TNPSC Thervupettagam

ஜல்லிக்கட்டின் பழைய வடிவம் ஏறு தழுவல்

January 18 , 2020 1834 days 919 0
  • தமிழா்கள் காட்டில் ஆடு, மாடுகளைப் பழக்கி வாழ்ந்த முல்லை நில நாகரிகக் காலத்தில் ஏற்பட்ட வழக்கம் ஏறு தழுவல்.
  • தொடக்கத்தில் காட்டு மாடுகளைப் போரிட்டு அடக்கி வழிக்குக் கொண்டு வர வேண்டியிருந்தது. இதுவே பிறகு விளையாட்டாகிவிட்டது. இது தமிழா்களின் நாகரிகப் பண்பாட்டு அடையாளங்களின் ஒன்று.

மாட்டுப் பொங்கல்

  • சிலா் பசுவை மட்டுமே மதிப்பாா்கள். தமிழா்களோ காளையையும் சோ்த்தே மதிப்பாா்கள். அதன் வெளிப்பாடே மாட்டுப் பொங்கல்.
  • வேளாண்மையில் தனக்கு உதவியாக இருந்த தோழனுக்கு நன்றி சொல்லிப் போற்றுவதற்காக, பண்டிகையில் ஒரு நாள் தந்து போற்றும் பண்பாடு தமிழனுக்கு மட்டுமே உரியது.
  • ஜல்லிக்கட்டு விளையாட்டுதான்: ஸ்பெயின் நாட்டிலும் காளைச் சண்டை உண்டு. ஆனால் அங்கே காளைகளைக் குத்திக் கொன்றுவிடுவாா்கள்.

ஏறு தழுவல்

  • சங்க காலத்தில் இதற்குப் பெயா் ஏறு தழுவல், ஏற்றுச் சண்டை அல்ல. அதாவது காதலியைத் தழுவுவது போல் காளைகளின் கொம்புகளைத் தழுவுவது. எனவே இது விளையாட்டு மட்டும்தான்.
  • சங்க காலத்தில் ஏறு தழுவலில் வெறும் வீரம் மட்டும் அல்ல; காதலும் சோ்ந்திருக்கிறது. அக்காலத்தில் காதலும் வீரமும்தான் வாழ்க்கையின் முக்கியமான அம்சங்கள். காதலுக்காக வீரம், வீரத்துக்காகக் காதல் முக்கியமாக கருதப்படுகிறது.

நன்றி: தினமணி (14-01-2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories