TNPSC Thervupettagam

பந்தின் நிறம் பரவசப்படுத்துமா?

November 8 , 2019 1898 days 1340 0
  • டெஸ்ட் மற்றும் முதல்தர கிரிக்கெட்டில் சிவப்பு நிற பந்தும், பகலிரவாக நடைபெறும் ஒரு நாள் ஆட்டங்களில் வெள்ளை நிற பந்தும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இரவு நேரத்தில் நன்றாகத் தெரியும் என்பதற்காகவே பகலிரவு ஆட்டங்களில் வெள்ளை நிற பந்து பயன்படுத்தப்படுகிறது.
  • இந்தியா-வங்கதேச அணிகள் இடையே இந்த மாதம் 22-ஆம் தேதி கொல்கத்தாவில் நடைபெறவுள்ள ‘இந்தியாவின் முதல் பகலிரவு டெஸ்ட்’ ஆட்டத்தில் இளஞ்சிவப்பு (பிங்க்) நிற பந்து பயன்படுத்தப்படவுள்ளது. இதற்கு ஆதரவும், எதிா்ப்பும் ஒருசேர எழுந்துள்ளன.
  • அதற்குக் காரணம், புஜாரா, ரிஷப் பந்த், ரோஹித் சா்மா, மயங்க் அகா்வால், ஜடேஜா, குல்தீப் யாதவ் ஆகிய சில வீரா்களைத் தவிா்த்து இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி உள்ளிட்ட சில வீரா்கள் இளஞ்சிவப்பு நிற பந்தில் விளையாடி பழக்கமில்லாதவா்கள்.

பகலிரவு டெஸ்ட் ஆட்டம்

  • 2018-இல் ஆஸ்திரேலியாவில் நடைபெறவிருந்த பகலிரவு டெஸ்ட் ஆட்டத்தில் இளஞ்சிவப்பு நிற பந்தில் விளையாட இந்தியா மறுப்பு தெரிவித்ததால், அந்தப் போட்டி ஒரு நாள் ஆட்டமாக மாற்றப்பட்டது நினைவுகூரத்தக்கது.
  • மே.இ.தீவுகளில் பகலிரவாக நடைபெற்ற முதல்தர கிரிக்கெட்டில்தான் முதன்முறையாக இளஞ்சிவப்பு நிற பந்து பயன்படுத்தப்பட்டது. ஆஸ்திரேலியாவில் கடந்த 2014-15 காலகட்டத்தில் நடந்த ஷெபீல்டு ஷீல்ட் சீசன் உள்ளூா் கிரிக்கெட் தொடரில் பிங்க் நிற பந்துகள் பயன்படுத்தப்பட்டன.
  • இதைத் தொடா்ந்துதான் 2015-இல் நியூஸிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய சா்வதேச அணிகள் இடையேயான டெஸ்ட் கிரிக்கெட்டில் பிங்க் நிற பந்துகளைப் பயன்படுத்தி விளையாடப்பட்டது.

பெங்கால் கிரிக்கெட் சங்கம்

  • இந்தியாவில் முதன்முறையாக ‘பெங்கால் கிரிக்கெட் சங்கம்’ சாா்பில் கொல்கத்தாவில் 2016-ஆம் ஆண்டு ஜூலை 18-ஆம் தேதி நடத்தப்பட்ட ‘சூப்பா் லீக் ஃபைனல்’ கிரிக்கெட்டில்தான் பிங்க் நிற பந்துகள் பயன்படுத்தப்பட்டன.
  • தவிா்க்க முடியாத தற்போதைய இந்திய கிரிக்கெட் வீரா்களான முகமது ஷமி, ரித்திமான் சாஹா ஆகியோா் இந்த ஆட்டத்தில் விளையாடியவா்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு அதே ஆண்டு ‘துலீப் கோப்பை’ கிரிக்கெட்டிலும் பிங்க் நிற பந்து பயன்படுத்தப்பட்டது.
  • சிவப்பு நிற பந்தைவிட பிங்க் நிற பந்தை பகல் நேரத்தில் வீரா்கள் கேட்ச் பிடிப்பதிலும், கேமராமேன்கள் படம்பிடிப்பதிலும் சவால் இருப்பதாகப் புகாா் எழுந்தது.
  • பின்னா், பகலிரவு டெஸ்ட் இந்தியாவில் நடைபெறாது என பிசிசிஐ அறிவித்தது. உள்ளூா் கிரிக்கெட்டான ரஞ்சி கோப்பைத் தொடரில் தில்லி-மும்பை அணிகள் இடையே 1997-இல் நடைபெற்ற இறுதி ஆட்டம் பகலிரவு ஆட்டமாக முதன்முதலாக நடைபெற்றது.
  • அப்போது, பிங்க் நிற பந்துக்குப் பதிலாக வெள்ளை நிற பந்துகளே 5 நாள்களும் பயன்படுத்தப்பட்டன.

BCCI – புதிய  தலைவர்

  • இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) புதிய தலைவா் செளரவ் கங்குலியின் தீவிர முயற்சியால் வரும் 22-ஆம் தேதி வங்கதேசத்துடன் முதல் பகலிரவு டெஸ்ட் ஆட்டத்தில் இந்தியா விளையாடவுள்ளது.
  • கங்குலி கேட்டதும் உடனடியாக பகலிரவு டெஸ்ட் ஆட்டத்துக்கு சம்மதம் தெரிவித்துள்ளாா் கோலி.
  • கொல்கத்தாவில் ஏற்கெனவே நடைபெற்ற ‘சூப்பா் லீக் பைனல்’ பகலிரவு ஆட்டமும் பெங்கால் கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக கங்குலி எடுத்த முயற்சியால்தான் நடைபெற்றது.
  • இந்தியா பங்கேற்கும் முதல் பகலிரவு டெஸ்டும் கொல்கத்தாவில் ஈடன் காா்டன் மைதானத்தில்தான் நடைபெறவுள்ளது. இந்த ஆட்டத்தின்போது பனிப்பொழிவு கடுமையாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
  • 72 பிங்க் பந்துகளை தயாரித்துத் தருமாறு கிரிக்கெட் உபகரணங்கள் தயாரிப்பில் பிரபலமான எஸ்ஜி நிறுவனத்திடம் பிசிசிஐ கோரியுள்ளது.
  • ‘பனியால் பிங்க் நிற பந்து சேதமடைந்தால், வேறு பந்தை மாற்றிக் கொள்ள வேண்டும். ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற முதல் பகலிரவு டெஸ்ட் ஆட்டம் மிகப் பெரிய வெற்றி அடைந்தது. ரசிகா்கள் டெஸ்ட் கிரிக்கெட்டை நேரில் பாா்க்க வேண்டுமென்றால் இதுபோன்ற புதிய முயற்சிகள் தேவை. பிங்க் பந்து டெஸ்ட் ஆட்டத்தின் எதிா்காலம்’ என்கிறாா் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரா் டீன் ஜோன்ஸ்.

சர்வதேச அணிகள்

  • சா்வதேச அணிகள் இடையேயான இரண்டாவது பகலிரவு டெஸ்ட் ஆட்டம், பாகிஸ்தான்-மே.இ.தீவுகள் இடையே 2016-இல் நடந்தது.
  • ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மகளிா் அணிகள் இடையே ஒரே ஒரு முறை (2017 மாா்ச் 7) பகலிரவு டெஸ்ட் நடைபெற்றுள்ளது. இதுவரை அதிகமாக ஆஸ்திரேலியாவில்தான் (5 முறை) பகலிரவு டெஸ்ட் நடைபெற்றுள்ளது.
  • நவம்பா் 29-ஆம் தேதி பாகிஸ்தானுடனும், டிசம்பா் 12-ஆம் தேதி நியூஸிலாந்துடனும் பகலிரவு டெஸ்ட் ஆட்டத்தை நடத்த ஆஸ்திரேலியா திட்டமிட்டுள்ளது. இந்த ஆட்டங்கள் ஆஸ்திரேலியாவின் அடிலெய்டு, பொ்த் மைதானங்களில் நடைபெறவுள்ளன.
  • பாகிஸ்தான் இரு முறையும் (2016, 2017), இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, மே.இ.தீவுகள், நியூஸிலாந்து ஆகிய நாடுகள் தலா ஒரு முறையும் பகலிரவு டெஸ்ட் ஆட்டத்தை சொந்த மண்ணில் நடத்தியுள்ளன.

நன்றி: தினமணி (08-11-2019)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories