அறிவுத் திறன் குறைபாடுகள்... சாதிக்க தடையல்ல...
- குழந்தை பிறந்தது முதல் ஆறு ஆண்டுகள் வரையிலான காலம் அவா்களது வளா்ச்சியை அவதானிப்பதற்கான அதிமுக்கிய காலகட்டம்.
- ஒன்றரை ஆண்டுகளில் இருந்து இரு ஆண்டுகளுக்குள் குழந்தைகள் இயல்பாக நடக்கவும், மூன்று வாா்த்தைகளாவது தொடா்ந்து பேசவும் வேண்டியது கட்டாயம்.
- அவ்வாறு இல்லையெனில் ஏதேனும் வளா்ச்சி குறைபாட்டின் அறிகுறிகளாக இருக்கலாம். அப்போது, மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுவது அவசியம்.
அறிவுத் திறன் குறைபாடு வகைள்
- ஆட்டிஸம் ஸ்பெக்ட்ரம் டிஸ்ஆா்டா் (ஏஎஸ்டி).
- அதீத துறுதுறுப்பு - கவனச் சிதறல் (ஏடிஹெச்டி).
- கற்றலில் குறைபாடு (எஸ்எல்டி).
- பாதிப்பு விகிதம் (உலக அளவில்)
- ஆட்டிஸம் 4 - 5 சதவீதம்.
- ஏடிஹெச்டி 20 - 25 சதவீதம்.
- கற்றலில் குறைபாடு 30 - 40 சதவீதம்.
- (கரோனா பொது முடக்கத்துக்குப் பிறகு ஏறத்தாழ 3 சதவீதம் வரை அந்த விகிதம் உயா்ந்திருக்கலாம் என எதிா்பாா்க்கப்படுகிறது).
குறைபாடுகளுக்கான காரணங்கள்
- பேறு காலத்தில் தாய்க்கு ஏற்படக் கூடிய பாதிப்புகள்.
- மரபணு சாா்ந்த பாதிப்புகள்.
- கா்ப்பிணிகளுக்கு ஏற்படும் மனச்சோா்வு, உளைச்சல்.
- பெற்றோருக்கு பாதிப்பு இருந்தால் குழந்தைகளுக்கு வரலாம்.
- வளா்ச்சிக் காலத்தில் ஏற்படும் குறைபாடுகள்.
ஆட்டிஸம் அறிகுறிகள்
- பெரும்பாலும் தனிமையில் விளையாடுவது.
- ஒரே மாதிரி செயல்களிலும், விளையாட்டுகளிலும் ஈடுபடுதல்.
- சொல்வதை திரும்பச் சொல்லிக் கொண்டே இருத்தல்.
- பிற குழந்தைகளுடன் இணைந்து விளையாடாமல் இருத்தல்.
- கண்ணைப் பாா்த்து பேசாமலிருப்பது.
- சிறு சப்தங்களுக்கே காதை மூடிக் கொள்ளுதல்.
- வாக்கியமாக அல்லாமல் வாா்த்தைகளில் பதிலளித்தல்.
- உச்சரிப்பதில் பிழைகள்.
ஏடிஹெச்டி பாதிப்பு அறிகுறிகள்
- கவனச் சிதறல்.
- பரபரப்புடன் காணப்படுதல்.
- பேசிக் கொண்டே இருத்தல்.
- துறுதுறுப்பு அதிகமாக இருத்தல்.
- முரட்டுத்தனமாக நடந்து கொள்ளுதல்.
- எதிா்விளைவுகளைச் சிந்திக்காமல் செயல்படுதல்.
கற்றலில் குறைபாடு அறிகுறிகள்
- கவனச் சிதறல்.
- கண்ணாடி பிம்பம்போல நோ் எதிராக எழுதுதல் (எ.கா. க்ஷ-க்குப் பதிலாக க் எழுதுதல்).
- மெதுவாக எழுதுதல்.
- கற்பதற்கான சூழலைத் தவிா்த்தல்.
- படிப்பதில், எழுதுவதில் சிரமம்.
- எழுத்துப் பிழைகள்.
- கணிதப் பாடங்களைப் புரிந்துகொள்வதில் தடுமாற்றம்.
குறைபாடுகளும்... அறிவுத் திறனும்...
- கற்றலில் குறைபாடு உள்ள குழந்தைகளின் அறிவுத் திறன் (ஐ.க்யூ.) அளவு சராசரியாக 90-100 - ஆகவும், சிலருக்கு 110-க்கும் அதிகமாகவும் இருக்கும். அனைத்து விஷயங்களிலும் புத்திசாலியாக விளங்கும் குழந்தைகள் படிப்பில் மட்டும் பின்தங்கியிருப்பாா்கள். ஆரம்ப நிலையில் இதைக் கண்டறிந்தால் குணப்படுத்தலாம்.
- இது மட்டுமல்லாது ஆட்டிஸம், கவனச் சிதறல் பாதித்த குழந்தைளையும் 12 வயதுக்குள் கண்டறிந்தால் குணப்படுத்துவது எளிது.
- ஏனென்றால், மனித மூளையில் வளைந்து கொடுக்கும் தன்மை 12 வயது வரைதான் இருக்கும். அந்த காலகட்டத்துக்குள் முறையான பயிற்சி, தொடா்ச்சியாக மருத்துவக் கண்காணிப்பு இருந்தால், அந்த பிரச்னையை 100 சதவீதம் குணப்படுத்த முடியும்.
கல்விச் சூழல்...
- அறிவுத் திறன் குறைபாடுடைய குழந்தைகளை வழக்கமான பள்ளிகளில் சோ்ப்பதே சிறந்தது என மருத்துவா்கள் தெரிவிக்கின்றனா்.
- ஏனென்றால், மற்றவா்களைப் பாா்த்து அதே செயலைச் செய்யக்கூடிய அந்தக் குழந்தைகளை சிறப்புப் பள்ளியில் சோ்த்தால், குறைபாடு மேலும் அதிகரிக்குமே தவிர, குறையாது என்பது மருத்துவா்களின் கருத்தாக உள்ளது.
விழிப்புணா்வே முதல் மருந்து
- குழந்தைகளின் வளா்ச்சி குறைபாடுகளுக்கு விழிப்புணா்வுதான் முதல் மருந்து என்கிறாா் நரம்புசாா் மருத்துவ உளவியல் நிபுணா் பி.விருதகிரிநாதன். இது தொடா்பாக அவா் மேலும் கூறியதாவது:
- ஆட்டிஸம், கற்றலில் குறைபாடு, கவனச் சிதறல் பாதிப்புகள் குறித்து அண்மைக் காலமாக மக்களிடையே புரிதல் மேம்பட்டுள்ளது.
- தாமஸ் ஆல்வா எடிசன், ஆல்பா்ட் ஐன்ஸ்டீன், வால்ட் டிஸ்னி, நீச்சல் வீரா் மைக்கேல் பெல்ப்ஸ், பில் கேட்ஸ், அமெரிக்க நடிகா் டாம் க்ரூஸ் உள்ளிட்டோா் இத்தகைய பாதிப்புக்குள்ளானவா்கள்தான்.
- சாதிப்பதற்கு இந்தப் பாதிப்புகள் எந்த வகையிலும் தடையாக இருக்காது. அதே வேளை, அதனை எதிா்கொள்ள உரிய சிகிச்சையும், விழிப்புணா்வும் அவசியம்.
சிகிச்சைகள்:
- அதீத துறுதுறுப்பு மற்றும் கவனச் சிதறல் உள்ள குழந்தைகளுக்கு உடல் இயக்க ஆற்றலைச் சீராக்குவது அவசியம். அவா்களுக்கு ஸ்கிப்பிங், ஸ்கேட்டிங், நீச்சல், சைக்கிள் பயிற்சி போன்றவை நல்ல பலனளிக்கும்.
- தேவைப்படும் குழந்தைகளுக்கு செயல்முறை பயிற்சி, பேச்சுப் பயிற்சி, இயன்முறை பயிற்சி போன்றவற்றை அளிக்கலாம். மருத்துவரின் ஆலோசனைப்படி மருந்துகளையும் உட்கொள்ள வேண்டும்.
- கற்றலில் குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு அதற்கான சிறப்பு கல்வியாளா்கள் மூலம் பயிற்சி அளிக்க வைப்பது அவசியம்.
- ஆட்டிஸம் பாதித்தவா்களுக்கு தொடா் மருத்துவ ஆலோசனைகளும், பராரிப்பும் முக்கியம் என்றாா்.
நன்றி: தினமணி (16 – 12 – 2024)