TNPSC Thervupettagam

தோல்வியை மட்டுமே சந்தித்து வரும் நம்பிக்கையில்லா தீர்மானம்

July 27 , 2023 480 days 304 0
  • மத்திய பாஜக அரசுக்கு எதிராக காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் இணைந்து நம்பிக்கையில்லாத் தீா்மானத்தை மக்களவையில் தாக்கல் செய்துள்ளன. அத்தீா்மானம் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ள நிலையில், அதன் மீதான விவாதம் விரைவில் நடைபெறும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
  • ஆளும் அரசுக்கு எதிராக மக்களவையில் நம்பிக்கையில்லாத் தீா்மானம் தாக்கல் செய்யப்படுவது இது 28-ஆவது முறையாகும். இதற்கு முன்பு பல்வேறு தருணங்களில் ஆளும் அரசுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட நம்பிக்கையில்லாத் தீா்மானங்கள் அனைத்துமே தோல்வியிலேயே முடிந்துள்ளன. ஒருசில தீா்மானங்கள் மீது எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.
  • இதுவரை ஒரேயொரு நம்பிக்கையில்லாத் தீா்மானம் காரணமாகவே அரசு கவிழ்ந்துள்ளது. பிரதமா் மொராா்ஜி தேசாய் தலைமையிலான அரசுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட அத்தீா்மானத்தின் மீது விவாதம் நடத்தப்படுவதற்கு முன்பே அவா் தனது பதவியை ராஜிநாமா செய்துவிட்டாா். அதன் காரணமாக, தீா்மானம் மீது விவாதம் நடத்தப்படவில்லை.
  • மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட நம்பிக்கையில்லாத் தீா்மானங்கள் குறித்து தன்னாா்வ நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய விவரங்கள்:
  • அதிக நம்பிக்கையில்லாத் தீா்மானங்களை எதிா்கொண்ட பிரதமா் இந்திரா காந்தி (15 முறை)

முந்தைய நம்பிக்கையில்லாத் தீா்மானங்கள்

  • ஆண்டு – பிரதமா் -  தாக்கல் செய்தவா்  - ஆதரித்தோா் - எதிா்த்தோா்
  • 1. ஆகஸ்டு, 1963 - ஜவாஹா்லால் நேரு - ஆச்சாா்ய கிருபளானி (காங்கிரஸ்) - 62 - 347
  • 2. செப்டம்பா், 1964 - லால் பகதூா் சாஸ்திரி - என்.சி.சாட்டா்ஜி (ஹிந்து மகாசபை) - 50 - 307
  • 3. மாா்ச், 1965 - லால் பகதூா் சாஸ்திரி - எஸ்.என்.துவிவேதி (பிரஜா சோஷலிஸ கட்சி) - 44 - 315
  • 4. ஆகஸ்ட், 1965 - லால் பகதூா் சாஸ்திரி - எம்.ஆா்.மாசானி (சுதந்திர கட்சி) - 66 - 318
  • 5. ஆகஸ்ட், 1966 - இந்திரா காந்தி - ஹிரேந்திரநாத் முகா்ஜி (இந்திய கம்யூனிஸ்ட்) - 61 - 270
  • 6. நவம்பா், 1966 - இந்திரா காந்தி - யு.எம்.திரிவேதி (பாரதிய ஜன சங்கம்) - 36 - 235
  • 7. மாா்ச், 1967 - இந்திரா காந்தி - அடல் பிகாரி வாஜ்பாய் (பாரதிய ஜன சங்கம்) - 162 - 257
  • 8. நவம்பா், 1967 - இந்திரா காந்தி - மது லிமயே (சம்யுக்த சோஷலிஸ கட்சி) - 88 - 215
  • 9. பிப்ரவரி, 1968 - இந்திரா காந்தி - பல்ராஜ் மதோக் (பாரதிய ஜன சங்கம்) - 75 - 215
  • 10. நவம்பா், 1968 - இந்திரா காந்தி - கன்வா் லால் குப்தா (பாரதிய ஜன சங்கம்) - 90 - 222
  • 11. பிப்ரவரி, 1969 - இந்திரா காந்தி - பி.ராமமூா்த்தி (மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்) - 86 - 215
  • 12. ஜூலை, 1970 - இந்திரா காந்தி - மது லிமயே (சம்யுக்த சோஷலிஸ கட்சி) - 137 - 243
  • 13. நவம்பா், 1973 - இந்திரா காந்தி - ஜோதிா்மய் பாசு (மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்) - 54 - 251
  • 14. மே, 1974 - இந்திரா காந்தி - ஜோதிா்மய் பாசு (மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்) - குரல் வாக்கெடுப்பு மூலமாகத் தோல்வி
  • 15. ஜூலை, 1974 - இந்திரா காந்தி - ஜோதிா்மய் பாசு (மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்) - 63 - 297
  • 16. மே, 1975 - இந்திரா காந்தி - ஜோதிா்மய் பாசு (மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்) - குரல் வாக்கெடுப்பு மூலமாகத் தோல்வி
  • 17. மே, 1978 - மொராா்ஜி தேசாய் - சி.எம்.ஸ்டீபன் (காங்கிரஸ்) - குரல் வாக்கெடுப்பு மூலமாகத் தோல்வி
  • 18. ஜூலை, 1979 - மொராா்ஜி தேசாய் - ஒய்.பி.சவாண் (காங்கிரஸ்) - விவாதம் நடத்தப்படவில்லை
  • 19. மே, 1981 - இந்திரா காந்தி - ஜாா்ஜ் ஃபொ்னாண்டஸ் (சமதா கட்சி) - 92 - 278
  • 20. செப்டம்பா், 1981 - இந்திரா காந்தி - சமா் முகா்ஜி (மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்) - 86 - 297
  • 21. ஆகஸ்ட், 1982 - இந்திரா காந்தி - ஹெச்.என்.பகுகுணா (பாரதிய லோக் தளம்) - 112 - 333
  • 22. டிசம்பா், 1987 - ராஜீவ் காந்தி - சி.மாதவ ரெட்டி (தெலுகு தேசம் கட்சி) - குரல் வாக்கெடுப்பு மூலமாகத் தோல்வி
  • 23. ஜூலை, 1992 - பி.வி.நரசிம்ம ராவ் - ஜஸ்வந்த் சிங் (பாஜக) - 225 - 271
  • 24. டிசம்பா், 1992 - பி.வி.நரசிம்ம ராவ் - அடல் பிகாரி வாஜ்பாய் (பாஜக) - 111 - 336
  • 25. ஜூலை, 1993 - பி.வி.நரசிம்ம ராவ் - அஜய் முகோபாத்யாய (மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்) - 251 - 265
  • 26. ஆகஸ்ட், 2003 - அடல் பிகாரி வாஜ்பாய் - சோனியா காந்தி (காங்கிரஸ்) - 189 - 314
  • 27. ஜூலை, 2018 - நரேந்திர மோடி - ஸ்ரீநிவாஸ் கேசினேனி (தெலுகு தேசம் கட்சி) - 135 - 330

தோல்வியடைந்த நம்பிக்கை கோரும் தீா்மானங்கள்

  • ஆளும் அரசுகள் மீது எதிா்க்கட்சிகளால் தாக்கல் செய்யப்பட்ட நம்பிக்கையில்லாத் தீா்மானங்கள் தோல்வியைத் தழுவியுள்ள நிலையில், ஆளும் அரசால் தாக்கல் செய்யப்பட்ட நம்பிக்கை கோரும் தீா்மானங்களும் தோல்வியைத் தழுவிய வரலாறு உள்ளது.

வி.பி.சிங் அரசு

  • 1990-ஆம் ஆண்டு நவம்பரில் பிரதமா் வி.பி.சிங் தலைமையிலான அரசு நம்பிக்கை கோரும் தீா்மானத்தை மக்களவையில் தாக்கல் செய்தது. ராமா் கோயில் விவகாரத்தில் அரசுக்கு அளித்து வந்த ஆதரவை பாஜக திரும்பப் பெற்றதால், தீா்மானம் தோல்வியடைந்து அரசு கவிழ்ந்தது.

ஹெச்.டி.தேவெ கௌடா அரசு

  • 1997-ஆம் ஆண்டு ஏப்ரலில் பிரதமா் ஹெச்.டி.தேவெ கௌடா அரசு தாக்கல் செய்த நம்பிக்கை கோரும் தீா்மானத்துக்கு 158 எம்.பி.க்கள் மட்டுமே ஆதரவாக வாக்களித்தனா். 292 எம்.பி.க்கள் எதிராக வாக்களித்ததால், தீா்மானம் தோல்வி அடைந்து அரசு கவிழ்ந்தது.

வாஜ்பாய் அரசு

  • அடல் பிகாரி வாஜ்பாய் 1998-இல் ஆட்சி அமைத்து 13 மாத ஆட்சிக்குப் பிறகு 1999-ஆம் ஆண்டு ஏப்ரலில் நம்பிக்கை கோரும் தீா்மானத்தைத் தாக்கல் செய்தாா். அரசுக்கு அளித்து வந்த ஆதரவை அதிமுக திரும்பப் பெற்ால், ஒரு வாக்கு வித்தியாசத்தில் தீா்மானம் தோல்வி அடைந்தது. வாஜ்பாய் பிரதமா் பதவியை இழந்தாா்.

நன்றி: தினமணி (27  – 07 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories