TNPSC Thervupettagam

உண்ணா நிலை நல்லதா?

May 25 , 2024 37 days 84 0
  • ‘இன்டர்மிட்டன்ட் ஃபாஸ்டிங்’ என்கிற நோன்பு/விரதம் முறை குறித்துச் சமீபத்தில் வெளியான ஆய்வு பேசுபொருளாக மாறியுள்ளது. இன்டர்மிட்டன்ட் என்கிற இடைக்கால உண்ணா நிலையில் எட்டு மணிநேரம் உணவு உண்ணும் நேரம், பதினாறு மணி நேரம் உண்ணா நிலை நேரம் என்று இரண்டு வகையைக் குறிப்பிடுகிறார்கள். இவற்றில் முதன்மையானது காலை உணவைத் தவிர்ப்பது.

ஆய்வுகள் என்ன சொல்கின்றன

  • Skipping breakfast associated with higher risk of cardiovascular death (2019)’ என்கிற ஆய்வில் காலை உணவைத் தவிர்ப்பது இதய நோய்களை அதிகரிக்கச் செய்வதோடு இதய நோய்களால் ஏற்படக்கூடிய மரணத்தை அதிகரிக்கிறது என்றும் காலை உணவைத் தவறாமல் உண்பது இதய நோய்களில் இருந்து பாதுகாப்பளிக்கிறது என்றும் கண்டறியப்பட்டுள்ளது.
  • Skipping Breakfast and the Risk of Cardiovascular Disease and Death: A Systematic Review of Prospective Cohort Studies in Primary Prevention Settings’ என்கிற ஆய்வில், காலை உணவைத் தவிர்ப்பது இதய நோய்க்கும் மரணத்துக்கும் காரணமாக இருக்கிறது என்பது உறுதிப்படுத்தப்பட்டது. மேலும், இந்த ஆய்வு தொடர்பான விவரங்கள் 2019இல் Journal of Cardiovascular Development and Disease ஆய்விதழில் வெளியானது.
  • Meal Skipping and Shorter Meal Intervals Are Associated with Increased Risk of All-Cause and Cardiovascular Disease Mortality among US Adults என்கிற ஆய்வு 2023இல் வெளியானது. இந்த ஆய்வில் ஒரு நாளைக்கு ஒரு வேளை மட்டும் சாப்பிடுபவர்கள் அதிக அளவு இதய நோய்களால் பாதிக்கப்படுகிறார்கள், இதய நோயால் ஏற்படும் மரணங்களும் அதிகரிக்கின்றன என்பதை உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். நாள் ஒன்றுக்கு மூன்று வேளை உண்பது இதய நோய்களில் இருந்து காக்கிறது என்று பரிந்துரைக்கிறது இந்த ஆய்வு.

சர்க்கரை நோய் பாதிப்பு:

  • Breakfast skipping and the risk of type 2 diabetes: a meta-analysis of observational studies’ என்கிற ஆய்வு ‘Public Health Nutrition’ ஆய்விதழில் 2015இல் வெளியானது. இதில் காலை உணவைத் தவிர்ப்பவர்களுக்குச் சர்க்கரை நோய் ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது என்று கண்டறியப் பட்டது. மேலும், சர்க்கரை நோயாளிகள் காலை உணவைத் தவிர்க்கக் கூடாது என்பதையும் சுட்டிக்காட்டுகிறது இந்த ஆய்வு.
  • Breakfast skipping is Positively Associated With Incidence of Type 2 Diabetes Mellitus: Evidence from the Aichi Worker's Cohort Study’ என்கிற ஜப்பான் நாட்டு ஆய்வும் காலை உணவைத் தவிர்ப்பது சர்க்கரை நோய் அபாயம் அதிகரிப்பதை உறுதிப்படுத்துகிறது. இந்த ஆய்வும் 2015இல் வெளியானது.

எடை குறைகிறதா?

  • உடல் எடையைக் குறைக்கவே இன்டர்மிட்டன்ட் ஃபாஸ்டிங்கில் பட்டினியாக இருக்கிறோம் என்கிறார்கள். ஆனால், ‘Skipping breakfast is associated with overweight and obesity: A systematic review and meta-analysis’ ஆய்வு 2020ஆம் ஆண்டு ‘Obesity Research & Clinical practice’ என்கிற ஆய்விதழில் வெளியானது.
  • இந்த ஆய்வில் காலை உணவைத் தவிர்ப்பது உடல் எடை அதிகரிப்பு, உடல் பருமன் ஆகியவற்றின் அபாயத்தை அதிகரிக்கிறது என்பதைத் தெளிவுபடுத்துகிறது. வயது, பாலினம், பொருளாதார நிலை, நாடுகள் என எந்த வேறுபாடும் இன்றி காலை உணவைத் தவிர்ப்பது உடல் எடையை அதிகரிக்கச் செய்யும் என்பதை ஆணித்தரமாக இந்த ஆய்வு எடுத்துரைக்கிறது.
  • Skipping breakfast and prevalence of overweight and obesity in Asian and Pacific regions: A meta-analysis’ என்கிற ஆய்வு ‘Preventive Medicine’ ஆய்விதழில் 2011இல் வெளியானது. காலை உணவைத் தவிர்ப்பது உடல் எடை அதிகரிப்பதற்கும் உடல் பருமன் ஏற்படவும் காரணமாக இருக்கிறது என்பதை இது உறுதிபடத் தெரிவிக்கிறது.

காலை உணவு அவசியம்:

  • Long-term weight loss Maintenance என்கிற 2005ஆம் ஆண்டு ஆய்வில் உடல் எடையைச் சீராக வைத்திருப்பதற்குக் காலை உணவு உண்பது ஒரு வலுவான காரணி என்பது கண்டறியப்பட்டது. ‘American Journal of Clinical Nutrition’ இதழில் இ்ந்த ஆய்வு வெளியானது.
  • High Caloric Intake at Breakfast Vs Dinner Differently Influences Weight Loss of Overweight and Obese Women’ என்கிற ஆய்வு, எடையைக் குறைக்க விரும்பிய பெண்களை வைத்து நடத்தப்பட்டது. நாள் ஒன்றுக்கு 1,400 கலோரிகள் கொண்ட உணவை ஒரு குழுவுக்குக் காலையில் 700, மதியம் 500, இரவு 200 கலோரிகள் என்றும் மற்றொரு குழுவுக்குக் காலை 200, மதியம் 500, இரவு 700 கலோரிகள் என்றும் 12 வாரங்களுக்கு வழங்கிப் பரிசோதித்தது.
  • காலையில் அதிக கலோரிகளை உண்ணும் குழுவினர் பன்னிரண்டு வார முடிவில் 5 கிலோ எடையை, அதாவது காலையில் குறைந்த கலோரிகளை உண்ணும் குழுவைவிட இரண்டு மடங்கு எடையைக் குறைத்திருந்தார்கள். இடுப்புச் சுற்றளவும் இந்தக் குழுவுக்கே குறைந்திருந்தது. எனவே, காலை உணவைச் சிறப்பாகவும், மதிய உணவை மிதமாகவும், இரவு உணவைக் குறைவாகவும் எடுத்துக்கொள்வதுதான் உடல் எடையைக் குறைக்க உதவும். இந்த ஆய்வு ‘Obesity’ இதழில் 2013இல் வெளியானது.
  • ஆறு இத்தாலிய மருத்துவர்கள் தலைமையில் ‘Journal of the American college of Nutrition’ இதழில் 2014, மே மாதம் வெளியான ‘Morning Meal More Efficient for Fat Loss in a 3 Month Lifestyle Intervention’ என்கிற ஆய்வில் காலை உணவை அதிகமாகவும், இரவு உணவைக் குறைவாகவும் எடுத்துக்கொள்வதுதான் உடல் எடையைக் குறைப்பதற்கும், உடல் நலத்திற்கும் ஏற்றது என்பதை அறிவித்தார்கள்.
  • இவ்வாறு பல ஆய்வுகளில் காலை உணவைத் தவிர்ப்பது உடல்நலத்திற்குக் கேடானது என்பதே முடிவுரையாக இருக்கிறது. லட்சக்கணக்கான ஆண்டுகள் காடுகளிலும் குகைளிலும் பரிணமித்த மனித இனம் ஆதவனின் உதயத்திலிருந்து மறைவு வரைதானே உணவைத் தேடி உண்டிருக்க முடியும்.
  • இரவாடிகளைத் தவிர மற்ற உயிரினங்கள் இப்படித்தானே இப்போதும் உண்கின்றன. இயற்கையில் இருந்து பாடங்களைக் கற்போம். அறிவியல் ஆய்வுகள் அதற்குத் துணை நிற்கும். இயற்கையின் விதிகள்தானே அறிவியல்.

நன்றி: இந்து தமிழ் திசை (25 – 05 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories