TNPSC Thervupettagam

வாக்குறுதிகள் மட்டும் போதாது: வழிமுறைகளையும் சொல்ல வேண்டும்!

April 2 , 2019 2111 days 1519 0
  • பொதுத் தேர்தல் வந்தாலே எல்லா அரசியல் கட்சிகளும் வாக்குறுதி அளிப்பது வழக்கமானது. அவற்றில் ஊர்ப் பெயர் மாற்றம், ஆட்சிமுறையில் மாற்றம், அமைப்புகளில் மாற்றம் என்பதெல்லாம் அரசியல் கட்சிகளின் சமூக, அரசியல் நிலைப்பாடுகளைப் பிரதிபலிப்பவை.
  • வேலைவாய்ப்பு, வரி விகித மாற்றம், பொருளாதாரச் சீர்திருத்தங்கள் போன்றவை மக்களுடைய அன்றாட வாழ்க்கை தொடர்பானவை மட்டுமல்ல, அதற்கான சரியான திட்டமிடலையும் கோரி நிற்பவை.
அரசின் திட்டங்கள்
  • அரசின் திட்டங்களைத் தொடர்ச் செலவினம், தொடராச் செலவினம் என்று பிரிப்பது வழக்கம். விலையில்லா சைக்கிள், மடிக்கணினி, தாலிக்குத் தங்கம் போன்றவை பயனாளிகளை அடையாளம் கண்டு அவர்களுக்கு வழங்கிய பிறகு முடிவுக்கு வந்துவிடும்.
  • கல்வி உதவித் தொகை, வேலையில்லாதோருக்கு உதவித் தொகை, கொள்முதலுக்கு ஊக்குவிப்புத் தொகை, விதை-உர மானியம் போன்றவை தொடர் செலவினங்கள்.
  • இவையும் அவசியம்தான். ஆனால், திட்டமிட்டு அறிவிக்க வேண்டும்.
  • வாக்குறுதியை அளிக்கும் முன்னால் அது எப்படிப்பட்ட செலவு என்பதை அறிந்து அறிவிக்க வேண்டும்.
  • தொடரும் செலவினங்களுக்கான கால வரம்பும் நோக்கமும் தெளிவுபடுத்தப்பட வேண்டும்.
  • அதற்கான நிதியாதாரங்கள் என்ன என்பதையும் விளக்க வேண்டும்.
  • எந்த ஒரு திட்டத்தைச் செய்வதற்கு முன்னாலும் அதில் செலவுசெய்யப்படவிருக்கும் தொகையை வேறு திட்டங்களுக்குச் செலவு செய்தால் எத்தனை பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும், பொருளாதார வளர்ச்சி எந்த அளவுக்கு உயரும், எத்தனைத் தொழில்களுக்கு அது உயிராதாரமாகத் திகழும் என்றெல்லாம் பார்க்க வேண்டும்.
  • தேர்தல் நேரத்தில் வாக்குறுதிகளை வழங்கும் அரசியல் கட்சிகள் அதற்கான நிதியாதாரங்கள் என்ன என்று விளக்கும்போதே இத்தகைய விவாதங்களுக்கு வாய்ப்பு அமையும்.
  • வருவாய் வரி இனங்கள், அரசுத் துறை நிறுவனங்கள் அளிக்கும் லாபம் அல்லது லாப ஈவுகள், அரசு அளிக்கும் சேவைகளுக்கான கட்டணங்கள், அரசின் நிலம் உள்ளிட்ட சொத்துகளுக்கான வாடகை ஆகியவற்றிலிருந்துதான் அரசுக்கு வருமானம் கிடைக்கிறது.
  • புதிய திட்டங்களைத் தொடங்கிவிட்டு வேறு எந்த வகை வருமானத்தையும் பெருக்கிக்கொள்ள முடியாதபட்சத்தில் பொருள்கள் மீதான வரியையும் வருமான வரி, நிறுவன வரி உள்ளிட்டவற்றையும் உயர்த்தித்தான் இந்தத் தொகையைப் பெற முடியும்.
  • ரயில் கட்டணம், மின் கட்டணம், பள்ளி-கல்லூரி கல்விக் கட்டணம், சிகிச்சைகளுக்காகும் சுகாதாரக் கட்டணம் ஆகியவற்றை உயர்த்தித்தான் நிதியைத் திரட்ட முடியும்.
  • இப்படிப்பட்ட நிலையில் கடன் வாங்கிச் சமாளிக்கலாம்.
  • ஆனால், சர்வதேச அளவில் நம்முடைய நிதி நிர்வாகத்தின் மீதும் நாணயத்தின் மீதும் மதிப்பு சரிந்துவிடும்.
  • எனவே, தேர்தல் வாக்குறுதிகளாகப் புதிய திட்டங்களை அறிவிக்கும்போது நிதானம் சேவை.
  • திட்டங்களின் அடிப்படை நிதியாதாரங்களே.

நன்றி: இந்து தமிழ் திசை

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories