TNPSC Thervupettagam

புதிய சாலைகளை உருவாக்குவது அவசியம்

January 29 , 2025 2 days 29 0

புதிய சாலைகளை உருவாக்குவது அவசியம்

  • மதுராந்​தகம் அருகிலுள்ள கருங்​குழி​யில் இருந்து பூஞ்​சேரி வரை 32 கி.மீ. தொலை​வுக்கு புதிய சாலை அமைக்க தமிழக அரசு முடி​வெடுத்து, அதற்கான சாத்​தி​யக்​கூறு அறிக்கை தயாரிக்க தமிழ்​நாடு சாலை மேம்​பாட்டு நிறுவன ஆணையம் மூலம் டெண்டர் கோரி​யிருப்பது வரவேற்கத்​தக்க முடிவாக அமைந்​துள்ளது.
  • தமிழகத்​தின் மக்கள்​தொகை 7 கோடி அளவுக்கு உயர்ந்​து​விட்ட நிலை​யில், வேலை​வாய்ப்பு மற்றும் படிப்பு போன்ற காரணங்​களுக்காக சென்னை உள்ளிட்ட பெருநகரங்​களில் இளைஞர்கள் குவி​யும் நிலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சென்னை நகரின் மக்கள்​தொகை ஒரு கோடியை எட்டி​யுள்​ளது. இதுதவிர, அண்டை மாவட்​டங்​களில் இருந்து சென்னைக்குள் தினந்​தோறும் பல லட்சம் பேர் வந்து செல்​கின்​றனர்.
  • இந்த காரணங்​களால், தற்போதுள்ள சாலை மற்றும் போக்கு​வரத்து வசதிகள் போதாமல் சென்னை திணறும் நிலையே இருந்து வருகிறது. குறிப்​பாக, தாம்​பரம் மற்றும் பெருங்​களத்​தூர் பகுதி தென்​மாவட்​டங்​களில் இருந்து வந்து செல்​வோரின் நுழைவாயிலாக இருப்​ப​தால் எத்தனை மாற்​றங்கள் செய்​தா​லும் அப்பகு​தி​யில் போக்கு​வரத்து நெரிசல் குறைந்த​பாடில்லை.
  • வார இறுதி நாட்​களில் பலர் சென்னை​யில் இருந்து வெளியூர் செல்​வதும், மீண்​டும் சென்னை திரும்​புவதும் அதிகரித்து வருகிறது. பண்டிகை காலங்​களில் 10 லட்சம் பேர் சென்னை​யில் இருந்து வெளி​யேறு​வதும் மீண்​டும் விடு​முறை முடிந்து சென்னை திரும்​புவதுமாக இருப்​ப​தால் அத்தகைய நாட்​களில் சென்னை நகரின் நுழைவுப்​பகு​திகள் போக்கு​வரத்து நெரிசலை சமாளிக்க முடி​யாமல் திணறி வருகின்றன.
  • இந்த சிக்​கலுக்கு ஒரு ஆறுதல் தீர்வாக தமிழக அரசின் மாற்று​வழித் திட்டம் அமையும் என்ப​தில் சந்தேகமில்லை. கருங்​குழி – பூஞ்​சேரி சாலை சென்னைக்​குள் நுழைய​வும், வெளி​யேற​வும் மாற்று வழியாக இருப்பது மட்டுமின்றி, ஜிஎஸ்டி சாலை​யை​யும், இசிஆர் சாலை​யை​யும் இணைக்​கும் முக்கிய வழித்​தடமாக அமையும்.
  • சென்னை நகரில் போக்கு​வரத்து நெரிசலைக் குறைக்க பல்வேறு முயற்சிகள் எடுத்​தா​லும், அவை தற்காலிக நடவடிக்கைகளாக இருப்​ப​தால், ஓரிரு ஆண்டு​களில் அந்த முயற்சிகள் பலனற்​றதாக மாறி விடு​கின்றன. பல்லா​வரம், குரோம்​பேட்டை, தாம்​பரம் போன்ற முக்கிய சந்திப்பு​களில் போக்கு​வரத்து நெரிசலில் சிக்​காமல் செல்​வதற்காக பாலங்கள் கட்டப்​பட்டன.
  • ஆனால், பாலங்​களின் மீது போக்கு​வரத்து நெரிசல் ஏற்பட்டு, சிக்னல் அமைப்​பது, போக்கு​வரத்து காவல்​துறை​யினர் நின்று போக்கு​வரத்தை ஒழுங்​குபடுத்துவது என்ற நிலை ஏற்படு​கிறது. பாலம் கட்டப்​படு​வதன் நோக்கமே நிறைவேறாமல் போய்​விடு​கிறது.
  • போக்கு​வரத்து நெரிசலின் இன்றைய தேவையை கணக்​கில் கொள்​ளாமல், இன்னும் 50 ஆண்டு​களுக்கு கணக்​கில்​கொண்டு பாலங்கள் கட்டப்​பட்​டால் மட்டுமே இதுபோன்ற சிக்​கலுக்கு தீர்வு காண முடி​யும். மக்கள்​தொகை​யும், வாகனங்​களின் எண்ணிக்கை​யும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
  • ஆனால், இருக்​கும் சாலைகளின்​மீதே பாலங்கள், நடைபாதைகள், தடுப்பு​கள், மரம் நடுவது, தூண்கள் கட்டு​வது, விளம்பர பலகைகள் வைப்​பது, கட்சி கொடிக் கம்பங்கள் நடுவது போன்ற செயல்​களால் சாலைகளின் அகலம் மென்​மேலும் குறைந்து ​விடு​கிறது. எ​திர்கால தேவையை கருத்​தில்​கொண்டு பு​திய அகலமான சாலைகளை உரு​வாக்​கினால் மட்டுமே ​போக்கு​வரத்து சிக்​கல்​ தீரும்.

நன்றி: இந்து தமிழ் திசை (29 – 01 – 2025)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories