TNPSC Thervupettagam

விளையாட்டு 2023

December 31 , 2023 379 days 328 0

ஜனவரி

  • 16:: இலங்கைக்கு எதிரான ஒருநாள் ஆட்டத்தில் இந்தியா வென்று, ஒருநாள் கிரிக்கெட்டில் அதிகபட்ச வெற்றியை (317 ரன்கள்) பதிவு செய்து வரலாறு படைத்தது.
  • 18:: இந்திய மல்யுத்த சம்மேளன தலைவராக இருந்த பிரிஜ் பூஷண் சிங் சரண், வீராங்கனைகளை பாலியல் துன்புறுத்தல் செய்வதாக புகார் தெரிவித்து, அவரை பதவி நீக்கக் கோரி மல்யுத்தப் போட்டியாளர்கள் தில்லி ஜந்தர் மந்தரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
  • 29: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸில் சாம்பியனான செர்பியாவின் நோவக் ஜோகோவிச், உலகில் அதிக கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள் (22)வென்ற ஸ்பெயினின் ரஃபேல் நடால் சாதனையை சமன் செய்தார்.
  • 29:: ஆடவர் ஹாக்கி உலகக் கோப்பை போட்டியில் ஜெர்மனி 3-ஆவது முறையாக வாகை சூடியது.
  • 29:: பத்தொன்பது வயதுக்கு உள்பட்ட மகளிருக்கான அறிமுக உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா சாம்பியன் ஆனது.

பிப்ரவரி

  • 21: இந்திய நட்சத்திரம் சானியா மிர்ஸா, சர்வதேச டென்னிஸிலிருந்து ஓய்வு பெற்றார்.
  • 26:: மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியா 6-ஆவது முறையாக கோப்பையைக் கைப்பற்றியது.

மார்ச்

  • 18:: ஐஎஸ்எல் கால்பந்து போட்டியில் முதல் முறையாக சாம்பியன் ஆனது ஏடிகே மோகன் பகான் அணி.
  • 22:: உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்தியாவின் சரப்ஜோத் சிங் தங்கம் வென்றார்.
  • 23:: மகளிருக்கான சர்வதேச தடகளப் போட்டிகளில் திருநங்கைகள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என உலக தடகள சம்மேளனம் அறிவித்தது.
  • 25: மகளிர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் நீது கங்காஸ், சவீதி போரா தங்கப் பதக்கம் வென்றனர்.
  • 26: உலக மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் நிகாத் ஜரீன், லவ்லினா போர்கோஹெய்ன் சாம்பியனாகினர்.
  • 26: : மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியின் அறிமுக சீசனில் மும்பை இண்டியன்ஸ் கோப்பை வென்றது.
  • 26: ஸ்விஸ் ஓபன் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ்/சிராக் ஷெட்டி கூட்டணி சாம்பியனானது.

ஏப்ரல்

  • 12:: ஐபிஎல் போட்டியில் கேப்டனாக சென்னை சூப்பர் கிங்ஸை 200-ஆவது ஆட்டத்தில் வழிநடத்திய தோனி, அத்தகைய பெருமை பெற்ற ஒரே வீரர் ஆனார்.
  • 30:   ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ்/சிராக் ஷெட்டி கூட்டணி முதல் முறையாக தங்கப் பதக்கம் வென்று அசத்தியது.

மே

  • 11:: ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் பேட்டர் யஷஸ்வி ஜெய்ஸ்வால், அதிவேக அரைசதம் (13 பந்துகள்) அடித்து சாதனை படைத்தார்.
  • 16: ஒரே ஆண்டில் டெஸ்ட், ஒருநாள், டி20 மற்றும் ஐபிஎல் போட்டிகளில் சதம் அடித்த ஒரே வீரர் என்ற வரலாறு படைத்தார் இந்தியாவின் ஷுப்மன் கில்.
  • 21:  இங்கிலாந்து பிரீமியர் லீக் கால்பந்து போட்டியில் மான்செஸ்டர் சிட்டி  7-ஆவது  முறையாக சாம்பியன் ஆனது.
  • 29:: ஐபிஎல் இறுதி ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் 5-ஆவது முறையாக சாம்பியனாகி, மும்பை இண்டியன்ஸ் சாதனையை சமன் செய்தது.

ஜூன்

  • 10:: பிரெஞ்சு ஓபன் கிராண்ட்ஸ்லாம் வென்றார் போலந்தின் இகா ஸ்வியாடெக்.
  • 10:: டைமண்ட் லீக் தடகளப் போட்டியில் இந்தியாவின் நீளம் தாண்டுதல் வீரர் முரளி ஸ்ரீசங்கர் வெண்கலப் பதக்கம் வென்றார்.
  • 11: செர்பியாவின் நோவக் ஜோகோவிச் பிரெஞ்சு ஓபன் டென்னிஸில் கோப்பையைக் கைப்பற்றி, ஆடவர் ஒற்றையர் பிரிவில் அதிக கிராண்ட்ஸ்லாம் (23) வென்று வரலாறு படைத்தார்.
  • 11: ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தில் இந்தியாவை வென்று ஆஸ்திரேலியா சாம்பியன் ஆனது.
  • 11: சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் மான்செஸ்டர் சிட்டி முதல் முறையாக வாகை சூடியது.
  • 17:: உலகக் கோப்பை ஸ்குவாஷ் போட்டியில் எகிப்து 2-1 கணக்கில் மலேசியாவை வீழ்த்தி சாம்பியன் ஆனது.
  • 18: இந்தோனேசிய ஓபன் பாட்மின்டன் போட்டியில் சாத்விக்சாய்ராஜ்/சிராக் ஷெட்டி கூட்டணி கோப்பை வென்றது.
  • 18:: இன்டர்கான்டினென்டல் கோப்பை கால்பந்து போட்டியில் இந்தியா வாகை சூடியது.
  • 19:: ஆசிய வாள்வீச்சு சாம்பியன்ஷிப்பில் வெண்கலப் பதக்கம் வென்றார் தமிழகத்தின் பவானி தேவி.
  • 22: சர்வதேச குத்துச்சண்டை சங்கத்தின் (ஐபிஏ) அங்கீகாரத்தை ரத்து செய்து சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி.
  • 30:: ஆசிய கலப்பு அணிகள் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் தீபிகா பல்லிகல்/ஹரிந்தர்பால் சிங் சந்து இணை கோப்பையைக் கைப்பற்றியது.
  • 30:: ஆசிய கபடி சாம்பியன்ஷிப்பில் இந்தியா 42-32 என ஈரானை சாய்த்து, 8-ஆவது முறையாக சாம்பியன் ஆனது.

ஜூலை

  • 4:     தெற்காசிய கால்பந்து சம்மேளன சாம்பியன்ஷிப்பில் இந்தியா  9-ஆவது முறையாக கோப்பையை வென்றது.
  • 10:: கனடா ஓபன் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் லக்ஷயா சென் வாகை சூடினார்.
  • 13:: ஆசிய தடகள சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் ஜோதி யாராஜி மகளிர் 100 மீட்டரில் தங்கம் வென்றார்.
  • 13:: உலக பாரா தடகள சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் சுமித் அன்டில் உலக சாதனையாக 70.83 மீட்டருடன் தங்கம் வென்றார்.
  • 14:: ஆசிய தடகள சாம்பியன்ஷிப்பில் இந்திய குண்டு எறிதல் வீரர் தஜிந்தர்பால் சிங் தூர், ஓட்டப் பந்தய வீராங்கனை பாருல் செளதரி தங்கம் வென்றனர்.
  • 15:: விம்பிள்டன் டென்னிஸில் செக் குடியரசின் மார்கெட்டா வோண்ட்ரோசோவா வாகை சூடினார்.
  • 16: விம்பிள்டன் ஆடவர் ஒற்றையரில் ஸ்பெயினின் கார்லோஸ் அல்கராஸ்  சாம்பியன் ஆனார்.

ஆகஸ்ட்

  • 3: ஃபிடே தரவரிசையில் விஸ்நாதன் ஆனந்தை பின்னுக்குத் தள்ளி, இந்தியர்கள் வரிசையில் முதலிடம் பிடித்தார் இளம் இந்தியரான தமிழகத்தின் டி.குகேஷ் (2,755.9 புள்ளிகள்).
  • 4: : உலக வில்வித்தை சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் ஜோதி சுரேகா, அதிதி சுவாமி, பர்னீத் கெளர் கூட்டணி மகளிர் அணிகள் பிரிவில் தங்கம் வென்றது.
  • 5:: உலக வில்வித்தைப் போட்டியில் ஆடவர் பிரிவில் ஓஜாஸ் தியோடேல், மகளிர் பிரிவில் அதிதி சுவாமி ஆகியோர் இந்தியாவுக்காக தங்கம் வென்றனர்.
  • 5: : மெட்ராஸ் இன்டர்நேஷனல் சர்க்கியூட்டில், மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் நேர்ந்த விபத்தில் பெங்களூரு வீரர் ஷ்ரேயஸ் ஹரீஷ் (13) மரணமடைந்தார்.
  • 20: மகளிர் உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் சாம்பியன் ஆனது ஸ்பெயின்.
  • 24:  உலகக் கோப்பை செஸ் போட்டியில் நார்வேயின் மேக்னஸ் கார்ல்சென் சாம்பியன் ஆனார்.
  • 27: : உலக தடகள சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா ஈட்டி எறிதலில் தங்கம் வென்றார்.
  • 31: ஆசிய விளையாட்டுப் போட்டிகள் டென்னிஸில் இந்தியாவின் ருதுஜா போசலே/ரோஹன் போபண்ணா கூட்டணி தங்கம் வென்றது.

செப்டம்பர்

  • 10:  யுஎஸ் ஓபன் டென்னிஸில் உள்நாட்டு வீராங்கனை கோகோ கெளஃப் பட்டத்தைக் கைப்பற்றினார்.
  • 11:: யுஎஸ் ஓபன் ஆடவர் பிரிவில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச் தனது 24-ஆவது கிராண்ட்ஸ்லாம் வென்றார்.
  • 17: ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் இந்தியா 8-ஆவது முறையாக சாம்பியன் கோப்பையைப் பெற்றது.
  • 25:  ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் மகளிர் கிரிக்கெட்டில் இலங்கையை வீழ்த்தி முதல் முறையாக சாம்பியன் ஆனது இந்தியா.
  • 26:  ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் குதிரையேற்றத்தில் முதல் முறையாக இந்தியா தங்கம் வென்றது.
  • 27:  ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், டி20 கிரிக்கெட் வரலாற்றிலேயே அதிகபட்சமாக, மங்கோலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் நேபாளம் 314 ரன்கள் சேர்த்தது.
  • 27: ஆசிய போட்டிகளில் இந்திய துப்பாக்கி சுடுதல் வீராங்கனை சிஃப்ட் கெளர் சம்ரா தங்கம் வென்று பல சாதனைகள் படைத்தார்.

அக்டோபர்

  • 6:: ஆசிய போட்டிகளில் இந்திய ஆடவர் ஹாக்கி அணி கோப்பை வென்றது.
  • 25:: உலகக் கோப்பை கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய வீரர் கிளென் மேக்ஸ்வெல், 40 பந்துகளில் சதமடித்து புதிய உலக சாதனை படைத்தார்.
  • 28:: ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் முன்னெப்போதும் இல்லாத வகையில் இந்தியா 111 பதக்கங்கள் வென்றது.

நவம்பர்

  • 5: : ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டியில் இந்திய மகளிர் அணி கோப்பை வென்றது.
  • 6:: கிரிக்கெட் வரலாற்றிலேயே "டைம்டு அவுட்' முறையில் ஆட்டமிழந்த முதல் வீரர் ஆனார் இலங்கையின் ஏஞ்ஜெலோ மேத்யூஸ்.
  • 10:: அரசியல் தலையீடு காரணமாக இலங்கை கிரிக்கெட் வாரியத்தை ஐசிசி இடைநீக்கம் செய்தது.
  • 19:: ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியா 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி 6-ஆவது முறையாக சாம்பியன் ஆனது.
  • 21:: பருவத்தை அடைந்த ஆண், பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்டு பெண்ணாக மாறினாலும், மகளிர் கிரிக்கெட்டில் அனுமதிக்கப்பட மாட்டார் என ஐசிசி அறிவித்தது.
  • 23:: தேசிய ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப்பில் தமிழகத்தின் வேலவன் செந்தில்குமார், தில்லியின் அனாஹத் சிங் சாம்பியனாகினர்.

டிசம்பர்

  • 2:: இந்தியாவின் 84-ஆவது கிராண்ட்மாஸ்டராக உருவெடுத்தார் வைஷாலி. ஏற்கெனவே அவரது சகோதரர் பிரக்ஞானந்தா (17) கிராண்டமாஸ்டராக இருப்பதால், உலக அளவில் கிராண்டமாஸ்டர்களாக இருக்கும் முதல் சகோதர-சகோதரி என்ற சாதனையை பிரக்ஞானந்தா, வைஷாலி எட்டினர்.
  • 3:: ஐடிஎஃப் கலபுரகி ஓபன் டென்னிஸில் தமிழகத்தின் ராம்குமார் ராமநாதன் சாம்பியன் ஆனார்.
  • 11:: சிலியில் நடைபெற்ற 13-ஆவது ஜூனியர் மகளிர் உலகக் கோப்பை ஹாக்கியில் நெதர்லாந்து சாம்பியனானது.
  • 16: மகளிர் டெஸ்ட்டில் இங்கிலாந்துக்கு எதிராக 347 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்தியா, சொந்த மண்ணில் முதல் வெற்றியை பதிவு செய்தது.
  • 16:: மலேசியாவில் நடைபெற்ற ஜூனியர் ஆடவர் ஹாக்கி போட்டியில் ஜெர்மனி 7-ஆவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.
  • 19:: ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 17-ஆவது சீசனுக்கான மினி ஏலத்தில் அதிகபட்சமாக, ஆஸ்திரேலிய பெளலர் மிட்செல் ஸ்டார்க் ரூ.24.75 கோடிக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியால் வாங்கப்பட்டு புதிய சாதனை படைத்தார்.

நன்றி: தினமணி (31 – 12 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories