TNPSC Thervupettagam

இந்தியாவும் அதன் மாநிலங்களும்

August 14 , 2023 518 days 413 0

டேட்டா ஸ்டோரி: தகவல் தொழில்நுட்பம்

  • இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியிலும் வேலைவாய்ப்பு உருவாக்கத்திலும் தகவல் தொழில்நுட்பத் துறை (ஐ.டி.) மிக முக்கியப் பங்கு வகிக்கிறது. இந்தியாவின் டிஜிட்டல் பயணம் ஐ.டி. துறை வளர்ச்சியின் வழியாகவே சாத்தியமாகியுள்ளது. தற்போது நாட்டின் மொத்த ஜிடிபியில் ஐ.டி. துறையின் பங்கு 7.5 சதவீதமாக உள்ளது.
  • உலக அளவில் ஐ.டி. துறை ஏற்றுமதியில் இந்தியா முக்கிய இடத்தில் உள்ளது. 2022-23 நிதி ஆண்டில் இந்தியாவில் ஐ.டி. துறை 245 பில்லியன் டாலர் (ரூ.20 லட்சம் கோடி) வருவாய் ஈட்டியுள்ளது. இதில் 194 பில்லியன் டாலர் (ரூ.16 லட்சம் கோடி) ஐ.டி. சேவை ஏற்றுமதி மூலம் கிடைத்துள்ளது.
  • மிகப் பெரிய 5 இந்திய ஐ.டி. நிறுவனங்கள்

  • ஐ.டி. துறையில்... சிறந்து விளங்கும் நகரங்கள்

  • அதிக வருவாய் ஈட்டிய மாநிலங்கள்

டேட்டா ஸ்டோரி : ஸ்டார்ட் அப்

  • இந்தியாவின் முதுகெலும்பு என்று முன்பு வேளாண் துறை கூறப்பட்டது. ஆனால், தற்போது ஸ்டார்ட்-அப் நிறுவனங்களே இந்தியாவின் முதுகெலும்பாக பார்க்கப்படுகின்றன. நாட்டின் பொருளாதார வளர்ச்சியிலும், வேலை உருவாக்கத்திலும் ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன.
  • வர்த்தகம், போக்குவரத்து, கல்வி, அரசு சேவை, நிதிப் பரிவர்த்தனை என பல்வேறு துறைகளில் கடந்த பத்து ஆண்டுகளில் ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் மிகப் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளன. நாட்டின் அடுத்தகட்ட பொருளாதார வளர்ச்சியை தீர்மானிக்கும் சக்தியாக ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் உருவெடுத்துள்ள நிலையில், வலுவான ஸ்டார்ட்-அப் கட்டமைப்பை உருவாக்க மத்திய, மாநில அரசுகள் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.
  • அதிக ஸ்டார்ட் - அப் நிறுவனங்களைக் கொண்ட மாநிலங்கள்

  • வேலைவாய்ப்பு உருவாக்கம்

  • யுனிகார்ன்

டேட்டா ஸ்டோரி: வேலைவாய்ப்பு 

  • இந்திய மக்கள் தொகையில் 48 கோடி பேர் வேலைவாய்ப்பில் உள்ளனர். நாட்டின் வேலைவாய்ப்பு உருவாக்கத்தில் வேளாண் துறை 44%, சேவைத் துறை 31%, தொழில் துறை 25% பங்கு வகிக்கிறது. இந்தியாவில் வேலைவாய்ப்பானது அமைப்புசாரா மற்றும் அமைப்புசார் என இருவகையில் அணுகப்படுகிறது. கட்டுமானத் தொழில், சிறு தொழில், சாலையோர வியாபாரங்கள் உள்ளிட்டவை அமைப்புசாரா தொழில்களின் கீழ் வருபவை. இந்தியாவில் 94% பேர் அமைப்புசாரா துறையிலேயே வேலைவாய்ப்புப் பெற்றுள்ளனர்.
  • அமைப்புசார் துறையில் (அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள்) வேலை செய்யும் மக்களின் எண்ணிக்கை 6 சதவீதமாக உள்ளது. வேலை
  • பாதுகாப்பு, ஊழியர்களுக்கான உரிமைகள் அமைப்புசார் துறையிலேயே உறுதி செய்யப்படுகிறது. எந்தெந்த நிறுவனங்கள் வழியாக அமைப்புசார் வேலைவாய்ப்புகள் அதிகம் உருவாகி வருகின்றன, அமைப்புசார் வேலைவாய்ப்பில் எந்தெந்த மாநிலங்கள் முன்னிலையில் இருக்கின்றன என்பதைப் பார்க்கலாம்.
  • அதிக ஊழியர்களைக் கொண்ட அமைப்புகள்

  • அமைப்புசார் வேலைவாய்ப்பு உருவாக்கத்தில் டாப் 5 மாநிலங்கள்
  • இந்தியாவின் மொத்த அமைப்புசார் வேலை உருவாக்கத்தில் இந்த ஐந்து மாநிலங்களின் பங்களிப்பு 59 சதவீதம் ஆகும்.

டேட்டா ஸ்டோரி : சாலைப் போக்குவரத்து

  • எந்த ஒரு நாட்டுக்கும் அதன் பொருளாதார இயக்கத்துக்கு, மிக அடிப்படையாக இருப்பது போக்குவரத்து கட்டமைப்பு. உலகின் மிகப் பெரிய சாலைக் கட்டமைப்பைக் கொண்டிருக்கும் நாடுகளின் பட்டியலில், அமெரிக்காவுக்கு அடுத்ததாக 2-ம் இடத்தில் இந்தியா உள்ளது.
  • இந்தியாவில் 63.31 லட்சம் கிலோ மீட்டருக்கு சாலை கட்டமைப்பு உருவாக்கப்பட்டிருக்கிறது. இதில், கிராமப்புற சாலைகளே பிரதான பங்கு வகிக்கின்றன. இந்தியாவின் மொத்த சாலைக் கட்டமைப்பில் கிராமச் சாலைகளின் பங்கு 72% உள்ளது. இந்தியாவின் போக்குவரத்து கட்டமைப்பு எப்படி இருக்கிறது, எந்தெந்த மாநிலங்கள் மேம்பட்ட நிலையில் உள்ளன என்பதைப் பார்க்கலாம்.
  • இந்தியாவின் மொத்த சாலைக் கட்டமைப்பில்

  • தேசிய நெடுஞ்சாலை

  • மாநில நெடுஞ்சாலைகள் 1.86 லட்சம் கி.மீ. நீளத்துக்கு மாநில நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன.
  • மாநில நெடுஞ்சாலைக் கட்டமைப்பில் முன்னிலை வகிக்கும் மாநிலங்கள்.

  • கிராமப்புற சாலைகள் 45 லட்சம் கி.மீ. நீளத்துக்கு கிராமப்புறச் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன.
  • முன்னணி மாநிலங்கள்.

நன்றி: தி இந்து (14 – 08 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories