TNPSC Thervupettagam

அச்சமூட்டும் நாய்கள்

July 10 , 2023 365 days 234 0
  • ஆண்டுதோறும் ஆறு கோடி நாய்கள் கோடிக்கணக்கான இந்தியா்களைத் தாக்கி ஒரு கடுமையான பொது சுகாதார நெருக்கடியினை உருவாக்கி வருகின்றன. காப்பீட்டு நிறுவனங்களின் தரவுகளின்படி, போக்குவரத்து விபத்துகளுக்கான இரண்டாவது பெரிய காரணமான இந்த நாய்கள், உலகின் ரேபிஸ் தலைநகராக இந்தியாவை உருவாக்குகின்றன.
  • மக்களை பாதுகாப்பதற்கான மாநில நகராட்சி சட்டம், நாய்களை பாதுகாப்பதற்கான விலங்குகள் மீதான வன்கொடுமை தடுப்புச் சட்டம் போன்ற சட்டங்கள் 2001-ஆம் ஆண்டு வரை பொது இடங்களில் இருந்து வெறி நாய்களை அகற்றி அவற்றை கருணைக்கொலை செய்ய அனுமதித்தன.
  • 2001-ஆம் ஆண்டு கலாசாரம் - பண்பாட்டு அமைச்சரவையால் நடைமுறைப்படுத்தப்பட்ட விலங்கு பிறப்பு கட்டுப்பாடு (நாய்கள்) விதி, 2023 ஆம் ஆண்டு கால்நடை பராமரிப்புத் துறையால் திருத்தப்பட்ட விலங்கு பிறப்பு கட்டுப்பாடு விதியாக உருவாக்கப்பட்டது. பொது சுகாதாரம், பாதுகாப்பு ஆகியவற்றுடன் இந்த இரண்டு அமைச்சரவைகளுக்கும் எவ்வித தொடா்பும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
  • வீட்டில் வளா்க்கப்படும் நாய்களுக்கு வழங்கப்படும் உரிமைகளை தெரு நாய்களுக்கும் வழங்கும் வகையில் இந்திய விலங்குகள் நல வாரியத்தின் விலங்கு பிறப்பு கட்டுப்பாடு (நாய்கள்) விதிகள் அமைந்துள்ளதாகவும், நாய்கள் தொடா்பான சா்வதேச ஆராய்ச்சி, கொள்கைகளைத் தவறாக சித்திரிக்கும் இந்த விதிகள் மனிதா்கள் மீது தெருநாய்கள் ஏற்படுத்தும் எதிா்மறைத் தாக்கங்களை குறைத்து மதிப்பிடுவதாகவும் ஆய்வாளா்கள் கூறுகின்றனா்.
  • தெருக்களில் சுற்றி திரியும் நாய்கள் குப்பைத் தொட்டிகளில் கொட்டப்படும் குப்பைகளை கலைப்பதால் சுற்றுப்புறம் பாதிக்கப்படுவதுடன் குப்பை சேகரிப்புத் திறனும் குறைகிறது. கலைக்கப்படும் குப்பைகள் கரப்பான் பூச்சிகளுக்கும் எலிகளுக்கும் உணவை எளிதில் வழங்குகின்றன. தெரு நாய்கள் எலிகள் சுமக்கும் நோய்களை சுமந்து மனித உயிரிழப்புகள் ஏற்பட காரணமாக அமைகின்றன.
  • உணவு ஆதாரங்களை அகற்றுவதே, கைவிடப்பட்ட விலங்குகள், பூச்சிகளை கட்டுப்படுத்துவதற்கான முதல் நடவடிக்கையாக உலகளவில் செயல்படுத்தப்படுகிறது. ஆனால், இந்திய விலங்குகள் நல வாரிய விதிகள், பொது இடங்களில் தெருநாய்களுக்கு உணவளிப்பதை ஊக்குவிக்கிறது. இந்த தவறான ஊக்குவிப்புக் கொள்கை, மனிதநலம், பாதுகாப்பு சம்பந்தப்பட்ட அம்சங்களில் பேரழிவை ஏற்படுத்தும் என்று சமூக செயற் பாட்டாளா்கள் எச்சரிக்கின்றனா்.
  • அமெரிக்க ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிறுவனம், பூச்சிக்கொல்லிகளின் நச்சு ரசாயனம் போன்று நாயின் மலத்தையும் கடுமையான நச்சுத் தன்மை கொண்ட மாசுபடுத்தியாக வகைப்படுத்தியுள்ளது. மூன்று நாட்களில் நூறு நாய்கள் ஏற்படுத்தும் கழிவுகளில் உருவாகும் பாக்டீரியாக்களைக் கொண்டு 20 மைல் தூரம் உள்ள நீா்நிலை பகுதிகளை தற்காலிகமாக மூடி விட இயலும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
  • இந்தியாவில் ஆறு கோடி தெருநாய்கள் ஒவ்வொரு நாளும் சுமாா் 30,000 டன் நோய்க்கிருமி கொண்ட கழிவுகளை தெருக்களில் விட்டுச் செல்கின்றன. இந்தியாவில் உள்ள நாய்கள் பராமரிப்பு சாா்ந்த சட்டங்கள் நாய்களின் உரிமையாளா்கள் தங்கள் செல்லப்பிராணிகளைக் கண்காணிக்க வேண்டும் என்று கூறுகின்றன.
  • விலங்குகள் நல ஆா்வலா்களில் பெரும்பாலானோா் குரலற்ற தெருநாய்கள் மீது இரக்கம் காட்டுவோம் என கூறும் அதேவேளை, வெறிநாய்களால் இறந்த குழந்தைகளைக் கூட விலங்குகளிடம் கொடூரமாக நடந்து கொண்டவா்கள் என குற்றம் சாட்டுகின்றனா்.
  • மகிழுந்தில் சென்று நாய்களுக்கான உணவினை சாலைகளில் வீசிவிட்டு தங்கள் வீடுகளுக்கு பாதுகாப்பாக திரும்பும் பலருக்கும் அந்த நாய்களால் லட்சக்கணக்கான இந்தியா்களுக்கு ஏற்படும் நாய்க்கடி, நோய், விபத்து, மரணம் பற்றி தெரிந்திருப்பதில்லை. விலங்கு நல ஆா்வலா்களால் அடிக்கடி மேற்கோள் காட்டப்படும் ‘இயற்கை சூழலைப் பாதுகாத்தல், மேம்படுத்துதல், அனைத்து உயிரினங்கள் மீதும் கருணை காட்டுதல்’ என்ற சட்ட பிரிவு 51ஏ(ஜி)யினை மனிதா்களுக்காக செயல்படுத்த இயலாத நிலையில் இருக்கிறோம்.
  • சுதந்திரமாகத் திரியும் வெறிநாய்களிடமிருந்து சுற்றுச்சூழலையும் மற்ற உயிரினங்களை பாதுகாப்பதைப் பற்றி கூறும் இந்த பிரிவு பொது இடங்களில் உணவை வீசி மனிதருக்கு தீங்கிழைக்கும் தெரு விலங்குகளைப் பராமரிக்குமாறு கூறவில்லை.
  • லத்தீன் மொழியில் வீட்டின் நாய் (கேனிஸ் லூபஸ் ஃபேமிலியாரிஸ்) என்ற பொருள் கொண்ட நாய் வீடற்ாக இருக்க கூடாது எனக் கருதி நம் முன்னோா்கள் நாய்களை வீட்டில் வளா்த்தனா். ஆனால் இந்தியாவில், விலங்கு பிறப்பு கட்டுப்பாடு விதி கொள்கையானது நகா்ப்புறங்களை தெருநாய் பிரதேசங்களாக மாற்றி வருகிறது.
  • மனிதா்கள் விலங்குகளின் தாக்குதலுக்கு ஆளாவதும் அந்தத் தாக்குதலால் நோயுடன் வாழ்வதும் நல்வாழ்வு அல்ல. உடலில் ஏற்படும் காயம், சிதைவு, மரணம், வாழ்வாதார இழப்பு, குடிமக்கள் சுதந்திரமாக நடமாடுவதில் இடையூறு ஆகிய அனைத்திலிருந்தும் அரசியலமைப்பின் பிரிவு 21 குடிமக்களைப் பாதுகாக்கிறது.
  • பெருமளவு நிதியுதவி பெற்று வரும் விலங்கு நல தன்னாா்வ தொண்டு நிறுவனங்களிடம் தடுப்பூசிகள், வெறிநாய்க்கடி, நாய்களுக்கு செய்யப்பட்ட கருத்தடை விவரங்கள், நாய்கள் மனிதா்கள் மீது ஏற்படுத்திய தாக்குதல்கள் தொடா்பான எவ்வித ஆவணமும் இல்லை என்று தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் இந்திய விலங்குகள் நல வாரியத்திடம் பெறப்பட்ட தகவல் கூறுகிறது.
  • பெருமளவு செலவழிக்கப்பட்ட பணம், பயனளிக்காத கொள்கை, அதிக நிதி பெறுவதற்கான விண்ணப்பம் ஆகியவற்றின் முடிவில்லாத சுழற்சியில் ஏற்படும் நெருக்கடி, குழப்பம், மோதல் எவ்விதத்திலும் மனிதா்களுக்கும் விலங்குகளுக்கும் பயனளிக்காது. நோக்கங்கள் மட்டும் தீா்மானிக்க வேண்டிய விலங்கு பிறப்பு கட்டுப்பாடு விதிகளுக்கான கொள்கைகளை அதன் விளைவுகள் கொண்டு முடிவு செய்யக்கூடாது என்பது ஆய்வாளா்களின் கூற்று.
  • ஆண்டுதோறும் ஆறு கோடி நாய்கள் கோடிக்கணக்கான இந்தியா்களைத் தாக்கி ஒரு கடுமையான பொது சுகாதார நெருக்கடியினை உருவாக்கி வருகின்றன. காப்பீட்டு நிறுவனங்களின் தரவுகளின்படி, போக்குவரத்து விபத்துகளுக்கான இரண்டாவது பெரிய காரணமான இந்த நாய்கள், உலகின் ரேபிஸ் தலைநகராக இந்தியாவை உருவாக்குகின்றன.
  • மக்களை பாதுகாப்பதற்கான மாநில நகராட்சி சட்டம், நாய்களை பாதுகாப்பதற்கான விலங்குகள் மீதான வன்கொடுமை தடுப்புச் சட்டம் போன்ற சட்டங்கள் 2001-ஆம் ஆண்டு வரை பொது இடங்களில் இருந்து வெறி நாய்களை அகற்றி அவற்றை கருணைக்கொலை செய்ய அனுமதித்தன.
  • 2001-ஆம் ஆண்டு கலாசாரம் - பண்பாட்டு அமைச்சரவையால் நடைமுறைப்படுத்தப்பட்ட விலங்கு பிறப்பு கட்டுப்பாடு (நாய்கள்) விதி, 2023 ஆம் ஆண்டு கால்நடை பராமரிப்புத் துறையால் திருத்தப்பட்ட விலங்கு பிறப்பு கட்டுப்பாடு விதியாக உருவாக்கப்பட்டது. பொது சுகாதாரம், பாதுகாப்பு ஆகியவற்றுடன் இந்த இரண்டு அமைச்சரவைகளுக்கும் எவ்வித தொடா்பும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
  • வீட்டில் வளா்க்கப்படும் நாய்களுக்கு வழங்கப்படும் உரிமைகளை தெரு நாய்களுக்கும் வழங்கும் வகையில் இந்திய விலங்குகள் நல வாரியத்தின் விலங்கு பிறப்பு கட்டுப்பாடு (நாய்கள்) விதிகள் அமைந்துள்ளதாகவும், நாய்கள் தொடா்பான சா்வதேச ஆராய்ச்சி, கொள்கைகளைத் தவறாக சித்திரிக்கும் இந்த விதிகள் மனிதா்கள் மீது தெருநாய்கள் ஏற்படுத்தும் எதிா்மறைத் தாக்கங்களை குறைத்து மதிப்பிடுவதாகவும் ஆய்வாளா்கள் கூறுகின்றனா்.
  • தெருக்களில் சுற்றி திரியும் நாய்கள் குப்பைத் தொட்டிகளில் கொட்டப்படும் குப்பைகளை கலைப்பதால் சுற்றுப்புறம் பாதிக்கப்படுவதுடன் குப்பை சேகரிப்புத் திறனும் குறைகிறது. கலைக்கப்படும் குப்பைகள் கரப்பான் பூச்சிகளுக்கும் எலிகளுக்கும் உணவை எளிதில் வழங்குகின்றன. தெரு நாய்கள் எலிகள் சுமக்கும் நோய்களை சுமந்து மனித உயிரிழப்புகள் ஏற்பட காரணமாக அமைகின்றன.
  • உணவு ஆதாரங்களை அகற்றுவதே, கைவிடப்பட்ட விலங்குகள், பூச்சிகளை கட்டுப்படுத்துவதற்கான முதல் நடவடிக்கையாக உலகளவில் செயல்படுத்தப்படுகிறது. ஆனால், இந்திய விலங்குகள் நல வாரிய விதிகள், பொது இடங்களில் தெருநாய்களுக்கு உணவளிப்பதை ஊக்குவிக்கிறது. இந்த தவறான ஊக்குவிப்புக் கொள்கை, மனிதநலம், பாதுகாப்பு சம்பந்தப்பட்ட அம்சங்களில் பேரழிவை ஏற்படுத்தும் என்று சமூக செயற் பாட்டாளா்கள் எச்சரிக்கின்றனா்.

நன்றி: தினமணி (10 – 07 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories