TNPSC Thervupettagam

நிச்சயமற்ற சூழலில் பாதுகாப்பு தரும் முதலீடு

June 24 , 2024 7 days 47 0
  • சமீபத்தில் மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகின. இதனால், பங்குச் சந்தையில் நிச்சயமற்ற நிலை காணப்படுகிறது. சர்வதேச அரசியல் பிரச்சினைகள், பொருளாதார சூழல் உள்ளிட்ட காரணங்களால் முதலீட்டாளர்கள் முதலீடு சார்ந்த குழப்பத்தில் உள்ளனர். இத்தகைய சூழலில் எதில் முதலீடு செய்வது என்ற குழப்பத்தில் நீங்களும் இருக்கிறீர்களா? உங்களுக்கு மல்டி அசெட் திட்டம் பொருத்தமாக இருக்கும்.
  • மல்டி அசெட் முதலீடு என்பது பலதரப்பட்ட பிரிவுகளில் முதலீடு செய்வதாகும். இது ஏற்கெனவே பிரபலமான திட்டம் என்ற போதிலும், நிச்சயமற்ற சூழலில் இத்திட்டம் கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது.
  • ஏனென்றால் மல்டி அசெட் என்பது பங்கு, கடன் பத்திரங்கள், கமாடிட்டி உள்ளிட்ட பலதரப்பட்ட சொத்து வகைகளை உள்ளடக்கியதாகும். ஒற்றை சொத்துகளில் முதலீடு செய்யாமல் பலதரப்பட்ட பிரிவுகளில் முதலீடு செய்யும்போது நீண்டகால அடிப்படையில் நல்ல வருவாயை பெற முடியும் என்பதை தரவுகள் நமக்குக் காட்டுகின்றன.
  • மல்டி அசெட் பிரிவுகளில் முதலீடு செய்வதால், பங்குச் சந்தை நல்ல வளர்ச்சியில் இருக்கும்போது அதற்கான பலனையும் முதலீட்டாளர் பெற முடியும், நிச்சயமற்ற சூழலில் கடன் பத்திரங்கள் மூலம் நிலையான ஆதாயமும் பெற முடியும். மல்டி அசெட் பிரிவுகளில் முதலீடு செய்வதற்கான சிறந்த வழி, மல்டி அசெட் நிதித் திட்டங்களை தேர்வு செய்வததுதான். இதன் மூலம் முதலீட்டாளர்கள் எந்தச் சிக்கலும் இல்லாமல் பல்வேறு அசெட் பிரிவுகளில் எளிதாக முதலீடு செய்ய முடியும். இத்திட்டத்தில் சந்தை நிலவரத்துக்கு ஏற்ப ஒதுக்கீடு செய்யப்படுவதால் முதலீட்டாளர்களின் நேரமும் ஆற்றலும் மிச்சப்படுகிறது.
  • மல்டி அசெட் திட்டங்களில் ஐசிஐசிஐ புருடென்சியல் மல்டி அசெட் திட்டம் பாரம்பரியமிக்கது. 22 ஆண்டுகள் பாரம்பரியமிக்க இத்திட்டத்தின் ஆண்டு சராசரி வளர்ச்சி விகிதம் (சிஏஜிஆர்) 21.39 சதவீதம் ஆகும்.
  • நடப்பு ஆண்டு மார்ச் வரையிலான நிலவரப்படி, சென்ற ஆண்டுடன் ஒப்பிட இதன் ஆதாயம் 31.57 சதவீதமாகும். அதேபோல் மூன்று ஆண்டுகளில் இதன் சிஏஜிஆர் 22.24 சதவீதமாகவும், ஐந்து ஆண்டுகளில் அது 19.45 சதவீதமாகவும் உள்ளன.

நன்றி: இந்து தமிழ் திசை (24 – 06 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories