TNPSC Thervupettagam

எளிமையின் சிகரம்! | இரா.நல்லகண்ணு நூற்றாண்டு

December 26 , 2024 29 days 69 0

எளிமையின் சிகரம்! | இரா.நல்லகண்ணு நூற்றாண்டு

  • இந்திய கம்யூனிஸ்ட் கட்சி​யின் மூத்த தலைவர், விடு​தலைப் போராட்ட வீரர் தோழர் இரா.நல்​ல​கண்​ணு​வின் நூற்​றாண்டு இன்று தொடங்​கு​கிறது. எவருக்​கும் கிட்டாத அரிய வாய்ப்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி​யின் தொடக்க நாளான 1925 டிசம்பர் 26​தான் தோழர் இரா.நல்​ல​கண்​ணு​வின் பிறந்​த​நாளாகும். கட்சி தோன்றிய நாளில் தோன்றிய ஒரே மனிதர் தோழர் இரா.நல்​ல​கண்​ணு​தான்.

காந்​தி​யத்​திலிருந்து கம்யூனிஸத்​துக்​கு...

  • தூத்​துக்​குடி மாவட்டம் திரு​வை​குண்​டத்​தில் இராம​சாமி - கருப்​பாயி தம்ப​திக்கு மூன்​றாவது மகனாகப் பிறந்​தார் நல்ல​கண்ணு. பள்ளி​யில் படிக்​கின்​ற​போதே, ‘என்று தணியுமிந்த சுதந்திர தாகம்? என்று மடியுமெங்கள் அடிமை​யின் மோகம்?’ என்ற மகாகவி பாரதி​யின் பாடல் வரிகளுக்​கேற்ப தேச விடு​தலையே தனது மூச்​சென்​றிருந்​தார். தேசப்​பிதா காந்​தி​யின் எளிமை, நேர்மை ஆகியவை இவரை ஆட்கொண்டன.
  • பொது வாழ்க்கைக்கு வந்த நாள் முதல் இன்றுவரை எளிமை​யின் சிகர​மாய் - நேர்​மை​யின் அடையாள​மாய் தொடரும் இவரது வாழ்க்கை, ஆரம்பத்​தில் காந்​தியப் பாதை​யில் பயணித்​தது. அதன்​பின் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நடத்​திவந்த இயக்​கங்​களாலும், தோழர் ஜீவா பொதுக் கூட்​டங்​களில் ஆற்றிய உரைகளைக் கேட்டும் நல்ல​கண்​ணு​வின் கவனம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி​யின்​பால் திரும்​பியது. அதனால் கல்லூரிப் படிப்​பைக் கைவிட்​டார். சின்னஞ்​சிறு வயதில் செங்​கொடியைக் கரங்​களில் ஏந்தி​ய​வர், கடந்த எண்பது ஆண்டு காலமாகத் தனது லட்சியப் பயணத்​தைத் தொய்​வின்​றித் தொடர்​கிறார்.

கொள்கை உறுதி:

  • கட்சி தடை செய்​யப்​பட்​ட​போது தலைமறைவு வாழ்க்கை​யில், காடுமேடு​களில் அலைந்து திரிந்த நிலை​யில் காவல் துறை இவரின் ரகசிய இடமறிந்து கைதுசெய்​தது. காவல் அதிகாரி மற்ற தலைவர்​களைப் பற்றி விசா​ரித்த​போது அதற்கு நல்ல​கண்ணு பதில் சொல்ல மறுத்​தார். அதனால் அடித்து, உதைத்து, நையப்பு​டைத்து, தலைகீழாகத் தொங்​க​விட்டு அடித்​தும் வாய் திறக்கவே இல்லை. இனி என்ன செய்​ய​லாம் என ஆழ்ந்து யோசித்த காவல் அதிகாரி, இவருடைய மீசை ரோமத்தை ஒவ்வொன்​றாகப் பிடுங்கி மகிழ்ந்​தார். இருப்​பினும் நல்ல​கண்​ணு​விட​மிருந்து பதில் எதுவும் கிடைக்க​வில்லை.
  • காவல் துறை​யினர் ஜோடித்த பொய்யான நெல்லை சதி வழக்​கில் ப.மாணிக்​கம், கே.பாலதண்​டா​யுதம், வாத்​தி​யார் ஜேக்கப் உள்ளிட்ட தலைவர்​களோடு தோழர் நல்ல​கண்​ணுவுக்​கும் ஆயுள் தண்டனை வழங்​கப்​பட்​டது. சிறை​யில் நடந்த அனைத்​துக் கொடுமை​களை​யும் நெஞ்​சுரத்​தோடு அவர் எதிர்​கொண்​டார்.

அனைவருக்​கு​மானவர்...

  • கட்சி​யில் உறுப்​பின​ராகத் தொடங்கி, விவசாயத் தொழிலாளர் சங்கத்​தின் மாநிலப் பொதுச் செயலா​ளராக நீண்ட காலமும்; கட்சி​யின் மாநிலச் செயலா​ளராக நான்கு முறை தேர்வு செய்​யப்​பட்டு 12 ஆண்டு​களும்; கட்சி​யின் தேசிய நிர்​வாகக் குழு உறுப்​பின​ராக​வும், தேசிய கட்டுப்பாட்டுக் குழுத் (ஒழுங்கு நடவடிக்கைக் குழு) தலைவ​ராக​வும் பணியாற்றிய அனுபவம் மிக்​கவர்.
  • தொடக்கக் காலம் முதல் கற்றறிதல் என்பது நல்ல​கண்​ணுவுக்​குக் கைவந்த கலை. படிப்பது மட்டுமின்றி தான் படித்து ருசித்ததை மற்றவர்​களுடன் பகிர்ந்​து​ கொள்வது அவரது பழக்​க​மாகும். நூலாசிரியர்​களை, கட்டுரை​யாளர்களை ஊக்கு​விக்​கும் விதமாக அவர்​களுக்​குக் கடிதம் எழுது​வது, தொலைபேசி வாயி​லாகத் தொடர்​பு​கொண்டு பாராட்டுவது அவருடைய சிறந்த பண்பு​களில் ஒன்று.
  • எளிமை​யாகத் தன் வாழ்க்கையை அமைத்​துக்​கொண்டது மட்டுமல்ல, எம்மக்​களும் அவருடன் நெருக்​க​மாகப் பேசவும், பழகவும் தடையில்லா வாய்ப்பு​களை​யும் வழங்​கக்​கூடிய​வர். கட்சி​யின் கொள்​கை​யில் உறுதி​கொண்​டவர் என்றாலும், அனைத்​துக் கட்சித் தலைவர்​களோடும் நன்கு பழகும் நற்பண்பு அவரிடத்​தில் உண்டு. கட்சி​யில் உள்ள இளைஞர்களை ஊக்கப்​படுத்தி உற்சாகப்​படுத்துவது மட்டுமின்றி, அவரவர் திறமைக்​குத் தக்கபடி பொறுப்​பளித்துப் பணியாற்ற வைப்​பார்.
  • தன்னை நாடி வந்த நிதிகள் எதையும் இவர் தனதாக்​கிக் கொண்​ட​தில்லை. சான்​றாக, தமிழ்​நாடு அரசின் சார்​பில் அம்பேத்கர் விருது வழங்​கப்​பட்​ட​போது கொடுக்​கப்​பட்ட நிதி​யைக் கட்சி​யின் வளர்ச்​சிக்​கும், சங்க வளர்ச்​சிக்​கும் வழங்​கி​னார். 2022இல் தமிழ்​நாடு அரசு ‘தகை​சால் தமிழர் விருது’ வழங்​கிய​போது, தனக்கு அளிக்​கப்​பட்ட 10 லட்சம் ரூபா​யுடன் மேலும் ரூ.5,000சேர்த்து, ரூ.10,05,000ஐ முதல்வர் மு.க.ஸ்​டா​லினிடம் கரோனா நிதி​யாகத் திரும்ப அளித்தார்.
  • இவரது எண்ப​தாம் ஆண்டில் விழா எடுத்த​போது கட்சி இவருக்கு ஒரு கோடி ரூபாய் நிதி அளித்​தது. அதனை அதே மேடை​யில் கட்சிக்கு நிதியாக வழங்​கி​னார். இவருக்​கெனச் சொந்​தமாக வாகன வசதி கிடை​யாது என்ப​தறிந்து, அடையாறு மாணவர் நகலக உரிமை​யாளர் ஆனாரூனா கார் ஒன்றைப் பரிசளித்​தார். அதன் சாவியைக் கலைஞர் மு.கருணாநிதி வழங்​கி​னார். நல்ல​கண்ணு அந்த ஊர்தி​யை​யும் கட்சிக்கே அளித்​தார்.

நல்லதையே செய்​தவர்:

  • இவரது தியாகத்​தைப் பலரும் பல கோணங்​களில் பாராட்டி மகிழ்ந்தது உண்டு. திமுக தலைவர் கருணாநிதி தோழர் நல்ல​கண்​ணு​வின் எண்ப​தாம் ஆண்டு விழா​வில் பேசி​ய​போது, “இன்​றைக்கு நான் ஒரு உண்மை​யைச் சொல்​கிறேன், எனது இரண்டு கண்களில் ஒன்று பழுதாகி​விட்​டது, ஒரு கண் பார்​வை​தான் உண்டு, மற்றொரு கண் நல்ல​கண்ணு” என்றும்; “என்னைவிட இரண்டு வயது இளையவர் என்றாலும், தியாகத்​தால் என்னைவிட மூத்​தவர்” என்றும் பெரு​மிதம் பொங்கக் கூறி​னார்.
  • பாஜக அணியில் திமுக இருந்த​போது திருச்​சி​யில் பத்திரி​கை​யாளர்கள் சந்திப்​பில் நிருபர்கள் கருணாநி​தி​யிடம், “நீங்கள் பாஜக அணியில் இருந்து விலகி வர வேண்டு​மெனத் தொடர்ந்து நல்ல​கண்ணு பேசிவரு​கிறார், அது குறித்து உங்கள் பதில் என்ன?” என்று வினவிய​போது, கருணாநிதி சற்றும் தயக்கமின்றி, “நல்​ல​கண்ணு எப்போதும் நல்லதைத்​தான் சொல்​வார்” என்றார்.
  • தன் வாழ்​நாள் முழு​வதும் ஏழை, எளிய மக்களுக்​காக, உழைக்​கும் மக்களுக்​காகத் தன் வாழ்வை அர்ப்​பணித்​துக்​கொண்​ட​வர். தியாகத்​தால் புடம்​போட்ட தங்கமென ஜொலித்​துக்​கொண்​டுள்​ளார். கட்சித் தலைவராக மட்டுமின்றி, நல்ல வாசிப்​பாளராக மட்டுமின்றி, சட்டமேதை டாக்டர் அம்பேத்கர் குறித்​தும், விவசா​யிகளின் விடி​வெள்​ளி​யாகத் திகழ்ந்த விடு​தலைப் போராட்ட வீரர் தோழர் பி.சீனிவாச ராவ் வாழ்க்கை வரலாறு, கவிஞர் தமிழ்ஒளி குறித்த வரலாறு, விவசா​யிகள் சங்க வரலாறு, விவசாயத் தொழிலாளர் சங்க வரலாறு எனப் பல்வேறு நூல்களை எழுதி​யுள்​ளார். அநீதிகள் எங்கே நடைபெற்​றாலும், அதனைக் கண்டு பொங்கி எழும் தோழராகத் திகழ்​கிறார்.
  • மணல் கொள்​ளையை எதிர்த்து உயர் நீதி​மன்ற மதுரைக் கிளை​யில் வழக்​குத் தொடுத்து, தானே நீதி​மன்றம் சென்று வாதாடி வெற்றி​யும் கண்ட​வர். பொது​வாழ்வு என்பது பொழுது​போக்​கல்ல, எளிமை​யும், நேர்​மை​யும், அர்ப்​பணிப்பும், ​தி​யாக​மும் நிறைந்​த​தாகும் என்​பதை ​வாழ்ந்து ​காட்​டி வரு​கிறார். சொல்​லுக்​கும் செயலுக்​கும் வேறு​பாடு இன்​றித் தன் ​வாழ்வை அர்ப்​பணித்​துக்​கொண்ட எளிமை​யின் சிகர​மாக, தொடர்ந்து வழி​காட்​ட வேண்​டும்.

நன்றி: இந்து தமிழ் திசை (26 – 12 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories