TNPSC Thervupettagam

கட்டாயமாகட்டும் சேமிப்பு!

February 25 , 2019 2145 days 1563 0
  • தனிநபர்களின் முறையான சேமிப்பை ஊக்குவிக்க ஆயுள் காப்பீடு, அஞ்சலகத்தில் பி.பி.எஃப்., தனியார் சேம நல நிதிக் கணக்கு, பரஸ்பர நிதித் திட்டங்கள் என்று பல திட்டங்கள் உள்ளன.
  • வருவாயை திட்டமிட்டு செலவு செய்து, நீண்ட கால சேமிப்பை ஊக்குவிக்க இது வழிவகுக்கிறது.
  • சேமிப்பது எதிர்காலத் தேவைக்கு உதவுவதோடு, உடனடிப் பலனாக வருமான வரிச் சலுகை போன்றவற்றையும் அளிக்கிறது. வருமான வரிச் சட்டத்தில் பல்வேறு பிரிவுகளின் கீழ் வெவ்வேறு விகிதத்தில் வருமான வரிச் சலுகை பெறலாம்.
  • இதில் மிகப் பிரபலமான பிரிவு 80-சி. இதன் கீழ் ஆண்டுக்கு அதிகபட்சமாக ரூ. 1.5 லட்சம் வரை சேமித்து,  வருமான வரிச் சலுகை பெறலாம்.
  • உங்களுக்கும் உங்கள் குடும்பத்தில் மனைவி, பிள்ளைகள் ஆகியோருக்கும் ஆயுள் காப்பீடு செய்திருந்தால், அதன் பிரீமியம் தொகையை சேமிப்பாக கருதி வருமான வரி சட்டம் 80-சி பிரிவின் கீழ் சலுகை பெற முடியும்.
  • பிள்ளைகளின் பள்ளி, கல்லூரி கல்விக் கட்டணத் தொகைக்கும் இந்தப் பிரிவின் கீழ் வருமான வரிச் சலுகை உண்டு.
  • பணியிடத்தில் வருங்கால வைப்பு நிதி திட்டத்தின் கீழ் பிடித்தம் இல்லாதவர்கள், தபால் நிலையங்களிலும், பொதுத் துறை வங்கிகள் மூலமாகவும் பொது வருங்கால வைப்பு நிதி (பி.பி.எஃப்.) சேமிப்புத் திட்டத்தில் சேரலாம்.
  • இதுபோன்ற சிறந்த நீண்ட கால சேமிப்புத் திட்டம் வேறு எதுவும் இல்லை எனலாம்.
  • அஞ்சலக பி.பி.எஃப். திட்டத்தில் சேர குறைந்தபட்சம் நூறு ரூபாய்தான்!
  • அதன் பின்னர் ஆண்டுக்கு  ரூ. 500 முதல் அதிகபட்சமாக ரூ. 1.5 லட்சம் வரை உங்கள் வசதிக்கேற்ப சேமிக்கலாம்.
  • நமது வசதிக்கேற்ற மாறுபட்ட வருடாந்திர சேமிப்புத் தவணைத் தொகை என்பதுதான் இதன் மிக சாதகமான அம்சம்.
  • இத்திட்டத்தின் கால அளவு 15 ஆண்டுகள். ஒவ்வொரு ஆண்டின் இறுதியிலும் வட்டியும் முதலும் திரண்டு கூட்டு வட்டி முறையில், சேமிப்புக்கு நல்ல வருவாயை அளிக்கக் கூடியது  பி.பி.எஃப். திட்டம். மூன்றாம் ஆண்டிலிருந்து உங்கள் அவசரத் தேவைக்கு சேமிக்கப்பட்ட தொகையிலிருந்து கடன் பெறலாம்.
  • கணக்கு தொடங்கிய ஏழாம் ஆண்டிலிருந்து குறிப்பிட்ட அளவு தொகையைத் திரும்ப எடுத்துக் கொள்ளலாம்.
  • பதினைந்து ஆண்டுகள் நிறைவடையும்போது, மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு சேமிப்புக்  கணக்கை நீட்டிக்க முடியும்.
  • இப்போது இதற்கு 8 சதவீத வட்டி.
  • தேசிய சேமிப்பு பத்திரங்கள் (நேஷனல் சேவிங்ஸ் சர்டிபிகேட் என்கிற என்.எஸ்.சி.) தபால் நிலையங்கள் வழியாகப் பெறலாம்.
  • இன்றைய அளவில் இதற்கு 8 சதவீத வட்டி.
  • குறைந்தபட்சமாக, 100 ரூபாய்க்கும் கூட தேசிய சேமிப்பு பத்திரம் பெற முடியும்.
  • என்.எஸ்.சி. சேமிப்புக்கு உச்ச வரம்புத் தொகை கிடையாது.
  • இந்தப் பத்திரத்தின் கால அளவு 5 ஆண்டுகள்.
  • பெண் குழந்தைகளின் பெயரில் தொடங்கக் கூடிய மற்றொரு சேமிப்புத் திட்டம் சுகன்யா சம்ருத்தி திட்டம். பெண் குழந்தை பிறந்த தேதி முதல் அந்தக் குழந்தை பத்து வயதை அடையும் வரையில் இத்திட்டத்தில் சேர இயலும்.
  • பெண் 18 வயதை அடையும்போது, சேமித்துள்ள தொகையில் பாதியளவைத் திரும்பப் பெறலாம்.
  • பெண் 21 வயதை அடையும்போது சேமிப்புக் கணக்கு நிறைவடைகிறது. அப்போது சேமித்த தொகையை திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்.
  • தற்போது இந்த திட்டத்திற்கான வட்டித் தொகை 8.5 சதவீதம்.
  • ஆயுள் காப்பீடு நீண்ட கால அளவில் உறுதியான, பாதுகாப்பான ஒரு தொகையை உங்களுக்கு வழங்கக் கூடியது.
  • வணிக வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், தபால் சேமிப்பு வங்கிக் கணக்குகளில் பெறும் வட்டிக்கு 80-டிடிஏ பிரின் கீழ் வருமான வரி சலுகை உண்டு.
  • சேமிப்புத் தொகைகளுக்கு வருமான வரி சலுகை அளிப்பது என்பது நமது சேமிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கவே. வரிச் சலுகையை மட்டும் கருத்தில் கொண்டு சேமிக்காமல், எதிர்காலத் தேவையை நோக்கமாகக் கொண்டு சேமிக்கும் பழக்கத்தை மேற்கொள்ள வேண்டும்.
  • குடும்பத்தின் பல செலவுகளுக்கு இடையில் சேமிப்புக்கும் கட்டாயமாக ஒரு பகுதியை ஒதுக்குங்கள். எதிர்காலத் தேவையைப் பூர்த்தி செய்து கொள்ளுங்கள்.

நன்றி: தினமணி

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories