TNPSC Thervupettagam

மீண்டும் பரவும் நிபா வைரஸ்

July 27 , 2024 174 days 173 0
  • கேரள மாநிலத்தில் 14 வயதுச் சிறுவன் நிபா வைரஸால் உயிரிழந்த நிலையில் 60 பேர் இந்த வைரஸினால் பாதிக்கப் பட்டுள்ளதாக அம்மாநிலச் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
  • நிபா வைரஸ் பரவல் தீவிரமாகியுள்ளதைத் தொடர்ந்து நிபா அறிகுறிகள் உள்ளவர்கள், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் ஆகியோரை 21 நாள்கள் தனிமைப்படுத்த வேண்டும் எனவும் கேரள அரசு அறிவுறுத்தியுள்ளது.

என்ன காரணம்

  • நிபா வைரஸ் விலங்கு களிடமிருந்து மனிதர்களுக்குப் பரவும் விலங்குவழித் தொற்று வகையைச் சேர்ந்தது. பழந்தின்னி வெளவால்கள் மூலமாகவே நிபா வைரஸ் மனிதர்களுக்குப் பரவியிருக்கலாம். பன்றிகள் மூலமாகவும் இவ்வைரஸ் பரவுகிறது.
  • கேரளத்தைப் பொறுத்தவரை 2018ஆம் ஆண்டில், முதன் முதலாக நிபா வைரஸ் கண்டறியப்பட்டது. இதைத் தொடர்ந்து 2019, 2021, 2023 ஆகிய ஆண்டுகளில் நிபா வைரஸின் பாதிப்பு அங்கே தொடர்ந்துவருகிறது.
  • பழந்தின்னி வெளவால்களின் எண்ணிக்கை கேரளத்தில் அதிகமாக இருப்பதாலும் அடர் காடுகள், தீவிரப் பருவநிலை மாறுதல்களைக் கேரளம் கொண்டிருப்பதாலும் நிபா வைரஸின் தாக்கம் அங்கே தொடர்ச்சியாக இருப்பதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
  • நிபா வைரஸ் இதற்கு முன் அசாம், மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களிலும் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அறிகுறிகள்:

  • நிபா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களுக்குக் காய்ச்சல், தலைவலி, தசை வலி, வாந்தி உணர்வு, தொண்டை வலி போன்றவை ஆரம்ப அறிகுறிகளாகக் காணப்படுகின்றன
  • தீவிரப் பாதிப்பில் இருப்பவர் களுக்கு மயக்கம், உடல் சோர்வு, தீவிர சுவாசத் தொற்றுகளும் ஏற்படும். மிகை தீவிர பாதிப்பில் மூளைப் பகுதியில் வீக்கம் ஏற்பட்டு கோமா, உயிரிழப்பு போன்றவையும் ஏற்படுகின்றன.

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்:

  • நிபா வைரஸுக்கு இதுவரை தடுப்பூசி கண்டறியப்படவில்லை. மக்கள் நெருக்கமாகக் கூடும் இடங்களைத் தவிர்த்தல், முகக் கவசம் அணிதல், கைகளைக் கிருமிநாசினி போட்டுக் கழுவுதல் போன்றவை அடிப்படையான நோய்த் தடுப்பு வழிமுறைகளாக அறிவுறுத்தப்பட்டுள்ளன.

நன்றி: இந்து தமிழ் திசை (27 – 07 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories