பொங்கல் பறவை கணக்கெடுப்பு 2025
- தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் ஜனவரி மாதத்தில் பொங்கல் பண்டிகையின்போது நான்கு நாட்களுக்கு நடைபெறும் பறவைகள் கணக்கெடுப்புத் திட்டமே பொங்கல் பறவைகள் கணக்கெடுப்பு. தமிழ் பறவை ஆர்வலர்கள் கூட்டமைப்பு இதை ஒருங்கிணைக்கிறது.
- இந்தக் கணக்கெடுப்பின்போது, பறவை ஆர்வலர்கள் குறைந்தபட்சம் 15 நிமிடங்களுக்கு பறவைகளை அவதானித்து, பட்டியலிட்டு, அதனை eBird தளத்தில் பதிவேற்ற வேண்டும். இந்தத் தகவல்களின் மூலம் தமிழ்நாட்டில் தென்படும் பறவை இனங்களின் பரவல், அவற்றின் தற்போதைய நிலை, எண்ணிக்கை அடர்த்தி, அவை வாழுமிடங்களின் நிலை முதலியவற்றை கண்காணிக்க முடியும். பறவைகளைப் பாதுகாக்கும் முயற்சியில் இந்த ஆவணங்கள் பெரிதும் உதவுகின்றன.
எப்போது?:
- ஜனவரி 14 முதல் 17 வரை பொங்கல் விடுமுறை நாட்களில்.
என்ன செய்ய வேண்டும்?:
- குறைந்தபட்சம் 15 நிமிடங்கள் பறவைகளைப் பார்த்து, அடையாளம் கண்டு, அவற்றின் எண்ணிக்கையைக் கணக்கிட்டு பறவைப் பட்டியலை தயார் செய்ய வேண்டும். அப்பட்டியலை www.ebird.org/india ல் உள்ளிட வேண்டும். எத்தனை முடியுமோ அத்தனை பறவைப் பட்டியல்களை உள்ளிடலாம்.
- கல்லூரி, பள்ளி மாணவர்களையும், ஆர்வமுள்ள அனைவரும் இந்தப் பணியில் ஈடுபடலாம். குழுவாக ஒருங்கிணைந்தும் செய்யலாம். உங்களது பகுதியில் பொங்கல் நாட்களில் பறவை பார்த்தல், கணக்கெடுப்பு நடத்தும் எண்ணமிருந்தால் மேற்கண்ட தகவல்களை பயன்படுத்திக் கொள்ளலாம்.
நன்றி: இந்து தமிழ் திசை (15 – 01 – 2025)