TNPSC Thervupettagam

திரைசொல்லி - 7: ஜனநாயகப் பாதைக்கு வித்திட்ட புரட்சி!

July 5 , 2024 11 hrs 0 min 15 0
  • படச்சுருள் வழியாக உருவெடுத்திருந்த சினிமா பெரும் பொருள் முதலீட்டின் பக்கச்சார்பில் காலூன்றியிருந்தது. அதன் காரணமாக, சில நூறு இயக்குநர்களுக்கு மட்டுமே சாத்தியப்படக்கூடிய மாளிகைக் கலைப் பொருளாகக் காட்சியிலிருந்தது. ஏதொன்றிலும் நிகழவேண்டிய ஜனநாயகம் பெரும் முதலீட்டின் இடைமறித்தலினால் திரைக் கலையில் நிகழவில்லை
  • ஆயினும் இரண்டாயிரத்துக்குப் பிறகான சினிமா பேரியக்கத்தில் உதயமான டிஜிட்டல் புரட்சி, மகத்தான மறுமலர்ச்சிக்கு உலகெங்கும் வித்திட்டது. விளைவாக, இன்றைக்கு எவரொரு வரும் நினைத்தால் குறைந்த முதலீட்டில் நல்ல திரைப்படங்களை எடுத்துவிடலாம்.
  • சமீபமாக கைபேசி நிறுவனங்களும் அனை வருக்குமான திரைப்பட இயக்கச் சாத்தியத்தை மேம்படுத்தும் விதமாக தமது சாதனத்தின் தொழில்நுட்பத் திறன்களைப் போட்டி போட்டு மேன்மைப்படுத்தி வருவது நாம் அறிந்ததுதான்.
  • அதிலும் சென்ற வருடம் இந்தி சினிமாவின் பிரபல இயக்குநர் விஷால் பரத்வாஜ் iphone 14 pro மூலம் ஒரு முழுநீளத் திரைப்படத்தைப் பிரதிபலிக்கும்விதமான ஒரு குறும்படத்தை இயக்கிக் காட்டினார். அம்முயற்சி, சொல்ல எண்ணும் கதைகளைத் திறன்பேசி கொண்டே திரைப்படங்களாக மாற்றிவிட முடியும் என்கிற நம்பிக்கையை அளித்தது.
  • இந்த வருடம் வந்திருக்கும் iphone 15 pro உறுதிப் பட்ட 4K தரத் துல்லியத்துடன் இன்னும் மேம்பட்ட திரைப்பட அனுபவத்தைக் கையளித்திருக்கிறது. அதற்கு நம்பிக்கை தரும் முகமாக ஆப்பிள் நிறுவனத்தின் திட்டமிடுதலில் மும்பை அகாடெமி ஆஃப் மூவிங் இமேஜ் (Mumbai Academy of Moving Image - MAMI) என்கிற திரைப் பண்பாட்டு நிறுவனம் ஒரு முன்னகர்வைச் செய்தது.
  • ஐந்து இயக்குநர்களைத் தேர்வு செய்து, ஐபோன் 15 ப்ரோ மூலம் ஐந்து குறும்படங்களை உருவாக்கும் வாய்ப்பை அவர்களுக்கு வழங்கியது. ஒரு தேர்ச்சி மிகுந்த இயக்குநர் தொடங்கி, சாமானியரான எவரொருவரும் தனது கைபேசியின் வழி ஒரு முழு நீளத் திரைப்பட உருவாக்கத்தைச் சாத்தியப் படுத்திக் கொள்ள முடியும் என்கிற கலை ஜனநாயகம் இதன் மூலம் நிரூபணம் ஆனது.
  • அந்த ஐந்து இயக்குநர்களும் சமகால இந்தியச் சுயாதீன சினிமாவில் (Independent Cinema) பாவியிருப்பவர்கள். நான் முதல் படைப்பாளராகக் குறிப்பிட விரும்புபவர் பிரதீக் வாட்ஸ். ‘அப் அலா ஊ’ (Eeb Allay Ooo!) என்கிற திரைப்படத்தை இயக்கியவர். கலைநுட்பத்திலும் அரசியலார்ந்த பார்வையிலும் சிறந்த வெளிப்பாட்டைக் கொண்டிருக்கும் படம்.
  • அடுத்ததாக வந்திருக்கும் ‘ஜல் தூ ஜலால் தூ’ (You Are Water, You Are the All-Powerful) குறும்படமே இந்த ஐந்து குறும்படங்களின் தொகுப்பில் முதன்மையானது. தொழிலாளர் வர்க்கத்தின் இடையறாத பணிச்சுமையால் ஏற்படும் மன அழுத்தமானது காரணத்திலடங்காத சிரிப்பாக மாறி, பணியிடத்தில் ஏற்படுத்தும் இடர்ப்பாட்டைப் பற்றி நுண்மையாகச் சித்திரித்தது.
  • இது ஆண்டன் செகோவின் ‘ஓர் அரசாங்க குமாஸ்தாவின் மரணம்’ (The Death of a Government Clerk) என்கிற சிறுகதையை அடியொற்றியது. கர்ப்பிணி மனைவியை விட்டு வேலை வாய்ப்பைத் தேடிப் புலம்பெயரும் ஓர் இளைஞனது வாதையைத் திரை விரிக்கும் குறும்படம் ‘புது வாழ்க்கை’ (A New Life). தந்தையாகப் போகும் ஒருவனின் மன அவசத்தை நமது பார்வைக்குக் கசிய விடும் உணர்ச்சிமிக்க கதையாடல்.
  • இயக்குநர் தனுஸ்ரீ தாஸின் கூட்டுப் பங்களிப்பில் இணை இயக்குநராக முகம் காட்டியிருக்கும் சவ்மியானாந்தா சகி, பிரதீக் வாட்ஸின் படங்களின் ஒளிப்பதிவாளர். தமிழில் அருண் கார்த்திக் இயக்கிய ‘நசீர்’ (2020) என்கிற சுயாதீனப் படத்தின் ஒளிப்பதிவாளரும்கூட. நேபாள மலைத்தொடரில் உள்ள கடுமை யான எல்லைக் கட்டுப்பாடுகள் நிலவும் பகுதி தமக்.
  • அங்கிருந்து கலிம்போங் என்கிற சந்தைக்கு இரண்டு சிறார்களும் ஒரு நடுத்தர வயதுப் பெண் ணும் பொருள்களைக் கடத்துகிறார்கள். அதன் பொருட்டு, இந்திய - நேபாள எல்லைகளைத் தாண்டுவதைச் சித்திரிக்கும் குறும்படம் ‘எல்லை களைக் கடப்பது’ (Crossing Borders). படத்தில் கர்மா, தஷி ஆகிய சிறார் நடிகர்களின் நடிப்பு, அப்பாஸ் கியாரோஸ்டமி காலகட்ட ஈரானிய சினிமாவை நமக்கு வாசனைப்படுத்துகிறது. பொருள் கடத்தும் பெண்ணாக வரும் மேனுகா பிரதான் தேர்ச்சிமிக்க நடிப்பை அளித்திருக்கிறார்.
  • ‘கானல் நீர்’ (Mirage) குறும்படம், ராஜஸ் தானி லுள்ள ஜெய்சல்மர் பாலைவன நிலப்பரப்பில் நிகழ்கிறது. 13 வயது நிரம்பிய சிறுவனான அலி, தனது சலிப்படைந்த வாழ்க்கை முறையிலிருந்து விலகி, அற்புதச் சாகசங்களையும் முடிவுறாத எழுச்சிகளையும் கொணரும் இணைய உலகத்தைத் தன்னுடைய கைபேசி வழி அடைகிறான்.
  • நவீன யுகத்தின் இருத்தலியல் சிக்கலால் அதிகரிக்கும் தப்பித்தலைச் சுட்டும் இப்படம், சிறந்த உலகக் குறும் படங்களின் வரிசையில் வைக்கப்பட வேண்டியது. இயக்குநர் அர்ச்சனா அதுல் ஃபத்கேயின் சிறந்த பங்களிப்பு.
  • ‘ஒபுர்’ (Cloud) என்பது கால வரையறையின்றி இணையத்தில் ஒளிப்படங்களையும் காணொளி களையும் சேகரப்படுத்த உதவுகின்ற ஒரு டிஜிட்டல் கொள்கலன். காஷ்மீரில் நடந்த போரால் சிதைவுற்ற வாழ்க்கையால் துயருறும் ஒரு சிறுவனைப் பற்றிய இக்குறும்படத்தை ஃபராஸ் அலி இயக்கியிருக்கிறார்.
  • ஒரு குறும்படம் விதிக்கிற எல்லைகளைத் தாண்டி முழுமையான சித்திரமாகத் திரையின் வழி நம்முள் விரியும் இந்தப் படைப்பு, ஆஸ்கர் விருதுப் போட்டியிலும் கான் விருதுப் போட்டியிலும் பங்குபெறத் தகுதியான ஒன்று.
  • இந்த ஐந்து குறும்படங்களும் ஐபோன் 15 ப்ரோ வில் எடுக்கப்பட்டு ஐமேக் ப்ரோவில் படத்தொகுப்புச் செய்யப்பட்டவை. இந்தச் சோதனை முயற்சி, படச்சுருள் காலகட்டத்து சினிமாவுக்கு மிக அருகில் வந்து புதிய சாதனைகளைப் படைத்திருக்கிறது. இக்குறும்படங்கள் அனைத்தையும் யூடியூப் சமூக வலையொளியில் காணலாம். இந்தக் குறும்படங்களைக் காணும் ஒருவர் தன்னுடைய தரமிக்க கைபேசி தொழில்நுட்பங்களின் மூலம் ஒரு திரைப்படத்தை உருவாக்கும் நம்பிக்கையைப் பெற்றுவிடுவார்.

நன்றி: இந்து தமிழ் திசை (05 – 07 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories