TNPSC Thervupettagam

அனைத்​தி​லும் கண்ணன்

January 2 , 2025 7 days 36 0

அனைத்​தி​லும் கண்ணன்

  • சிறுகூடல்​பட்டி முத்​தையா என்ற இயற்​பெயர் கொண்ட கவியரசு கண்ண​தாசன், கண்ணன் மீது அதிக ஈடுபாடு கொண்​ட​வர். கண்ணன் என்னும் மன்னன் பேரைச் சொல்ல சொல்ல, கண்ணன் முகம் கண்ட கண்கள் மன்னர் முகம் காண்​ப​தில்லை, கண்ணனுக்கு தந்த உள்ளம் இன்னொருவர் கொள்​வ​தில்லை, கங்கைக் கரை தோட்​டம், கண்ணன் வந்தான் போன்ற பாடல்​கள், கண்ணன் மீது கண்ண​தாசன் கொண்ட ஈடுபாட்டை பறைசாற்றுகின்றன.
  • காதல், மனைவி, குழந்தை, குடும்​பம், சமுதா​யம், மகிழ்ச்சி, விரக்தி என அனைத்​தி​லும் கண்ணனை வைத்து கண்ண​தாசன் பாடியுள்​ளார் என்பதை ஓர் ஆராய்ச்சி கட்டுரை போல், சுவை குன்​றாமல் ஆசிரியர் தென்​காசி கணேசன் அளித்​துள்ளார். இத்துடன் பகவத் கீதை, மகாகவி பாரதி, வேத கருத்து​கள், ஆதிசங்​கரரின் ஸ்லோகங்​கள், திரு​மூலர், ஜகத்​குருக்கள் ஆகியோரின் உபதேச மொழிகள் ஆகிய​வற்றை கண்ண​தாசன் உள்வாங்கி எழுதிய பாடல்​களை​யும் குறிப்​பிட்​டுள்​ளார்.
  • பகவத் கீதையை எளிமைப்படுத்தி, முன்னைப் பழமைக்​கும் பழமையான கீதையை பின்னைப் புது​மைக்​கும் புது​மையான இலக்​கி​யங்​கள், திரைப்​படப் பாடல்​களுடன் இணைத்​துக் காட்​டி​யுள்​ளார். அபிராமி அந்தா​தியை முற்றும் கற்று உணர்ந்த கண்ண​தாசன் தாமும் அதுபோல் ஓர் அந்தாதி நூல் எழுதவேண்​டும் என்ற எண்ண மேலோட்​டத்​தில் கிராம தேவதையான மலையரசி அம்மனைப் பற்றி எழுத நினைத்​தா​லும், நிறை​வில் கண்ணன் பெயரில் ஸ்ரீ கிருஷ்ண அந்தாதி என்ற நூலை இயற்றினார் என ஆசிரியர் சில அரிய அறியப்​படாத தகவல்​களை​யும் இந்நூலில் குறிப்​பிடு​கிறார்.
  • எளிமை​யில் இலக்​கி​யம், இலக்​கி​யத்​தில் எளிமை. எழுத்து வரிகள் இதயங்​களில் தூவப்​படும்​போது செழித்து வளர்வது ஒரு தனி மனிதன் அல்ல. சமுதாயம் என்பதே உண்மை. எழுதுகோல் தெய்வம் எழுத்​தும் தெய்வம் என்ற மகாக​வி​யின் கூற்றை, கண்ண​தாசனின் ஆன்மிக, தத்துவப் பாடல்களை கேட்​கும்​போது நாம் புரிந்து கொள்​ளலாம். கண்ணன் மீது கண்ண​தாசன் கொண்ட காதலை, ஆத்மார்த்த அனுபவத்தை அனைவரும் ரசித்து படிக்​கும்படி ஆசிரியர் எழுதி​யிருப்பது பாராட்டுக்​குரியது.

நன்றி: இந்து தமிழ் திசை (02 – 01 – 2025)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories