TNPSC Thervupettagam

அதிகரிக்கும் புற்றுநோய்

June 29 , 2024 1 hrs 0 min 13 0
  • மோசமான வாழ்கைமுறை, உணவுப் பழக்கவழக்கங்களால் இந்திய இளைஞர்களிடம் புற்றுநோய் அதிகரித்துவருவதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. இளைஞர்களிடம் அதிகரிக்கும் புற்றுநோய்க்குப் பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும் பதப்படுத்தப்பட்ட உணவு, ஆல்கஹால், உடல் பருமன், புகையிலை, மன அழுத்தம் ஆகியவை முதன்மைக் காரணங்களாகக் கருதப்படுகின்றன.

சுற்றுச்சூழல் மாசு:

  •  இந்திய நகரங்களில் பெரும்பாலானவை தீவிரமான சுற்றுச்சூழல் மாசால் பாதிக்கப்பட்டுள்ளன. சுற்றுச்சூழல் மாசும் புற்றுநோய்ப் பரவலுக்கு மற்றுமொரு முக்கியக் காரணமாக மாறியுள்ளது.
  • காற்று, நீர் மாசுபாட்டால் புற்றுநோய் உண்டாவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகரித்திருப்பதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
  • டெல்லியைத் தலைமையகமாகக் கொண்ட ‘முக்த் பாரத் அறக்கட்டளை’ புற்றுநோய் குறித்து ஆய்வு ஒன்றை அண்மையில் நடத்தியது. அதில் இந்தியாவில் 20% புற்றுநோய்கள் 40 வயதுக்கு உள்பட்டவர்களிடம் அதிகமாகக் கண்டறியப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. புற்றுநோய் கண்டறியப்பட்டவர்களில் 60% ஆண்கள், 40% பெண்கள் எனவும் அந்த ஆய்வு சுட்டிக் காட்டியுள்ளது.

எப்படித் தவிர்ப்பது?

  • ஆரோக்கியமான உணவுப் பழக்கம், எட்டு மணி நேர உறக்கம், தினசரி உடற்பயிற்சி, மூச்சுப் பயிற்சிகள் மூலம் புற்றுநோய் ஏற்படுவதற்கான சுகாதார நெருக்கடியைக் குறைக்க முடியும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.
  • குறிப்பாகத் துரித உணவு, செயற்கை வண்ணங்கள் அதிகமாகச் சேர்க்கப்பட்ட உணவு, பல நாள்கள் பாதுகாத்து வைக்கப்பட்ட உணவு, கொழுப்பு மிகுந்த உணவு, புகையிலை, புகைப்பழக்கம், மது அருந்துதல் ஆகியவற்றை முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும்.

நன்றி: இந்து தமிழ் திசை (29 – 06 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories