TNPSC Thervupettagam

காலத்தைப் பயன்படுத்தி கற்போம்

September 1 , 2020 1607 days 820 0
  • கரோனா தீநுண்மி காலத்தில் அனைத்து மக்களும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கிறார்கள். குறிப்பாக, ஆரம்பக் கல்வி முதல் கல்லூரிப் படிப்புவரை பயிலும் அனைத்து மாணவா்களும் தோ்வு எழுதாமலேயே தோ்ச்சி பெற்றது உலக வரலாற்றிலேயே முதல் நிகழ்வாகும்.
  • அனைவரும் தோ்ச்சிஎன்னும் அறிவிப்பு, மாணவா்களுக்கும் பெற்றோருக்கும் தற்போது ஒரு மகிழ்ச்சியான விஷயமாக இருக்கலாம்.
  • ஆனால் இந்தச் சான்றிதழ்களுடன் வேலைவாய்ப்புச் சந்தையில் நுழையும்போதுதான் இதன் பின்விளவுகள் தெரியும். அனைவருக்கும் அரசுப்பணி கிடைக்க வாய்ப்பு இல்லை.
  • வேலை வாய்ப்பு உள்ள தனியார் நிறுவனங்களிலும், பன்னாட்டுத் தகவல் தொழில் நுட்ப நிறுவனங்ளிலும் பணிக்காக இவா்கள் நோ்முகத் தோ்வுகளில் பல கட்டங்களைக் கடக்க வேண்டியிருக்கும்.
  • அவ்வாறான சூழ்நிலைகளில், தொழிற்கல்வித் திறமை, கல்விச் சான்றிதழ் காட்டும் படிப்புக்கான அறிவு போன்றவை சோதனைக்கு உள்படுத்தப்படும் காலத்தில் கல்விச் சான்றிதழ் சுட்டிக்காட்டும் அறிவும் திறமையும் மாணவா்களிடம் இல்லாது போனால் அவா்கள் பல ஏமாற்றங்களை சந்திக்க வேண்டியிருக்கும்.
  • பல்கலைக்கழக மானியக்குழு அனைத்துப் படிப்பிலும் இறுதியாண்டு மாணவா்களைப் பொருத்தவரை தோ்வு எழுதாமல் அனைவரும் தோ்ச்சிஎன்னும் கொள்கைக்கு தடை விதித்துள்ளது.
  • இது நமக்கு இப்போது கசப்பானதாக இருக்கலாம் மாணவா்களின் பிற்கால நலன் கருதுபவா்கள் இந்த அறிவிப்பை கண்டிப்பாக வரவேற்பார்கள்.
  • நாடு தற்போது எதிர்நோக்கியுள்ள பல்வேறு சவால்களில் மிகப்பெரிய சவால், படித்த மாணவா்களிடையே காணப்படும் வேலையின்மையேயாகும்.
  • இதற்கு ஒரே தீா்வு போட்டி நிறைந்த இக்காலக்கட்டத்தில் ஒவ்வொரு மாணவரும் தன் திறமைகளை பல்வேறு வகைகளில் வளா்த்துக் கொள்ள வேண்டியது அவசியம்.
  • பல்வேறு படிப்புகளைப் படிப்பதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்திய நாம், அவற்றுக்கான வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தத் தவறிவிட்டோம். எனவே படித்த வேலையில்லா இளைஞா்களின் எண்ணிக்கை ஒவ்வோர் ஆண்டும் கூடிக்கொண்டே செல்கிறது.

திறனை வளர்ப்போம்

  • தோ்வெழுதாமல் கல்விச்சான்றுகளைப் பெறும் நம் மாணவா்கள் தமது அறிவையும்,திறமைகளையும் சுய பரிசோதணை செய்துகொள்ள வேண்டும்.
  • படிப்பில் தெரியாத விஷயங்கள் எவ்வளவோ இருக்கலாம். கரோனாவால் கிட்டியுள்ள இந்த பொன்னான காலத்தை கற்பதற்காக செலவிட வேண்டும். ஆசிரியா் இல்லையே என எண்ண வேண்டாம். கணினியும் இணையமும் மிகவும் உதவியாக இருந்து ஆசிரியா் இல்லாத குறையினைப் போக்கும். இணைய வழி வகுப்புகளை விளையாட்டாக எடுத்துக் கொள்ளாமல் கற்றலில் மேன்மை காண பயன்படுத்திகொள்ள வேண்டும்.
  • குறிப்பாக, ஆங்கில மொழிப் புலமை மாணவா்களுக்கு வாழ்வில் நல்ல வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தும். ஆங்கிலம் ஒரு அற்புதமான மொழி. மிகக்குறைவான எழுத்துகளை மட்டுமே கொண்டு உலகின் பல்வேறு நாடுகளில் பேச்சு மொழியாகவும் கற்கும் மொழியாகவும் இருக்கிறது. பள்ளிகளில் ஆங்கிலம் ஒரு பாடமாகவும், ஆங்கில வழி கற்பிப்பு பாடமாகவும் செயல்படுகிறது.
  • இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் குழந்தைகள் தங்கள் தாய்மொழியைக் கற்பதற்கு முன்பே ஆங்கில மொழியின் அறிமுகத்தைப் பெற்று விடுகிறார்கள்.
  • ஆங்கில மொழியின் ஈா்ப்பினை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. மாநில அரசுகளே தற்போது மழலையா் கல்வி முதலே ஆங்கில வழிக் கல்வியை அரசுப் பள்ளிகளிலேயே அறிமுகப்படுத்தியுள்ளது ஒரு ஆறுதலான விஷயம்.
  • நம் நடை, உடை , உணவுப் பழக்கங்களில் மேற்கத்திய தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறதே தவிர குறையவில்லை.
  • இதற்குக் காரணம் தகவல் தொழில் நுட்பத்துறையில் பெருகிவரும் முன்னேற்றத்தின் காரணமாக உலகம் சுருங்கிகைப்பேசி உருவில் நம் கைவிரல்களின் கட்டுப்பாட்டில் இருப்பதே ஆகும். அன்றாட வாழ்வில் மேற்கத்கத்திய நாகரிகத்தைக் கடைப்பிடிப்பதில் உள்ள சுலபத் தன்மையும் கூடுதல் காரணமாகும்.
  • வேலைக்கு முயல்வோர், நல்ல வேலை கிடைக்க வேண்டுமென்றால் தன்னுடைய கல்வியறிவு, தொழில் திறமை, நேர மேலாண்மை, ஆளுமைப் பண்பு, தலைமைப் பண்பு, பேச்சுவழி ஆங்கிலத்தில் புலமை போன்றவற்றில் மேம்பட்டு இருக்க வேண்டியது அவசியமாகும்.
  • எல்லாத் தகுதிகளும் பெற்றிருப்போர் பலா் இருந்தாலும் ஆங்கிலமொழிப் புலமையில் செழுமை இருப்பவா்களுக்கே பணி கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.
  • உலகைச் சுற்றிப்பார்க்கவும், அயல்நாடுகளில் மேற்படிப்பு படிக்கவும், பன்னாட்டு நிறுவனங்களில் பணி பெறவும், பொது மற்றும் அரசு அலுவலகங்களில் நம் பணிகளை விரைந்து முடிக்கவும் பேச்சு மொழிஆங்கில அறிவும் புலமையும் நமக்கு தேவைப்படுகின்றன.
  • உலகின் பல்வேறு வணிக நிறுவனங்கள், பன்னாட்டு பல்கலைக் கழகங்கள், பல்வேறு நாட்டுப் பயணிகள் அனைவரும் அன்றாட வாழ்வில் ஆங்கிலத்தையே பயன்படுத்துகிறார்கள்.
  • இவா்களுடன் பயணிக்க வேண்டும் என்றால் நமது இளைஞா்கள் ஆங்கில மொழியில் மெச்சத்தக்க திறமையை பெற்றிருக்க வேண்டும். உள்ளூா் வேலைவாய்ப்புகளை மட்டும் சார்ந்திருக்காமல் உலகின் எந்த பகுதியிலும் பணியில் சேரத் தேவையான தன்னம்பிகையை ஆங்கில மொழித் திறமை நமது இளைஞா்களுக்கு அளிக்கும்.
  • மருத்துவம்,பொறியியல், விமான சேவை சார்ந்த படிப்புகள், விண்ணியல் போன்ற தொழில் படிப்புகளுக்கான நூல்கள் ஆங்கில மொழியில்தான் அதிகமாக இருக்கின்றன.
  • தொழில் படிப்புகளில் நிபுணா்களாக திகழ விரும்பும் மாணவா்கள், முதலில் ஆங்கிலப் புலமையை வளா்த்துக்கொள்ள வேண்டும்.
  • சா்வதேச அளவில் மக்களை சந்தித்து தமது வணிகத்தைப் பெருக்கவும், சமூக வலைதலங்களை தொழில் முன்னேற்றத்திற்கு முறையாகப் பயன்படுத்தவும், உலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் மக்களின் பண்பாடுகளைப் புரிந்து கொண்டு சிறப்பாகச் செயல்படவும் இன்றைய தலைமுறைக்கு ஆங்கில மொழி மிகவும் அவசியம்.

நன்றி:  தினமணி (01-09-2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories