், கோடுகளுக்​குள் அகப்​பட்ட முகங்​களாக​வும் பரிமாணம் கொள்​கின்றன. ஒரே முகத்​தில் இந்த இரண்டு தன்மைகளை​யும் கொண்ட முக வார்ப்பு​களும்கூட அதிக​மும் இடம்​பெறுகின்றன. சில ஓவியங்​களில், தலை, தலையைத் தாங்கும் உடம்பு என யாவும் சிறு சிறு கோடு​களால், கறுப்​புக்கு நெருக்​க​மானவையாக வரையப்​பட்ட உடல்​களில், கண், மூக்கு, வாய், சன்னமான முதுகுத் தண்டு என இவை மட்டும் ஓரக் கோடு​களால் தனித்துக் காட்டி அழகாக்​கப்​பட்​டுள்ளன. இவற்றுள், நித்​தி​ய​மாய்த் ததும்​பும் சோகத்​தைக் கண்டு எனக்கு வருத்த​மும், இந்த அழியாத சோகத்​தைத் தன் கோடு​களைக் கொண்டு அழகாக்​கிக் காட்டும் ஓவியரின் திறமை​யைக் கண்டு எனக்கு சந்தோஷ​மும் ஒருசேர மிகு​தி​யாகின்றன.
  • ஆயர்​கள், வேட்​டை​யாடிகள், பழங்​குடிகள், கறுப்​பின, விளிம்பு நிலை மக்களின் முக அமைப்பும், குறிப்​பாக, பெரிய வாய் அமைப்பும் கொண்ட அவர் ஓவிய மனிதர்கள் இயற்​கையோடு ஒன்றிய​வர்​களாக, கால்​நடைமை​யும், மனிதமை​யும் ஒருங்கே பெற்​றவர்​களாக, அவற்றின் கதம்ப தேகங்​களாக, ஆழ்ந்த யோசனை​யில் இருப்பவர்​களாக, உற்றுப் பார்ப்​பவர்​களாக, தம் நினை​வில் வாதையைச் சுமந்​தலைபவர்​களாக, முள் முளைத்த உடம்பினர்​களாக, முள்​வேலி​யிலும், தேர்க்​கால்​களி​லும் சிக்கிய தலைகளாக, நெரிசலில் சிக்கிய மனங்​களாக, அண்ணாந்து பார்ப்​பவர்​களாக, அரிதாய்ச் சிரிப்​பவர்​களாக இருக்​கிறார்​கள்.
  • உடம்​பெல்​லாம் காயத்​துடன், தையலிட்டுத் தைக்​கப்​பட்ட ஜதை உடல்​களாக இருக்​கும் தமிழ்ப்​பித்​தனின் ஓவியங்கள் அரிதான அழகுடையவை. சாதா​ரணத்​தில் நடக்காத ஒன்றைத் தன் சொற்​களாலும், வண்ணத்​தா​லும், கோடு​களாலும் சாதித்​துக் காட்டுபவை கலைப் பிரதி​கள். அப்படி விநோத அ-யதார்த்தக் கலவையாக வெளிப்​பட்​டுள்ள ஓவியங்கள் பலவற்​றை​யும் கூட தமிழ்ப்​பித்தன் வரைந்​துள்ளார். குறிப்​பாக, பலவித முகபாவனைகள்​ உள்ள ஓவியங்​களை​யும் மிருகத் தலைகள் உள்ள மனித உடல்​களை​யும் எடுத்​துக்​காட்​டாகச் சொல்​லலாம். அந்​தவகை​யில், ஆட்டுத்தலை ​கொண்ட, கைத்தடி ஏந்​திய பெண், எருமை சுமக்​கும் நபர், பண்டு நாட்டார் வழக்​காற்றியல் கதை​யில் வரு​வது​போலான பாம்​புப் பெண்களை ஒத்த அழகிய ஜோடிப் பெண்​களின் ஓ​வி​ம் என பல கலைப்​பிர​தி​களைக் ​கொண்​டவை இவரது ஓ​வியங்​கள்​.

நன்றி: இந்து தமிழ் திசை (26 – 01 – 2025)

Be the first to Comment.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

PrevNext
SuMoTuWeThFrSa
      1
2345678
9101112131415
16171819202122
232425262728 
Top