TNPSC Thervupettagam

இணையச் சீண்டலுக்குத் தீர்வு: லெவின்ஸ்கி காட்டும் வழி!

August 19 , 2024 147 days 115 0

இணையச் சீண்டலுக்குத் தீர்வு: லெவின்ஸ்கி காட்டும் வழி!

  • சமூக ஊடக யுகத்தில் நாம் வாழ்கிறோம். அதன் பலன்களை​யும், விளைவு​களையும் அனுபவித்​துக்​கொண்​டிருக்​கிறோம். பதிவுகளும், குறும்ப​திவு​களும், நிலைத்​தகவல்​களும் ஆதிக்கம் செலுத்​திக்​ கொண்​டிருக்கும் நிலையில், ஒரு நீள் கட்டுரை என்னவெல்லாம் செய்யக்​கூடும் என்பதைத் தெரிந்​து​கொள்வது நல்லது.
  • ஒருவரது வாழ்க்கையை மாற்றிய அந்த நீள் கட்டுரை ஓர் ஊடகத்தில் வெளியானது என்பதை இங்கே தனித்துக் குறிப்பிட வேண்டி​யிருக்​கிறது. அந்தக் கட்டுரை வெளியான பத்தாண்​டு​களைக் கொண்டாடும் வகையில், அதை எழுதியவர் நன்றி பொங்க மற்றொரு கட்டுரை எழுதி​யிருக்​கிறார்.
  • ‘ஒருபோதும் நம்பிக்கை இழக்காதீர்கள்’ என நம்பிக்கைச் செய்தி​யையும் சொல்லி​யிருக்​கிறார். அந்தக் கட்டுரையை எழுதியவர் மோனிகா லெவின்ஸ்கி. கட்டுரை வானிடி ஃபேர் (Vanity Fair) இதழில் 2014இல் வெளியானது. கட்டுரையின் தலைப்பு - ‘அவமான​மும், பிழைத்​திருப்​பதும்’ (Shame and Survival). இந்தக் கட்டுரை லெவின்ஸ்கியின் வாழ்க்கையை மாற்றியது மட்டும் அல்ல, அவரைப் போன்ற பலரது வாழ்க்கை மாற்றத்​துக்கான நம்பிக்கைக் கீற்றை அளித்​துள்ளது. இணைய, சமூக ஊடக யுகத்தில் இது மிகவும் இன்றியமை​யாதது.

பின்னணி என்ன?

  • லெவின்ஸ்கியை அறிந்​தவர்கள், அவரது கட்டுரையையும் வாசித்திருக்​கலாம். லெவின்ஸ்கியை அறியாதவர்கள் தயவுசெய்து கூகுளுக்குச் சென்று, மோனிகா லெவின்ஸ்கி யார் எனத் தேட வேண்டாம். சாட் ஜிபிடி​யிடமும் கேட்க வேண்டாம். ஏனெனில், இந்தக் கேள்விக்குப் பதிலாக வரக்கூடிய தகவல்​களும், துணைத் தகவல்​களும் அவரது கடந்த காலத்தை மட்டுமே சித்தரிப்பவை. அவரைப் பற்றிய சரியான தோற்றத்தைத் தரக்கூடியவை அல்ல.
  • அவரது கடந்த காலத்தைத் தவிர்க்க வேண்டும் என்பதல்ல; ஆனால் அது பதிவான விதத்தை நாம் கேள்வி கேட்க வேண்டி​யிருக்​கிறது. அதைவிட லெவின்ஸ்கியின் விக்கிபீடியா பக்கம் அல்லது எக்ஸ் (டிவிட்டர்) பக்க அறிமுகங்​களைப் பார்க்​கலாம். இணையச் சீண்டலுக்கு எதிரான விழிப்பு​ணர்வை ஏற்படுத்தி வரும் செயல்​பாட்​டாளராக அவர் இயங்கிக்​கொண்​டிருக்​கிறார்.
  • இதற்கு அவருக்கு முழுத் தகுதியும் இருக்​கிறது. ஏனெனில், அவர் இணையச் சீண்டலின் முழுப் பாதிப்​பையும் உணர்ந்​தவர். உண்மை​யில், இணையத்தால் முதலில் பாதிக்​கப்​பட்​ட​வர்​களில் அவரும் ஒருவர்.
  • சொல்லடிகள், கேலி, கிண்டல், வசைகளை எதிர்​கொண்டவர் அவர். இணையத்தின் மீது மட்டும் குறை சொல்வதற்கு இல்லை. நிஜ உலகில் நடந்ததன் விளைவு அது. ஆனால், இணையம் அதை மோசமாகப் பிரதிபலித்து, பல மடங்கு பெரிதாக்கி அவமான வெளிச்​சத்தில் அவரை நிற்க​வைத்து​விட்டது.

பாலியல் பார்வை:

  • பழைய வரலாற்றை அறிந்​தவர்​களுக்கு, அப்போதைய அமெரிக்க அதிபர், மோனிகா லெவின்ஸ்கி உறவு தொடர்பான விவகாரத்​தையும் அதன் அதிர்​வு​களையும் இப்படிக் குறிப்​பிடுவது புரிந்​திருக்​கும். இந்த விவகாரத்தை இப்படித் தாமதமாகக் குறிப்​பிடக் காரணம், லெவின்ஸ்கியை அதற்காக மட்டும் முதன்​மையாக நாம் நினைவில் கொள்ளக் கூடாது என்பதற்காகத்​தான்.
  • ஒரு புரிதலுக்காக - நடந்த விவகாரத்தைச் சுருக்​க​மாகப் பார்க்​கலாம். பில் கிளின்டன் அதிபராக இருந்த​போது, அதிபர் மாளிகையில் லெவின்ஸ்கி பயிற்சி ஊழியராக இருந்​தார். அந்தக் காலக்​கட்​டத்​தில், கிளின்​ட​னுக்கும் அவருக்கும் இடையே உறவு ஏற்பட்​ட​தாகத் தகவல் வெளியாகி, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதேவேளை​யில், அந்தத் தகவலை அறிந்​திருந்தும் அதை உறுதிப்​படுத்த முடியாததால் அமெரிக்​காவின் முன்னணி ஊடகங்கள் அதை வெளியிட​வில்லை; இந்தத் தகவல் வெளியாகக் காரணமானவர் ஒரு வலைப்ப​திவர் என்பது கவனிக்க வேண்டிய விஷயம்.
  • லெவின்ஸ்கி தொடர்பான சர்ச்​சையின் விளைவாக, அதிபர் கிளின்​ட​னுக்கு எதிராகக் கண்டனத் தீர்மானம் கொண்டு​வரப்​பட்டது. எனினும், அவர் பதவி தப்பியது. ஆனால், மோனிகா லெவின்ஸ்கி சிக்கிக்​கொண்​டார். கடுமை​யாகக் கேலி செய்யப்​பட்​டார்; பாலியல் நோக்கிலான வசைகளையும் எதிர்​கொண்​டார்.
  • ஏனெனில், இளம்பெண்ணான அவரது அடையாளம், ஆளுமை சார்ந்தோ, திறமை சார்ந்தோ அமையாமல், ஒரு பாலியல் சர்ச்சையை அடிப்​படை​யாகக் கொண்டிருந்தது. கிளின்டன் உள்படப் பல அமெரிக்க அதிபர்கள் பிரச்​சினையில் சிக்கி​யிருக்​கின்​றனர். அவர்கள் அதை எதிர்​கொண்ட விதம் இங்கு முக்கியம் இல்லை. ஆனால், இந்த விவகாரம் பாலியல் சார்ந்தது என்பதால், அதில் தொடர்​புடைய இளம் பெண் பெரும் பாதிப்பை எதிர்​கொள்ள வேண்டி​யிருந்தது.
  • இணையம் என்னும் ஊடகம் பொதுமக்கள் மத்தியில் பிரபல​மாகத் தொடங்கிய காலக்​கட்டம் அது. இணையவெளி ஏற்படுத்திக் கொடுத்த சாத்தி​யத்​தை​யும், சுதந்​திரத்​தையும் கொண்டு, எல்லோரும் லெவின்ஸ்கி விவகாரம் பற்றி எல்லை மீறி விவாதித்​தனர். பலருக்கும் இதில் உள்நோக்கம் இல்லை என்றாலும், ஒட்டுமொத்த நோக்கில் இது லெவின்ஸ்​கியைப் பாதித்தது.
  • அவரால் அந்த அடையாளத்​தை​விட்டு வெளியே வர முடிய​வில்லை. பொது இடத்தில் இகழப்​பட்​டார். வேலை கிடைக்​காமல் புறக்​கணிக்​கப்​பட்​டார். இதிலிருந்து அவர் மீண்டு வர முடியாமலே போயிருக்​கலாம். ஆனால், 2014ஆம் ஆண்டு வானிடி ஃபேர் கட்டுரை மூலம் அவருக்கு அந்த வாய்ப்பு கிடைத்தது.

நம்பிக்கையூட்டும் முன்னு​தாரணம்:

  • இந்த விவகாரத்தில் தனது தரப்பை விளக்கிக் கூறும் வாய்ப்பை முதன்​முதலாகப் பெற்ற லெவின்ஸ்கி, கேலி, கிண்டல், அவமானத்தின் வலியை வெளிப்​படுத்தி, அதுவரை தன்னை வரையறை செய்த அந்தச் சம்பவத்தின் விலங்கை உடைக்கும் வகையில் அந்தக் கட்டுரையை எழுதினார்.
  • இனியும் தன்னைப் பற்றிய தாழ்வு மனப்பான்​மை​யுடனும் இணையம் சுமத்திய அடையாளத்​துடனும் முடங்கி​விடாமல், எல்லா​வற்​றையும் உதறி, கடந்தகாலத் தவறில் இருந்து மீண்டுவந்த ஒரு பெண்ணின் உணர்வுகள் பற்றிப் பேசினார். இந்தக் கட்டுரை அவரை, அவரைப் போன்றவர்களின் வலியைப் புரிய​வைத்தது.
  • அதன் பிறகு கேலிகளைப் புறந்​தள்ளிப் பொதுவெளியில் வரத் தொடங்​கினார். இடைப்பட்ட காலத்தில் இணையக் கேலிகளுக்​கும், சீண்டலுக்கும் பலர் பலிகடா ஆக்கப்​படுவது அதிகரித்த நிலையில், இணையச் சீண்டலுக்கு ஆளானவர்​களுக்​காகக் குரல் கொடுத்து​வரு​கிறார். “இதிலிருந்து மீண்டு வரலாம், நானே முன்னு​தா​ரணம்” என்று சொல்லிவரு​கிறார்.
  • இந்த மாற்றத்தை உண்​டாக்கிய கட்​டுரைக்கு நன்றி தெரி​வித்து, ​மாற்று ​முடிவு​களின் சாத்​தியம்​ பற்றிப் பேசி​யிருக்​கிறார். ஆம், மற்​றவர்​களும், சமூக​மும் ​திணிக்​கும் ​முடிவு​களைப் புறந்​தள்ளி நல்ல ​மாற்று ​முடிவுகளை அமைத்​துக்​கொள்​ளலாம்... நம்​பிக்​கை இழக்​க வேண்​டாம்​ என்​பதே அவரது செய்​தி.

நன்றி: இந்து தமிழ் திசை (19 – 08 – 2024)

  •  

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories