TNPSC Thervupettagam

இதயத்தைப் பேணுங்கள்!

August 24 , 2024 142 days 126 0

இதயத்தைப் பேணுங்கள்!

  • சமீப ஆண்டுகளாக மாரடைப்பினால் ஏற்படும் உயிரிழப்பு இளைஞர்களிடம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக 20 – 35 வயதுக்குட்பட்டவர்கள் மத்தியில் இதய நோய் பாதிப்பு கூடுதலாக இருப்பதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.
  • இதய நோயால் பாதிக்கப்படுபவர்களில் பெரும்பாலானவர்கள் ஒரே மாதிரியான அன்றாடத்தைக் கொண்டிருக்கின்றனர். 12 மணி நேரம் வேலை, இரவுப் பணி, வேலை அழுத்தம், முறையற்ற உறக்கம், உடற்பயிற்சிகள் இல்லாமை போன்றவை இதயம் தொடர்பான நோய்களுக்குக் காரணம் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

காரணம்:

  • மன அழுத்தம், பதற்றத்தின்போது நமது உடலில் அட்ரினலின், கார்டிசோல் போன்ற ஹார்மோன்களின் சுரப்பு அதிகரிக்கும். இதன் காரணமாக இதயத் துடிப்பின் வேகம் இயல்பைவிட அதிகமாகும்; ரத்த அழுத்தமும் அதிகரிக்கும். நாளடைவில் இந்தச் செயல்பாடுகள் இதயத்தைச் சேதப்படுத்தும்.
  • ரத்தத்தில் சர்க்கரை, கொழுப்பு அதிகரித்து இதயத்தின் ரத்த ஓட்டத்தைப் பாதித்து மாரடைப்பை ஏற்படுத்துகிறது. உடற்பயிற்சி இல்லாத நிலையில் உடல் பருமன் அதிகரித்து இதய நோய்கள் ஏற்படுகின்றன.
  • மேலும், நாள்பட்ட மன அழுத்தமானது இதயத் துடிப்பில் பாதிப்பை ஏற்படுத்தி ரத்த உறைவை உண்டாக்குகிறது. இந்த ரத்த உறைவு, மூளைக்குச் செல்லும் ரத்த ஓட்டத்தைப் பாதித்துப் பக்கவாதத்தை ஏற்படுத்துகிறது.

வாழ்க்கை முறையில் மாற்றம்:

  • வாரத்திற்கு 55 மணி நேரத்திற்கும் மேலாக வேலை செய்பவர்களுக்கு இதய நோய் வருவதற்கான ஆபத்து 13% அதிகமாக உள்ளதாக மருத்துவ இதழான ‘லான்செட்’ ஆய்வு சுட்டிக் காட்டுகிறது.
  • இதிலிருந்து விடுபட முறையான உணவு, தூக்கத்தைக் கடைப்பிடித்துத் தினசரி உடற்பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். புகைபிடித்தல், மதுப் பழக்கம் ஆகியவற்றிலிருந்து முற்றிலுமாக விடுபடுவது அவசியம்.

நன்றி: இந்து தமிழ் திசை (24 – 08 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories