TNPSC Thervupettagam

இந்தியாவில் அதிகரிக்கும் பக்கவாதம்

October 5 , 2024 2 hrs 0 min 7 0

இந்தியாவில் அதிகரிக்கும் பக்கவாதம்

இந்தியாவில் அதிகரிக்கும் பக்கவாதம்:

  • இந்தியாவில் கடந்த 30 ஆண்டுகளில் பக்கவாதப் பாதிப்பு எண்ணிக்கை அதிர்ச்சியூட்டும் வகையில் அதிகரித்துள்ள தாக மருத்துவ இதழான லான்செட் வெளியிட்ட புதிய ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
  • அவ்வறிக்கையில், ‘1990இல் 6,50,000 பேர் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டனர். 2021இல் இந்த எண்ணிக்கை 10 லட்சத்தைக் கடந்துள்ளது. உலக அளவில் பக்கவாதத்தால் பாதிக்கப்படுபவர்களில் 10% பேர் இந்தியர்களாக உள்ளனர். இந்தியாவில் ஏற்படும் மரணங்களில், பக்கவாதத்தினால் ஏற்படும் மரணங்கள் நான்காம் இடத்தில் உள்ளன. அந்த அளவு பக்கவாதத்தினால் உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றன’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • பக்கவாதம் ஏற்பட ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறைகளுடன் மாசுபட்ட சுற்றுச்சூழலும் முக்கியப் பங்கு வகிக்கிறது. அந்த வகையில் இந்தியாவில் அதிக அளவு பக்கவாத பாதிப்பு காற்று மாசு காரணமாகவே ஏற்படுவதாகச் சமீபத்திய தரவுகள் சுட்டிக்காட்டுக்கின்றன.

மீண்டும் தொற்றுநோய் ஆபத்து:

  • அடுத்த பத்து வருடங்களில் மீண்டும் ஒரு தொற்றுநோய் உலக நாடுகளைத் தாக்கக்கூடும் எனச் சமீபத்திய தரவுகள் எச்சரிக்கின்றன. வைரஸ் தொற்றுநோய்களைக் கண்டறியும் ‘Abbott Pandemic Defense Coalition’ என்கிற அமைப்பு, தொற்றுநோய் ஏற்படுவதற்கான காலக்கட்டங்களைத் தொடர்ந்து கண்காணித்து வருகிறது. இதற்காகப் பல்வேறு ஆய்வுகளை இவ்வமைப்பில் இடம்பெற்றுள்ள நுண்ணுயிர் ஆராய்ச்சியாளர்கள், விஞ்ஞானிகள், மருத்து வர்கள் மேற்கொண்டுவருகின்றனர்.
  • இந்த நிலையில் இவ்வமைப்பில் உள்ள பெரும்பாலான விஞ்ஞானிகள் அடுத்த பத்து ஆண்டுகளில் மீண்டும் ஒரு தொற்றுநோய் பரவுவதற்கான ஆபத்து இருப்பதாகத் தெரிவித் துள்ளனர். அதன்படி, காலநிலை மாற்றத்தினால் கொசுக்களால் பரவும் நோய்த்தொற்றுகளே மனித இனத்தின் ஆரோக்கியத்துக்குப் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடும் என 61 சதவீத நிபுணர்கள் கருதுகின்றனர்.
  • இதில் காலநிலை மாற்றத்தால் ஏற்படும் மிகப்பெரிய அச்சுறுத்தல் பறவை மூலமாக நிகழும் என 21 சதவீதத்தினர் நம்புகின்றனர். அதைத் தொடர்ந்து விலங்குகள் மூலம் பரவும் தொற்றுநோய்கள் உள்ளன. ஆனால், உலக நாடுகளிடம் தொற்றுநோயை எதிர்கொள்வதற் கான முன் தயாரிப்பிலும் பொதுச் சுகாதாரக் கட்டமைப்பிலும் மிகப்பெரிய இடைவெளி நீடிப்பதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

நன்றி: இந்து தமிழ் திசை (05 – 10 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories