TNPSC Thervupettagam

தண்ணீர் தண்ணீர்

June 4 , 2019 2054 days 1159 0
  • தண்ணீர்ப் பஞ்சத்தால் தனியார் டேங்கர் லாரிகளின் வாடகை 40% உயர்ந்திருக்கிறது. 12 ஆயிரம் லிட்டர் லாரி தண்ணீருக்காக ரூ.4 ஆயிரத்திலிருந்து ரூ.5 ஆயிரம் வரை செலவழிக்கிறார்கள். நகரவாசிகளில் 40% பேர் இந்த லாரிகளைத்தான் நம்பியிருக்கிறார்கள்.
  • சென்னை குடிநீர் வாரியம், சிக்கராயபுரத்தில் உள்ள இரண்டு கல்குட்டைகளிலிருந்து தண்ணீர் எடுக்கிறது. இதில் ஒரு குட்டை முற்றிலும் வறண்டுவிட்டது. இன்னொரு குட்டையில் தண்ணீர் எடுக்கும் வேலைகள் தொடங்கிவிட்டன. இந்தக் குட்டை இன்னும் இரண்டு மாதங்களுக்கு மட்டுமே தாக்குப்பிடிக்கும்.
மற்ற நகரங்களில்
  • டெல்லி, பெங்களூரு, சென்னை, ஹைதராபாத் உள்ளிட்ட 21 இந்திய நகரங்களின் நிலத்தடி நீர் 2020-ல் தீர்ந்துபோய்விடும் என்று நிதி ஆயோக் அறிக்கை (2018) தெரிவிக்கிறது. இதனால், 10 கோடி மக்கள் கடுமையான பாதிப்புக்குள்ளாவார்கள். இதே நிலை தொடர்ந்தால் 2030-ல் குடிநீர் கிடைக்காத மக்களின் எண்ணிக்கை ஒட்டுமொத்த மக்கள்தொகையில் 40%-த்தைத் தொடும்.
  • உலகின் ஒட்டுமொத்த நன்னீரில் இந்தியாவின் பங்கு 4%. ஆனால், உலக மக்கள்தொகையில் இந்தியாவின் பங்கு 16%.
  • 2002-2016 காலகட்டத்துக்குள் இந்தியாவின் நிலத்தடி நீர் மட்டம் ஆண்டுக்கு 10-லிருந்து 25 மிமீ வரை குறைந்திருக்கிறது.
சென்னையில்
  • சென்னையின் நீர்த் தேவையைப் பூர்த்திசெய்யும் பூண்டி, சோழவரம், புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளின் மொத்தக் கொள்ளளவு 1,125.7 கோடி கன அடி. கடந்த ஜூன் 2 அன்று இந்த நான்கு ஏரிகளில் இருந்த மொத்த நீரின் அளவு வெறும் 8 கோடி கன அடிதான். அதாவது, மொத்தக் கொள்ளளவில் 0.51%. கடந்த ஆண்டில், இதே சமயத்தில் 200 கோடி கன அடி நீர் இருந்தது.
  • உலக அளவில் பாதுகாப்பான தண்ணீர் போதுமான அளவு கிடைக்காமல் ஒவ்வொரு ஆண்டும் 35 லட்சம் பேர் இறக்கிறார்கள். இந்தியாவில் மட்டும் இந்த எண்ணிக்கை 2 லட்சத்தைத் தாண்டுகிறது.

நன்றி: இந்து தமிழ் திசை  (04-06-2019)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories