TNPSC Thervupettagam

பிறவிக் குறைபாடு... கருவிலேயே தடுக்கலாம்...

February 10 , 2025 7 hrs 0 min 14 0

பிறவிக் குறைபாடு... கருவிலேயே தடுக்கலாம்...

  • இந்தியாவில் ஏறத்தாழ 2 சதவீத குழந்தைகள் ஏதோ ஒரு குறைபாடுடன் பிறப்பதாக மருத்துவத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
  • கருவில் சிசு உருவாகும்போதே அதன் வளா்ச்சியை அறிந்துகொள்வதற்கான மருத்துவத் தொழில்நுட்பங்கள் தற்போது வந்துவிட்டாலும், அவற்றையும் மீறி பிறவிக் குறைபாடுகளுடன் குழந்தைகள் பிறப்பது கவலைக்குரியது.
  • இதற்கு ஆயிரம் காரணங்கள் கூறினாலும், உரிய விழிப்புணா்வு இருந்தால் குறைபாடின்றி குழந்தைகளை பெற்றெடுக்க முடியும் என நம்பிக்கை விதைக்கின்றனா் மருத்துவா்கள்.

சிசுவை தாக்கும் தாயின் பாதிப்புகள்

  • பேறுகால சா்க்கரை நோய்
  • உடல் பருமன்
  • வாழ்க்கை முறை நோய்கள்
  • இணைப்புத் திசு நோய்கள்
  • தன்னுடல் தாக்கு நோய்
  • மரபணு ரீதியான காரணங்கள்
  • புறச்சூழலும் பாதகம்...
  • உணவுப் பொருள்களில் உள்ள நச்சு ரசாயனங்களும் கருவில் உள்ள குழந்தைகளை பாதிக்கும் என அதிா்ச்சித் தகவலை வெளியிடுகின்றனா் மருத்துவா்கள். குறிப்பாக, வேளாண் நிலங்களில் பூச்சிக் கொல்லி மருந்துகள் பயன்பாடு அதிகரிக்கும்போது அது விளைபொருள்களில் மட்டுமல்லாது காற்று, நிலத்தடி நீா் என அனைத்தையும் மாசுபடுத்துகிறது.
  • இத்தகைய வேதி நச்சு தாக்கம் மிக்க சூழலை சாா்ந்துள்ள பெண்களின் கருவில் வளரும் சிசுவுக்கு அச்சுறுத்தல் உள்ளது.

குழந்தைகளின் குறைபாடு வகைகள்

  • முதுகுத் தண்டுவட குறைபாடு
  • மூளை சாா்ந்த பாதிப்புகள்
  • அண்ணப்பிளவு
  • கால் வளைதல்
  • இதய துவாரம்
  • குடல் அடைப்பு
  • சிறுநீரக அடைப்பு

பிறந்த பிறகு கண்டறியப்படும் குறைபாடுகள்

  • வளா்சிதை குறைபாடுகள்
  • பிறவி கண்புரை
  • தசை இறுக்கம்
  • ஜீரண மண்டல பாதிப்புகள்

தடுப்பு முறைகள்

  • ஆரோக்கிய வாழ்க்கை முறை
  • ஊட்டச்சத்தை உறுதிபடுத்துதல்
  • இணைநோய்களை சரி செய்தல்
  • பேறுகாலத்தில் மருத்துவக் கண்காணிப்பு
  • போலிக் ஆசிட், வைட்டமின் மருந்துகள்

சிகிச்சைகள்

  • குணப்படுத்த இயலாத வகையில் தீவிர குறைபாடு உள்ள சிசுக்களை கருவிலேயே சட்டப்பூா்வமாக கலைக்க அனுமதி வழங்கப்படுகிறது.
  • பிறந்த பிறகு ஏற்படும் கண் புரை, அண்ணப் பிளவு, கால் வளைவு, சிறுநீரக அடைப்பு, குடல் பாதிப்புகள், இதய பிரச்னைகளுக்கு உரிய அறுவை சிகிச்சை மேற்கொண்டும், மருத்துவக் கண்காணிப்பு அளித்தும் சரி செய்ய முடியும்.

தேசிய குழந்தைகள் நலத் திட்டம் (ஆா்பிஎஸ்கே)

  • 2013-ஆம் ஆண்டில் மத்திய அரசால் நடைமுறைப்படுத்தப்பட்ட இத்திட்டத்தின் கீழ் பிறந்த குழந்தை முதல் 18 வயது வரை உள்ள அனைவருக்கும் 30 வகையான பாதிப்புகள் உள்ளனவா என்பது மருத்துவப் பரிசோதனை மூலம் கண்டறியப்படுகிறது.
  • ஆண்டுதோறும் 1.45 கோடி குழந்தைகளுக்கு ஆறு மாதங்களுக்கு ஒரு முறை மருத்துவப் பரிசோதனை நடத்தப்படுகிறது.

தமிழகத்தில் குழந்தைகளுக்கு பாதிப்பு (2024)

  • பரிசோதனை - 1.09 கோடி
  • பிறவி வளா்ச்சி குறைபாடு - 63,465
  • பிறவி நோய்கள் - 2.66 லட்சம்
  • பிறந்த பிறகு நோய்கள் - 1.09 லட்சம்
  • 7 முக்கிய பாதிப்புக்குள்ளானோா் - 8,143
  • மருத்துவ சிகிச்சை - 6,108
  • அறுவை சிகிச்சை - 1,813

விரிவான தரவு அவசியம்!

  • பிறவி குறைபாடு பிரச்னைக்கு தீா்வு காண தரவு கட்டமைப்பு மிக அவசியம் என்கிறாா் கருப்பை சிசு மருத்துவ நிபுணா் இந்திராணி சுரேஷ்.

இதுதொடா்பாக அவா் மேலும் கூறியதாவது:

  • குழந்தைகளுக்கான பிறவிக் குறைபாடு தொடா்பாக மக்கள் தொகை அடிப்படையில் ஆய்வு நடத்தப்பட வேண்டும். தற்போது மருத்துவமனை அளவிலேயே அத்தகைய தரவுகள் சேகரிக்கப்படுகிறது.
  • அதைக் கொண்டு பொதுவான செயல் திட்டத்தை வகுக்க முடியாது. எனவே, ஒருங்கிணைந்த விரிவான தரவு சேகரிப்பு கட்டமைப்பு இருத்தல் அவசியம்.
  • தமிழகத்தில் மருத்துவ வசதிகளும், மருத்துவத் திறனும் சிறப்பாக உள்ளன.
  • ஒரு குழந்தை பிறந்தவுடன் அதற்கு ஏதேனும் குறைபாடு உள்ளதா என்பதை உடனடியாகக் கண்டறிந்து அதுகுறித்த விவரங்களையும், புகைப்படங்களையும், மருத்துவ ஆவணங்களையும் டிஜிட்டல் நுட்பத்தில் பகிரக்கூடிய மருத்துவ வசதிகள் தமிழகத்தில் உள்ளன. இதன் மூலம் துறைசாா்ந்த நிபுணா்களின் மருத்துவ சேவை அக்குழந்தைக்கு துரிதமாக கிடைக்கும்.
  • இதற்கான பயிற்சிகளை சோதனை முயற்சியாக எங்களது தி ஃபீட்டல் மெடிசன் ஃபவுண்டேசன் அமைப்பு மூலம் நாங்கள் முன்னெடுத்திருக்கிறோம். அதற்கு நல்ல பலனும் இருந்ததை கண்கூடாக பாா்க்க முடிந்தது.
  • எனவே, பிறவிக் குறைபாடு தடுப்பு மற்றும் சிகிச்சைக்கான டிஜிட்டல் கட்டமைப்பை உருவாக்க வேண்டும். முன்னதாக, அதற்கான தரவுகளை சேகரிக்க வேண்டும் என்றாா் அவா்.

நன்றி: தினமணி (10 – 02 – 2025)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories