TNPSC Thervupettagam

வெளிச்சம் தந்த அறிஞர்கள்

September 20 , 2024 117 days 171 0

வெளிச்சம் தந்த அறிஞர்கள்

ஜான் மார்ஷல்:

  • 1902 இல் இந்தியத் தொல்லியல் துறையின் இயக்குநராகப் பதவியேற்ற ஜான் மார்ஷல், ஹரப்பாவில் பரந்த அளவில் அகழாய்வு நடத்த உத்தர​விட்​டார். அங்கிருந்து 680 கிமீ தொலைவில் உள்ள மொகஞ்​ச​தா​ரோ​விலும் அகழாய்வு நடந்தது. இரண்டுமே ஒரே நாகரி​கத்​துடன் தொடர்​புடையவை என்பதை ஆய்வுகள் உறுதிப்​படுத்தின.
  • ‘சிந்​துவெளி நாகரி​கமும் வேத கால நாகரி​கமும் இரு வேறு சமூகங்​களுக்கு உரியவை. சிந்துவெளி நாகரிக மக்கள், வேதகாலத்​தவருக்கு முற்பட்​ட​வர்கள். இரண்டு சமூகத்​தினர் பேசிய மொழிகள் தொடர்​பற்றவை’ என ஜான் மார்ஷல் கூறினார். சிந்துவெளி நாகரி​கத்தின் தனித்​தன்​மையைத் தொடக்கக் காலத்​திலேயே அவர் புரிந்​து​கொண்​டதைப் பிற்கால ஆய்வாளர்கள் வியப்​புக்​குரிய​தாகக் கருதுகின்​றனர்.

தயா ராம் சாஹ்னி:

  • இந்தியாவைச் சேர்ந்த வரலாற்று அறிஞர்​களின் பங்களிப்பும் சிந்துவெளி நாகரிகம் குறித்த கண்டறிதலில் பின்னிப்​பிணைந்​துள்ளது. ஜான் மார்ஷலின் ஆய்வுக் குழுவில் தயா ராம் சாஹ்னி பணிபுரிந்​தார். ஹரப்பா அகழாய்​வு​களில் இவரது பங்களிப்பு அதிகம். இந்தியத் தொல்லியல் துறையின் இயக்குநர் ஆன முதல் இந்தியர் என்கிற பெருமையோடு அவர் ஓய்வு​பெற்​றார்.

ஆர்.டி.பானர்ஜி:

  • ஆர்.டி.பானர்ஜி என்று அழைக்​கப்பட்ட ரகல் தாஸ் பானர்​ஜி​யும், ஜான் மார்ஷலின் குழுவில் பணிபுரிந்​தவரே. மொகஞ்​ச​தா​ரோவில் ஸ்தூபம் போன்ற கட்டு​மானம் காணப்​படும் இடுகாடு ஒன்றைக் குறித்து 1920இல் இவர் கேள்விப்​பட்​டார். அங்கு சோதனை நோக்கில் அவர் ஆய்வு நடத்தி​ய​தில், தொன்மையான பொருள்கள் கிடைத்தன. மொகஞ்​ச​தா​ரோவின் முக்கி​யத்து​வத்தை ஜான் மார்ஷல் அறிந்​து​கொள்​வதற்கு ஆர்.டி.பானர்​ஜியின் முதல் கட்ட ஆய்வே வழிவகுத்தது.

அஸ்கோ பர்போலா:

  • ஃபின்​லாந்து நாட்டைச் சேர்ந்த அஸ்கோ பர்போலா, சிந்துவெளி நாகரிக வரிவடிவத்தை ஆய்வு செய்வதில் 40 ஆண்டு​களுக்கும் மேலான அனுபவம் கொண்டவர். சிந்துவெளி வரிவடிவத்தைப் புரிந்​து​கொள்​ளுதல் (Deciphering Indus script) என்கிற நூல், அவருடைய நிபுணத்து​வத்​துக்குச் சான்று. சிந்து​வெளியில் பேசப்பட்ட மொழி, இன்றைய திராவிட மொழிகளுக்கு முன்னோடி​யாகக் கொள்ளத்​தக்கது என்கிற கருத்தை அவர் முன்வைத்​தார். சிந்துவெளி வீழ்ச்​சிக்குப் பின்னர், ஆரியர்​களின் குடியேற்றம் அங்கு நிகழ்ந்தது என்கிற அவரது ஆய்வு முடிவு, பரவலாக ஏற்றுக்​கொள்​ளப்பட்ட ஒன்று.

ஐராவதம் மகாதேவன்:

  • சிந்துவெளி நாகரிகம் பற்றி ஆராய்​வதில் தமிழ் அறிஞர்​களின் பங்களிப்பும் தொடர்ந்து இருந்​து​வந்​துள்ளது. 2018இல் மறைந்த சுயாதீன ஆய்வாளரான ஐராவதம் மகாதேவன், சிந்துவெளி நாகரிக எழுத்து​களின் வரி வடிவம் குறித்து நெடுங்​காலம் ஆய்வுசெய்​தவர்.
  • சிந்துவெளி நாகரிக மக்கள் எழுதிய குறியீட்டு எழுத்துகள் முற்றிலும் புரிந்​து​கொள்​ளப்பட முடியாதவை என்கிற நிலையை இவரது ஆய்வுகள் மாற்றியமைத்தன. அம்மக்கள் பயன்படுத்திய முத்திரைகளில் உள்ள வாசகங்கள் உணர்த்தும் பண்பாடு, சங்கத் தமிழ் இலக்கி​யங்​களில் காணப்​படும் பண்பாட்டுடன் ஒத்திருப்பதை மகாதேவனின் ஆய்வுகள் கூறுகின்றன.

நன்றி: இந்து தமிழ் திசை (20 – 09 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories