TNPSC Thervupettagam

அல்சைமருக்கு ரத்தப் பரிசோதனை

August 3 , 2024 161 days 182 0
  • அல்சைமர் நோய்க்கான பரிசோதனை களில் ரத்தப் பரிசோதனை விரைவான, துல்லியமான முடிவுகளை வழங்குவதாக சமீபத்திய ஆய்வு தெரிவிக்கிறது.
  • ‘டிமென்ஷியா’ என்றழைக்கப்படும் மறதி நோய் பாதிப்பில் தீவிரமானதாகக் கருதப்படுவது அல்சைமர். மனித மூளையில் லட்சக்கணக்கான நரம்புகள் உண்டு. இவற்றில் சிறு தேய்மானம் ஏற்பட்டால்கூட நம் உடலின் ஒட்டுமொத்தச் செயல்பாடும் பாதிக்கப்படும். மூளை செல்களில் ஏற்படும் சிதைவு அல்சைமரை ஏற்படுத்துகிறது.

என்ன காரணம்?

  • உலகம் முழுவதும் 5.5 கோடி பேர் மறதி நோயால் பாதிக்கப்படுகிறார்கள். இந்தியாவில் மட்டும் வருடத்திற்கு மூன்று லட்சத்துக்கும் அதிகமான முதியவர்களுக்கு அல்சைமர் நோயினால் நினைவாற்றல் இழப்பு ஏற்படுகிறது.
  • முதியவர்களுக்கு அல்சைமர் நோய் வருவ தற்கு நாள்பட்ட நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், விபத்துகளால் ஏற்படும் தலைக்காயம், போதைப் பொருள் பயன்பாடு போன்றவை முக்கியக் காரணங்களாகக் கூறப்படுகின்றன.

செலவு குறைவு:

  • அமெரிக்க மருத்துவச் சங்கம் ஸ்வீடனைச் சேர்ந்த 1,213 பேரிடம் ஆய்வு ஒன்றை நடத்தியது. அதில் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டுப் பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டன.
  • அந்த ஆய்வின் முடிவில் ரத்தப் பரிசோதனைகள் மூலம் அல்சைமர் மறதி நோயைத் துல்லியமாகக் கணிக்க முடிந்தது. மேலும், பிற பரிசோதனைகளுடன் ஒப்பிடுகையில் ரத்தப் பரிசோதனைகள் விரைவான முடிவுகளை அளித்ததாகவும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • மறதி நோய்களுக்கான பரிசோதனைகளுக்குப் பெரும்பாலும் அதிகச் செலவாகும். இந்நிலையில் ரத்தப் பரிசோதனைகள் மூலம் அல்சைமரை உறுதிப்படுத்தலாம் என்பது மருத்துவ உலகில் கவனம்பெற்றுள்ளது.

நன்றி: இந்து தமிழ் திசை (03 – 08 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories