TNPSC Thervupettagam

நெல்லை சீமையின் மாவீரன் ஒண்டிவீரன்

August 21 , 2023 511 days 1334 0
  • தென் தமிழகத்தில் பாளையக்காரர்களாக இருந்து பிரிட்டிஷாரை எதிர்த்துப் போராடி தன் உயிரை இழந்த மாவீரர்களின் வரிசையில் மாவீரன் ஒண்டிவீரன் மகத்தானவன். பாளையங் கோட்டை சமஸ்தானத்தின் புலித்தேவன் படைத்தளபதியாக இருந்து தன் மன்னனுக்கும் பாதுகாவலனாக தன் மண்ணையும் மக்களையும் காக்கும் காவல் தெய்வமாக அந்நியரை எதிர்த்துப் போராடியவர் மாவீரன் ஒண்டிவீரன்.
  • வணிகம் செய்து பஞ்சம் பிழைக்க இந்த மண்ணிற்கு கிழக்கிந்திய கம்பெனி என்ற பெயரில் வந்த வெள்ளையனும் ஏற்கனவே இங்கு கொள்ளை அடிக்க வந்து முகாமிட்டிருந்த இஸ்லாமிய கொள்ளை கூட்டமும் ஒரு கட்டத்தில் ஒன்றிணைந்து இந்த மண்ணின் மைந்தர்களை அடிமைப்படுத்த கை கோர்த்தது. இவர்களின் வரி வசூல் என்னும் சுரண்டல் உச்சத்தை அடைந்த போது பூலித்தேவன் வரி கொடுக்க மறுத்தார்.
  • புலித்தேவன் வரி கொடுக்க மறுத்த காரணத்தால் கிறிஸ்தவ வெள்ளையனும் இஸ்லாமிய கொள்ளையனும் ஒன்றிணைந்து 1755 -இல் நெல்லை சீமை மீது போர் தொடுத்த போது நெல்லை சீமையின் பாளையத்தின் எல்லையிலேயே மாவீரன் ஒண்டிவீரன் அவர்களின் படைகளை புறமுதுகிட்டு ஓட வைத்தார். புலித்தேவனின் படைகளாலும் ஒண்டிவீரனின் அதிரடி வியூகத்தின் முன்னும் எதிர்த்து நிற்க முடியாத அந்நிய படைகள் தொடர்ந்து தோற்று ஓடியது. இருந்தாலும் 12 ஆண்டுகளுக்குப் பிறகு பெரும் படையோடு திரண்டு வந்த இஸ்லாமிய கிறிஸ்தவ கொள்ளையர்ர்களின் படைகள் பாளையங்கோட்டை எல்லைக்கு வெளியே நெற்கட்டும் சேவலை முற்றுகையிட்டு தாக்க முயன்றது .
  • அந்நியப் படைகளை ஒண்டிவீரன் தன் மக்களோடும் படையினரோடும் இணைந்து தடுத்தார் . தற்காப்பு யுத்தம் மூலம் அவர்களை வெளியேற்றிவிட்டு அந்த இடத்தை விட்டு தாமும் தம் மக்களும் கூட பாதுகாப்பாக வெளியேறும் திட்டத்தோடு ஒண்டிவீரன் வியூகம் அமைத்து களம் கண்டார்.
  • அப்போது அங்கு வந்திருந்த வெள்ளையன், ஒண்டிவீரனுக்கு எதிராக ஒரு சவால் விடுத்து உங்களில் எவரேனும் ஒரு போர் வீரன் எங்களது படைக்கும் ஊடுருவி எங்களது பட்டத்து குதிரையையும் பட்டத்து வாளையும்  எடுத்துக்கொண்டு நாங்கள் கட்டி தொங்க விட்டிருக்கும் வெண்கல நகராவை ஒலிக்க வைத்து விட்டால் நாங்கள் நெற்கட்டும் சேவலை விட்டு நிரந்தரமாக அகன்று விடுகிறோம். இனி எக்காலத்திலும் நெல்லை பாளையங் கோட்டை  பாளையக்காரர்களிடம் வரி கேட்க மாட்டோம் என்று ஒரு சவால் விடுத்தார்.  இதுதான் சரியான தருணம் என்று திட்டமிட்ட ஒண்டிவீரன் ஒரு சாதாரண கூலி தொழிலாளியை போல காலணிகளை செப்பனிடும் தொழிலாளியாக எதிரிகளின் படை முகாமிற்குள் ஊடுருவி சரியான தருணத்திற்காக காத்திருந்தான். 
  • சில நாட்கள் அந்த முகாமில் தங்கி பட்டத்து குதிரை பட்டத்து வாள் பற்றிய விவரங்கள் வெண்கல நெதரா அமைவிடம் விவரம் பற்றி எல்லாம் தகவல் சேகரித்துக் கொண்டு சரியான திட்டமிடலுடன் காத்திருந்தான்.  வெண்கல நிதராவோடு பெரும் சேதத்தை விளைவிக்கும் பீரங்கி படையையும் நிறுத்தி வைத்திருக்கும் அந்நிய படை முகாமை சரியாக கணக்கிட்ட ஒண்டிவீரன் தனது திட்டத்தை நிறைவேற்றுவதற்காக இருள் சூழ்ந்த அமாவாசை இரவை தேர்வு செய்தான். முதலில் பீரங்கியின் தாக்குதல் முனையை பிரிட்டிஷாரின் பக்கத்திற்கு நள்ளிரவில் திருப்பி வைத்துவிட்டு தனது திட்டத்தை அரங்கேற்ற ஒண்டிவீரன் தயாரானார். தடுக்க முயன்ற காவலர்களை எல்லாம் சத்தம் இன்றி குத்திக் கொன்றார்.
  • பட்டத்து வாளை எடுத்து தனது இடுப்பில் சொருகிக் கொண்டு குதிரையை கிளப்ப முயன்ற போது குதிரை ஒத்துழைக்க மறுத்து கனைத்து ஓடியது. சத்தத்தை கேட்டு வீரர்கள் காண ஓடி வந்தனர். ஒண்டிவீரன் குதிரைக்கு தீனி போடுகின்ற காடியில் மறைந்து தன்னை பாதுகாத்துக் கொண்டான். இருட்டில் நடந்ததை அறியாத எதிரிகளின் படைகள் இயல்பு நிலைக்குத் திரும்பியது. இருட்டில் யார் ? என கண்டறிய முடியாத சூழலில் குதிரையை மீண்டும் காடிக்கு பக்கத்திலேயே நிறுத்த ஒரு ஈட்டியை அறைந்து கட்ட முயன்ற போது ஈட்டி தரையில் அறையப்படும் போது ஒண்டிவீரனின் கையும் சேர்த்து தரையோடு அறையப்பட்டது.  படுகாயம் அடைந்த நிலையில் உயிர் வலியை பொறுத்துக் கொண்டு சுதாரித்த ஒண்டிவீரனால் ஈட்டியில் இருந்து தனது கையை பிடுங்க முடியவில்லை .
  • மீண்டும் குதிரை கனைத்து விட்டால் காரியம் கெட்டுவிடும் என்ற மன உறுதியில் தனது கையை தானே வெட்டிக்கொண்டு வெண்கல நதாராவை ஒலிக்க செய்துவிட்டு குதிரையில் ஏறி மின்னலென மறைந்தார். நள்ளிரவில் இருட்டில் வெண்கல நதாரா ஒலித்ததால் அபாய ஒலி என்ற புரிதலில் அந்நியப் படைகள் அவசர அவசரமாக பீரங்கியின் மூலம் தாக்குதல் நடத்தியதில் ஒண்டிவீரனின் திட்டப்படி பீரங்கி குண்டுகள் எல்லாம் அவர்களின் படைகளையும் கூடாரத்தையும் ஆயுதக் கிடங்கையும் தாக்கி பேரழிவு நிகழ்ந்தது. எதிரியின் படைகள் ஆயுதங்கள் கிடங்குகள் பராமரிப்பு உபகரணங்கள் என்று மொத்தமாக அழிந்தது.
  • தேசத்தின் நலனுக்காகவும் பாதுகாப்பிற்காகவும் எனது ஒரு கையை மட்டுமல்ல உயிரை கூட தர தயங்க மாட்டேன் என்று சூளுரைத்த மாவீரன் ஒண்டிவீரனை எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமாக நிறுத்தி தனது மண்ணையும் மக்களையும் பாதுகாத்தார் பூலி தேவன். தென்மலை போராடு ஒண்டிவீரர் இறைவனடி சேர்ந்தாலும் பூலி தேவரின் குடும்பத்தை பாதுகாத்ததால் பூலி தேவரின் சமூகம் இன்றளவும் ஒண்டிவீரனை காவல் தெய்வமாக வணங்குகிறது. மாவீரன் ஒண்டிவீரனுக்கு உரிய கௌரவமும் அங்கீகாரம் வழங்கியதால் பூலி தேவனின் வம்சத்தை ஒண்டிவீரர் சமூகம் நன்றி உணர்வோடு வழிபடுகிறார்கள். 
  • அருந்ததியர் சமூகத்தில் பிறந்ததாக சொல்லப்படும் மாவீரன் ஒண்டிவீரனும் தேவர் சமூகத்தில் வழிவந்த மாவீரன் பூலித்தேவனும் சாதி பேதம் இன்றி இந்த மண்ணின் மைந்தர்களாக நல்ல புரிந்துணர்வும் களவியூகமும் அமைத்து தங்களின் பாளையத்தை பாதுகாத்து மக்களை அச்சமின்றி வாழ வைத்ததே ஹிந்துஸ்தானத்தின் பாரம்பரிய பெருமையின் அடையாளம். மாவீரன் ஒண்டிவீரன் மறைந்தாலும் நூற்றாண்டு கடந்து இன்னமும் நம் தேசத்தின் பாதுகாப்பு பணியில் இருக்கும் ஒவ்வொரு வீரனின் ஆன்ம பலமாக வாழ்ந்து வழிகாட்டி பாதுகாத்து வருவதாகவே தேசம் உணர்கிறது. 
  • சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் பக்கங்களில் முன்னிலைப்படுத்தப்பட வேண்டிய இது போன்ற மாவீரர்கள் திட்டமிட்டு இருட்டடிப்பு செய்யப்பட்டாலும் அவர்களின் வீரமும் தியாகமும் அழியாப் புகழோடு காலம் கடந்தும் இன்னமும் இந்த மண்ணில் மக்களின் வாழ்வியலோடு பின்னிப் பிணைந்து ஏதோ ஒரு வகையில் ஆத்ம பந்தமாக உலவுகிறது . வரலாறு நெடுகிலும் இந்த மண்ணின் மாண்பு காக்க தன் உயிரையும் தியாகம் செய்ய தயாராக எண்ணற்ற மாவீரர்கள் தொடர்ந்து பிறந்து வளர்ந்து வருவதே இந்த மண்ணின் தேசிய உணர்விற்கும் ஒண்டிவீரன் போல மாவீரர்களின் தியாகத்திற்குமான காலம் கடந்த சாட்சியம் .

நன்றி : இந்து தமிழ் திசை (21– 08 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories